தேவையானவை:
முருங்கைத்தளிர் – அரை கப்,
கோதுமை மாவு – ஒரு கப்,
சர்க்கரை, உப்பு – தேவைக்கேற்ப,
பச்சைமிளகாய் விழுது – கால் டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது,
சீரகத்தூள் – சிறிது,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
நெய் – சிறிது.
செய்முறை:
கோதுமை மாவுடன் பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், பெருங்காயம், உப்பு, முருங்கைத் தளிர் ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். இதை திரட்டி, தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய்விட்டு சுட்டு எடுக்க வேண்டும்.