இன்றைய மனிதனின் வாழ்க்கையில் மங்காத இடத்தைப் பிடித்துவிட்டன. போதைப் பொருட்களாகிய லாஹிரி வஸ்துகள், இன்றைய மனிதனுக்கு வருமானமும் அதிகம், பிரச்சனைகளும் அதிகம். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கெட்ட பழக்கங்கள் அவனது வாழ்வில் இடம் பிடித்து விட்டன குறிப்பாக மது. இன்று, குடிக்காதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இள வயதிலேயே பெரிய கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு இத்தகைய செயல்களுக்கென தனியான சலுகைகள் கூட வழங்கப்படுகின்றது. பல பெண்கள் நகரங்களில் பெரிய நட்சத்திர ஓட்டல்களில் குடித்து கும்மாளம் போடுவதும் அன்றாடம் நாளிதழ்களில் வரத் தான் செய்கின்றது.
இது ஒரு புறம் இருக்க பாக்கு என்ற ஒன்றும் இப்பொழுது பெருமளவு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. என்னதான் அரசாங்கம் பான்பராக்கை ஒழித்தாலும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனைப் போல அரசாங்கத்தின் தடைகளை மீறி பல தயாரிப்புகள் இன்னும் நம்மைக் கடைகளில் ஜிலுஜிலுவென வண்ணமயமாக வரவேற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. பல இளைஞர்கள் 22-23 வயதுகளில் தங்களையும் அறியாமல் மதுவிலும் மோசமான இந்த புகையிலை கலந்த பாக்குகளுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கைகளை இந்த போதை வஸ்துகளுக்கு தங்களை தன் வாழ்க்கையை விலை பேசி விட்டனர் நிலைமை தான் என்ன? இவர்களால் இதிலிருந்து மீள முடியுமா? இந்த புகையிலையால் ஏற்பட்ட தீங்குகள் மறையுமா?
அரசாங்கம் எவ்வளவு தான் தடைகள் செய்தாலும் அன்று முதல் இன்று வரை புகைப்பவர்கள் எத்தனை பேர், சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்னர் – கல்லூரிக் காலங்களில் புகைக்க ஆரம்பித்தவர்கள் இன்றளவு தெருவோரங்களிலும் திரை மறைவுகளிலும் புகைக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த புகை தந்த சளி, இருமல், தீராத புகைச்சல், குறையாத சளி, நிறம் மாறிய நகங்கள், உலர்ந்த உதடுகள், மற்றும் தொடர் இருமல்கள்.
அக்காலத்தில் ஒருவன் கெட்டு அழிந்துவிட்டான் என்றால் அவன் மது, மாது, சூது, என்று இருக்கிறான் என்பார்கள். ஆனால் இன்று மூலைக்கு மூலை எண்ணற்ற பெயர் தெரியாத லாஹிரி வஸ்துகள் விதம் விதமாக ரூ. 3 லிருந்து ரூ. 1000 வரை விற்பனையாகி வந்து பலவற்றை எப்படி உபயோகிப்பது அவற்றின் பெயர் தான் என்ன என்பதே தெரியவில்லை.
இத்தகைய பழக்கம் உடையவர்கள் இப்பழக்கங்களிலிருந்து உடனடியாக வெளிவர வேண்டும். இல்லையேல் அப்பழக்கங்களிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும். அவ்வாறு வெளிவர முடியாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு இவற்றால் ஏற்பட்ட தீமைகளை சரி செய்யும் விதத்தில் தங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். தங்கள் உடல் உறுப்புக்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இவற்றிற்கு ஆயுர்வேதத்தில் எண்ணற்ற எளிய வழிகள் உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.