அழகா இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை, ஒரு ஆய்வு முடிவு தந்திருக்கிறது. அந்த ஆய்வு முடிவு நமக்கு ஆச்சர்யத்தை தருவதாகவும் இருக்கிறது.
ஜெர்மனி நாட்டின் ஜெனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மனநல ஆய்வாளர்கள் ஹோல்ஜர் வீஸ், கரோலின் ஆல்ட்மேன் மற்றும் ஸ்டெபான் ஸ்க்வெய்னபெர்ஜர் ஆகியோர் தலைமையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இதில்,அழகான முகங்களை கொண்டவர்களைவிட அழகற்ற முகங்களை கொண்டவர்களே அதிகளவில் நினைவில் இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டது ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதி பேர் வசீகர முகத்துடனும், மீதமுள்ள பாதி பேர் வசீகரம் குறைந்த முகத்துடனும் இருந்தனர்.
எனினும், அனைவரும் தாங்கள் தனித்துவமான தோற்றத்தை கொண்டவர்கள் என்று கருதினர். அழகான நபர்களைவிட அழகற்ற முகம் கொண்டவர்களின் புகைப்படங்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டன.
எனினும், ஏஞ்சலினா ஜுலீ போன்ற தனித்தன்மை வாய்ந்த முக அமைப்பை கொண்டவர்களை மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்கின்றனர். மேலும், உணர்வு ரீதியிலான பாதிப்பு காரணமாக, அழகான முகத்தை கொண்டவர்களை நினைவில் வைப்பதற்கு கடினமாக உள்ளது ஒன்றும் தெரிய வந்துள்ளது. இதற்கு ஆதாரமாக விஞ்ஞானிகள் தங்களது ஆய்வில் பயன்படுத்திய ஈ.ஈ.ஜி. பதிவுகள் அதனை வெளிப்படுத்தும் விதமான அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதில் மூளையின் மின் செயல்பாடுகள் அதற்கேற்ப செயல்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
எஸ்செக்ஸ் பல்கலைக் கழக்த்தின் சமூக மற்றும் பொருளாதார ஆய்வு அமைப்பின் ஆராய்ச்சியாளரான கண்டி நைஸ் கூறுகையில், நல்ல தோற்றம் கொண்டவர்கள் தங்கள் அழகினால், ஆதாயம் பெறுகின்றனர். முக வசீகரம் ஆனது ஒருவரது தொழிலில் அவரது கவுரவம் குறித்த தீர்மானத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
அழகா இருந்தா எப்படி பெருமைப்படுறீங்களோ அதே மாதிரி அழகு இல்லையென்றாலும் கவலைப்படாதீங்க, என்று சொல்வதாக தென்படுகிறது இந்த ஆய்வு.