குளிக்கும்போது இதெல்லாம் செய்யக்கூடாது

Spread the love

பொதுவாக தண்ணீரில் குளிப்பது மனிதர்கள் கூடவே பிறந்த ஒரு உணர்வு. காலம் போக போக குளிப்பது ஒரு புனித சடங்காகவே மாறி விட்டது. பின் வெறும் தண்ணீரில் முங்கி எழாமல், அழுக்கு தேய்த்து குளிக்க சோப்பு, ஷாம்பு இவையனைத்தும் வந்துவிட்டது…

நூற்றில் 90 பேர் காலை குளியலை வழக்கமாக வைத்துள்ளனர். குளியல்  குழிபெயர்தல் என மற்றொறு வார்த்தை உள்ளது.. காரணம்,  பொதுவாக நாம் குளிக்கும் போது முதலில் தலையில் தான் தண்ணீரை மொண்டு ஊற்றிக்கொள்வோம், இது அனைத்து குளியலுக்கும் பொருந்தும்.  ஆனால் அப்படி குளிப்பது மிகவும் கெடுதல். முதலில் கால் பாதத்தில் இருந்து ஆரம்பித்து கடைசியாகத்தான் தலைக்கு தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்வதனால் உடலில் இருக்கும் உஷ்ணம் பாதத்தில் இருந்து மேலேறி கடைசியாக உச்சந்தலையில் இருந்து வெளியேறும்… இதற்கு தான் குளிப்பெயர்தல் என சொல்வார்கள்.  ஆனால் வழக்கமான குளியலால் உஷ்ணம் உடலிலேயே தங்கிவிடும்….

உண்மையான சரும பாதுகாப்பே எண்ணெய் குளியலில் மட்டும்தான் உள்ளது. எண்ணெய் குளியலின் மேஜர் advantage என்ன என்று பார்த்தால்? உடல் சூட்டை தனித்து, சரும அழகையும், போஷாக்கையும் கூட்டுகின்றது. இள நரையையும் பொடுகையும் விரட்டி தலை முடியை கருமையாக, நீளமாக வளர செய்து. எண்ணெய் குளியல் கண்ணெரிச்சலையும் குறைக்கும்.

பொதுவாக குளிப்பதற்கு, வெதுவெதுப்பான இதமான தண்ணீர் சிறந்தது.  வெயில் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு, உடம்பிற்கு சுறுசுறுப்பை தரும்.  தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு வெதுவெதுப்பான சுடு தண்ணீர் குளியல் நல்ல தூக்கத்தை தரும்.

அதிகப்படியான குளிர்ச்சியும், சூடும் இருக்கின்ற தண்ணீரில் குளிக்கவே கூடாது. வெயில் காலத்தில் சுடுதண்ணீரில் குளித்தால் அதிகப்படியான பித்தத்தை உண்டாக்கி விடும். தினமும் இரண்டு வேலை குளிப்பவர்கள், காலையில் வெறும் தண்ணீரிலும், மாலை அல்லது இரவு வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் குளிப்பது நல்லது. இதனால் மனதிற்கு நிம்மதி கிடைத்து நல்ல தூக்கம் வரும்.

முக்கியமாக, சாப்பிடுவதற்கு முன்னால் தான் எப்பொழுதுமேகுளிக்க வேண்டும். இதைமிகவும் கவனமுடன் கடைபிடிக்கவும். ஏனென்றால்? சாப்பிடுவதற்கு பின்  குளிப்பதனால், செரிமான பிரச்சனை ஏற்பட்டு பித்தமும் சேரும். அதோடு,  குளிப்பதற்கு பின் நீண்டநேரம் ஈர துணியோடு இருக்கக்கூடாது.


Spread the love
error: Content is protected !!