மன அழுத்தத்துக்கு மாமருந்து!

Spread the love

வாழ்க்கைத் தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சி துரத்தும் வாலிபப் பருவத்தில் இருக்கிற சிலர் கூட படுக்கையறையில் சோம்பேறிகளாக இருப்பார்கள்.
மனசில் ஆசை கூடு கட்டியிருந்தாலும்… உடம்பின் அதிகப்படியான களைப்பின் காரணமாக ‘விட்டால் ஏழு ராத்திரிக்குத் தூங்குவேன்’ என்று சொல்லும் அலுப்பில் இருப்பார்கள். அதுவும் இன்றைய நாட்களில் கம்ப்யூட்டர் பணிக்குச் செல்லும் பலர் இந்த மாதிரியான படுக்கையறைப் பிரச்சனைக்கு நிறைய உள்ளாகிறார்கள். இப்படி படுக்கையறை சோம்பேறியாக இருப்பவர்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்கள் தான். இதற்கு காரணம்… ஆண்களால் மன அழுத்தத்தை மீறி செக்ஸில் ஈடுபட முடியாது என்பது தான். தொழில், பணிச் சூழல் போன்ற காரணங்களால் படுக்கையறையில் செக்ஸில் ஈடுபடுவதில் சுறுசுறுப்பாக செயல்பட இவர்கள் சில ஆலோசனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு, அதற்கு செயல் வடிவமும் கொடுக்க வேண்டும்.


உழைத்து, களைத்து மிகுந்த அலுப்புடன் வீடு திரும்பி… வீட்டு படுக்கையில் தொப் என்று விழும் எந்த ஆணால் படுக்கையறையில் சுறுசுறுப்பாக இருக்க முடியும்? இவர்களுக்கு ஓர் எளிய ஆலோசனை என்னவெனில்… உழைத்து, களைத்து மிகுந்த அலுப்புடன் வீடு திரும்பும் ராத்திரியில் தான் செக்ஸ் இன்பத்தை பெற வேண்டும் எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு நாளின் இறுதிப் பகுதியில் (ராத்திரியில்) செக்ஸ் இன்பத்தை பெற முயற்சிக்காமல் ஒரு நாளின் துவக்கத்திலேயே வைத்துக் கொள்ளலாம். இது அந்த நாளை மிகுந்த உற்சாகத்துடன் துவக்குவதற்கும் கை கொடுக்கும்.
நேரம் கிடைப்பது அரிதாக இருப்பவர்கள்… தங்களில் கடுமையான நேர நெருக்கடியிலும் சாப்பிட, கடைக்குச் செல்ல, நண்பர்களைச் சந்திக்க, அத்தியாவசியமான வேலைகளை செய்ய நேரம் ஒதுக்கிக் கொள்வது போல… செக்ஸ் இன்பத்தைப் பெறவும் முன் கூட்டியே நேரத்தை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம்.


இன்னொரு செய்தி… வேலை பளுவால், கிடுக்கிப் போட்டு முறுக்கி எடுக்கும் பணிச் சூழலால் ஏகத்துக்கு மன அழுத்தத்துக்கு அடிக்கடி உள்ளாகுபவர்களுக்கு செக்ஸ் இன்பமே ஒரு விதமான மருந்தாக அமையும் என்பது தான் அந்தச் செய்தி!

ஆயுர்வேதம்.காம்

To Buy Our Herbal Products >>>


Spread the love