இயற்கை உபாதைகளை அடக்கி வைக்காதீர்கள்

Spread the love

குமட்டல், பசி, தாகம், பால் உணர்வுகள் மனித உடலில் காணப்படுகின்றன. இந்த உணர்வுகள் உடல் ஆரோக்கியத்தினைக் காக்க அவசியமான ஒன்று. இவை உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்த, கழிவை  அகற்ற, மூச்சு விடுவதை ஒழுங்குபடுத்த, உடலில் உள்ள நீர்ச் சத்தை சரிசெய்ய, உணவினை வயிற்றுக்குள் கொண்டு செல்ல அவசியமானவையாகும்.

இந்த உணர்வுகளை சித்தர்கள் பதினான்கு வேகங்கள் எனக் கூறியுள்ளனர்.

உடலில் இயற்கையாக உண்டாகும் பதினான்கு வேகங்கள் என்னென்ன?

வாதம், தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, நீர் வேட்கை, இருமல், இளைப்பு, தூக்கம், வாந்தி, கண்ணீர், சுக்கிலம், சுவாசம் என்பனவாகும்.

இயற்கையாக தோன்றும் இந்த பதினான்கு வேகங்களை நாம் அடக்குதல் கூடாது. அடக்குவதால் உட்லின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு பலவித நோய் அறிகுறிகளுக்கு காரணமாகின்றன என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

வாதம்

அபானன் என்ற வாயுவை தடை செய்வதால் மார்பு நோய், வாயு குன்மம், குடல் வாதம், உடல் முழுவதும் குத்தல், குடைச்சல் தோன்றும். மலம், சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். பசி, மந்தம், பசி உணர்வு குறைவு ஏற்படும்.

தும்மல்

மூக்கில் உள்ள உணர் நரம்புகளின் தூண்டலினால் ஏற்படுவது தும்மல். தும்மலைத் த்டை செய்வதால், தலைவலி அதிகரிக்கும், முகம் கோணல், இழுத்தல் ஏற்படும். இடுப்பில் வாயு தொல்லை ஏற்படும்.

சிறுநீர்

சிறுநீர் வெளியேறுவதைத் தடை செய்வதால் நீரடைப்பு, நீர்த்தாரைப் புண், ஆண் குறி சோர்வு மாறும் குத்தல் உணர்வு ஏற்படும்.

மலம்

மலத்தை அடக்க ஜலதோஷம், முழ்ங்கால் வலி, தலை வலி மற்றும் சோர்வு ஏற்படும்.

பசி மற்றும் நீர்வேட்கை

உடலும் உள்ளமும் உள்ளுறுப்புகள் இயங்கும் திறன் பாதிக்கப்படும். வயிற்று வலி, உடல் இளைப்பு, முகம் சோர்வடைதல், மூட்டுகளில் வலி, சத்துக் குறைவு ஏற்படும்.

காசம் மற்றும் இளைப்பு

மார்பு நோய்கள், குடல் புண், மூர்ச்சை ஏற்படும்.

தூக்கம்.

தூக்கத்தைத் தடை செய்வதால் தலை கனமாகக் காணப்படும். கண்கள் சிவந்து காணப்படும். செவிடு, அரைப் பேச்சு ஏற்படும்.

வாந்தி

உடலில் தடிப்புகள், நமைச்சல், பாண்டு, கண் நோய்கள், சுரம் ஏற்படும்.

விழி நீர் அல்லது கண்ணீர்

பீனிசம், கண் நோய் ஏற்படும்.

சுக்கிலம்

சுக்கிலத்தைத் தடை செய்வதால் சுரம், நீர்க்கட்டு, கை, கால்களில், மூட்டுகளில் வலி, மாரடைப்பு ஏற்படலாம்.

சுவாசம்

சுவாசத்தை அடக்கினால் இருமல், வயிற்றுப் பொருமல், சுரம், உடல் மெலிதல், சூலை நோய்கள் ஏற்படும்.


Spread the love