இனிப்பு உணவுகள் தரும் நோய்கள்

Spread the love

இனிப்பு என்று இங்கு நாம் கூறுவது வெள்ளைச் சீனி மற்றும் தூய்மை செய்யப்பட்ட சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட உணவுகளில் உள்ள இனிப்பையும் தான் கூறுகிறோம். சர்க்கரை என்பது ஒரு வகை கார்போஹைட்ரேட் உணவு தான். அரிசி, கோதுமை, சோளம் முதலிய உணவுப் பொருட்களில் இருப்பதும் கார்போ ஹைட்ரேட் தான். தமிழில் மாவுப் பொருட்கள் என்று கார்போ ஹைட்ரேட்டை அழைப்பர். கர்போ ஹைட்ரேட் இல்லாத சைவ உணவே உலகில் இல்லை எனலாம். அதுபோல மாவுப் பொருட்களிலும் சர்க்கரை அதிகம் உள்ளது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போ ஹைட்ரேட் அல்லது சர்க்கரைச் சத்துக்கள் இருப்பதை தவிர்க்க இயலாது. மேற்கூறிய சத்து உள்ள உணவுகளை உண்ணும் பொழுது, அவை செரிமான அடைந்து சர்க்கரையாக மாற்றம் பெறுகிறது, எல்லா வகை மாவுப் பொருட்கள், சர்க்கரைகளும் உடலில் வேதி மாற்றம் அடைந்து குளுகோஸ் ஆக உருவாகிறது. மூளையின் தனித் தன்மையுள்ள எரிபொருள் குளுகோஸ் ஒன்று தான் என்று கூறலாம்.

சிறு நீரகக் கற்கள் உருவாக சர்க்கரை காரணமாகிறது

வெள்ளைச் சர்க்கரை, சர்க்கரை தொடர்புள்ள சோளப்பாகு, அதிகளவு ஸ்பிரெக்டோஸ் உள்ள சோளப்பாகும், கரும்புச் சாறு ஆகியவை சர்க்கரையைப் போல சிறு நீரகத்தில் கற்கள் தோன்ற, வளர்ச்சியடைய சிறுநீரில் கால்சியம் அடர்ந்து விடுகிறது. இதனால் சிறுநீரகக் கற்கள் விரைவாக வளர்ந்து விட ஆரம்பிக்கும்.

கரும்புச் சாறு வெள்ளைச் சர்க்கரையாக, சர்க்கரை ஆலைகளில் கால் நடை எலும்புகளை பயன்படுத்தி, சல்பர் டை ஆக்ஸைடு கரும்புச் சாற்றை கொதிக்க வைக்கும் போது குமிழ்களாக செலுத்தி அந்த இரசாயனம் பிரவுன் அல்லது டார்க் மஞ்சள் கலரை பிளீச் செய்து வெள்ளை வெளேர் சர்க்கரையாக கிடைக்கிறது.

சுத்திரகரிப்பு சர்க்கரையில் மேலும் சில ரசாயனப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. ஆக சர்க்கரை ஆலையில் அரைக்கப்படும் கரும்புச் சாறு மூலம் கிடைக்கும் வெள்ளைச் சீனி முழு கெமிக்கல் கலவை தான்.

உடலில் உள்ள வைட்டமின் H சத்துக்களை அழிக்கிறது

தையாமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் H குறிப்பாக வைட்டமின் H1 செரிமானம் நன்கு செயல்படவும், சர்க்கரை, மாவுப் பொருட்களாகிய கார்போ ஹைட்ரேட் உணவுகளை உடலில் உட்கிரகிக்க அவசியமான ஒன்று. வெள்ளைச் சர்க்கரையில் மேற்கூறிய வைட்டமின்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால் வெள்ளைச் சர்க்கரை உணவில் பயன்படுத்தப்படும் பொழுது, உடலுக்குத் தேவையான வைட்டமின் H சத்துக்களை உடலில் நரம்பு, தசை, ஈரல், சிறுநீரகம், வயிறு, இதயம் சருமம், கபங்கள் மற்றும் இரத்தம் போன்றவற்றில் இருந்து திருடிக் கொள்ள நேரிடுகிறது.

இதனால், உடலில் வைட்டமின் H சத்துக் குறைவை தோற்றூவிக்கிறது. வைட்டமின் H சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை நாம் சாப்பிட்டு ஈடுகட்டாவிட்டால் வைட்ட்மின் H சத்துக் குறைவு மிகப்பெரிய சிக்கலைக் கொண்டு வந்து விடும். அதிக அளவு வெள்ளைச் சர்க்கரை சாப்பிட, சாப்பிட வைட்டமின் H சத்துகளும் திருடப்பட்டுக் கொண்டே இருக்கும். இதன் மூலம் நாம் நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சார்ந்த கோளாறுகள், செரிமானக் கோளாறுகள், உடல் அசதி, ;பார்வைத் திறன் குறைதல், இரத்தச் சோகை, இதயம் சார்ந்த பிரச்சனைகள், தசை சார்ந்த பிரச்சனைகள், சரும வியாதிகள் என பல நோய்களுக்கும் சிக்கல்களுக்கும் காரணமாகி விடுகிறோம். மேற்கூறிய நோய்களின் தாக்கம் சுமார் 90 சதவீத அளவு குறைய வேண்டுமெனில், நாம் வெள்ளைச் சர்க்கரைக்கு விடை கொடுத்து விடுவதால் மட்டுமே இயலும். இயற்கையாகவே விளையும் பழங்கள், காய்கறிகள் மூலம் நீங்கள் கார்போ ஹைட்ரேட் வகை உணவுகளை உட்கொள்ளும் பொழுது, தையாமின் சத்துக் குறைவு  ஏற்படுவதில்லை. உணவில் இருக்கும் சர்க்கரை அல்லது மாவுப் பொருட்களை தையாமின் எளிதில் உட்கிரகித்துக் கொள்ளும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.

இதயத்தைத் தாக்கும் வெள்ளைச் சர்க்கரை

அதிக அளவு வெள்ளைச் சர்க்கரை உணவில் எடுத்துக் கொள்வதற்கும் இதயம் சார்ந்த செயல் இழப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. வெள்ளைச் சர்க்கரை அதிகம் உட்கொள்வதின் காரணத்தினால் ஏற்படும் தயாமின் சத்துக் குறைபாடு காரணமாக இதயத்தில் இயங்கும் இதயத் தசைகளின் செயல் வேகத்தைக் குறைத்து இதயத் தாக்குதலை செய்கிறது.

வெள்ளைச் சர்க்கரை உடலின் ஆற்றலைக் குறைக்கிறது.

சர்க்கரையானது நாம் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள, உடல் உற்சாகம் சுறுசுறுப்பு ஆற்றல் அதிகரிக்கிறது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால், அது தவறான கருத்து. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. சர்க்கரையில் தயாமின் சத்து இருப்பதில்லை. அதாவது வைட்டமின் பி1 இருப்பதில்லை என்ற காரணத்தினால் கார்போ ஹைட்ரேட் வளர்சிதை மாற்றச் செயலையும் நிறைவு செய்ய அனுமதிப்பதில்லை என்பதுடன் ஆற்றலும் வெளிப்படுத்த தவறி விடுகிறது. இதனால் களைப்பும், ஆற்றல் குறைவும் தான் நேரிடுகிறது. இரண்டாவது காரணமாக, சர்க்கரையின் உயர்ந்த அளவானது குறைவான சர்க்கரை அளவிலிருந்து  தொடர்கிறது. இச்செயலானது இரத்தச் சர்க்கரை அளவு திடீரென உயரும் பொழுது, அதிக அளவு இன்சுலின் சுரப்பி வெளியிடுவதனால், இரத்தச் சர்க்கரை அளவு நார்மலுக்கும் கீழே இறங்கி விடுகிறது. இதனைத் தான் கிளைசீமியா தாக்குதல் என்று கூறுவார்கள். இதன் அறிகுறிகளாக களைப்பு, கிறுகிறுப்பு, மன அழுத்தம், உடல் சோர்வு, எரிச்சல், வாந்தி மற்றும் பல பிரச்சனைகளைத் தருகிறது.

வெள்ளைச் சர்க்கரை ஏற்படுத்தும் எலும்புச் சிதைவு

வெள்ளைச் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, இரத்தத்தில் உள்ள கால்சியம் அல்லது பாஸ்பரஸின் விகிதத்தை மாற்றி விடுகிறது. அதாவது கால்சியம் அதிகரித்து பாஸ்பரஸ் அளவு குறைந்து காணப்படும். பொதுவாக நார்மலாக இருக்கும் பொழுது, உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் விகிதமானது 2.5க்கு ஒன்று என்ற அளவில் இருப்பது சிறந்த ஒன்று. ஆனால், கால்சியம் அளவானது பாஸ்பரஸை விட 2.5 மடங்கு அதிகம் உள்ள பொழுது, உடலில் கால்சியமானது முழுவதும் உறிஞ்சவோ, பயன்படுத்தவோ இயலாது. கால்சியமானது சிறுநீர் வழியாக வெளியேறி விடும். அல்லது உடலில் மிருதுவான திசுக்களில் கடினமான ஒன்றாக சேர்ந்து விடும். அதனால் மனித உடலானது மிகச் சரியான அளவில் கால்சியம் வைத்திருப்பது அவசியமாகிறது. ஆனால், சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, கால்சியம் சத்தானது திறமையாக உறிஞ்சப்படுவதில்லை என்பதனால் கால்சியம் பற்றாக்குறை உடலில் ஏற்பட்டு ரிக்கெட்ஸ் என்றும் நோய் ஏற்பட காரணமாகிறது.

மேலும், சர்க்கரையானது தசை வளர்சிதை மாற்றத்திற்கும், கலோரி எரித்தலுக்கும் கால்சியம் தேவைப்படுவதால், கால்சியம் பற்றாகுறை காணப்பட்டாலும், எலும்பில் இருந்து கால்சியத்தை தருகிறது. இவ்வாறு உடலில் இருந்து கால்சியம் எடுத்துக் கொள்ளுவதால், எலும்பு மற்றும் பற்களின் பலம் குறைகிறது. ஓஸ்டிய்யோ லேராசிஸ் என்னும் எலும்புத் தேய்மானம் நோய் ஏற்படுகிறது.

கால்சியம் பற்றாக்குரையின் காரணமாக ஏற்படும் ரிக்கெட்ஸ் நோயும் அதிகியளவு சர்க்கரை உணவில் சேர்த்துக் கொள்வதால் காரணமாகி விடுகிறது.

வெள்ளைச் சர்க்கரை பற்சிதைவைத் தோற்றுவிக்கிறது

அளவுக்கு மீறிய வெள்ளைச் சர்க்கரையை உண்பதால், இனிப்பான அந்த உணவுப் பொருட்கள், பற்களுக்கிடையே சிக்கி, ஒரு குறிப்பிட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி பற்களின் எனாமலை அதிகரிக்கும் அமிலத்தை உற்பத்திச் செய்கிறது. பல் ஈறுகளில் வலி, அழற்சியைத் தரும் பயோரியா என்ற பல் நோயானது அதிக அளவு சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படுகிறது.

வெள்ளைச் சர்க்கரை மலச்சிக்கலை தோற்றுவிக்கிறது

சர்க்கரையில் நார்ச் சத்து எதுவும் இல்லை என்பதால் குடல் பகுதி இயக்கங்கள் சீராக இயங்குவது சற்றே சிரமம் என்பதுடன் மலச்சிக்கல் தோன்றவும் காரணமாக அமைகிறது.


Spread the love
error: Content is protected !!