நல்ல, முழுமையான இரவு உணவை சாப்பிட்ட பிறகும், பலருக்கு, குறிப்பாக அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு நடு இரவில் திடீரென்று பசி எடுக்கும். அடக்க முடியாத உணவு ஆசையால் உந்தப்பட்டு, எழுந்து வந்து ஃபிரிட்ஜை திறந்து கிடைக்கும் இனிப்புகளை வாயில் போட்டுக் கொள்கின்றனர். நாளடைவில் இது தவிர்க்க முடியாத பழக்கமாகி விடுகிறது. சாப்பிட சாப்பிட பசி அடங்காமல் போகிறது. இதனால் கலோரிகள் ஏறி உடல் பருமன் மேலும் கூடும்.
இதை தவிர்க்க சில வழிகள்
•இரவு ‘ஸ்நாக்காக’ இனிப்பை நாடாமல் வெட்டி வைத்த பச்சை காய்கறிகளை உண்ணவும். கேரட், பீட்ரூட் போன்றவைகள் நல்லது.
•சாக்லேட்டை தவிர்த்து பழங்களை சாப்பிடுங்கள். ஆப்பிள், ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்கள் உங்கள் ‘இனிப்பு வெறியை’ குறைக்கும் வாழைப்பழமும் நல்லது.
•ஒரு கப் பால் குடியுங்கள்.
•மில்க்ஷேக் ஒரு கப் குடிக்கலாம்.
•வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டைச் சுற்றி நடக்கவும்.
•என்ன உணவு ஆவல் இருந்தாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ், ப்ரென்ச் சிப்ஸை தொடாதீர்கள்.
•மனதை திசை திருப்புங்கள். உணவைப் பற்றி எண்ணாமல், உங்கள் மொபைல் ஃபோனில் சில விளையாட்டுகளை செய்யலாம். ‘சுடோகு’ செய்யலாம்.
உடல் பருமன் அதிகம உள்ளவர்கள் தங்கள் உணவில் கொழுப்பை குறைத்தால் மட்டும் போதாது. சர்க்கரையை குறைக்க வேண்டும். அதிக அளவு சர்க்கரை இரத்தத்தில் லிபோபுரோட்டீனை அதிகரிக்கிறது. உணவில் 70 கிராம் சர்க்கரை அதிகம் உண்டால் கொழுப்பு 70 மி.கி. லிருந்து 98 மில்லி கிராம் வரை உயருகிறது. தவிர சர்க்கரை உண்பதால் அதிக அளவு இன்சுலீன் சுரக்கும். அடிபோஸ் திசுக்களிலிருந்து (Adipose) கொழுப்பு பிரிக்கப்பட்டு ரத்தத்தில் கலக்கும். கொழுப்புகள் ரத்த நாளத்தில் படிந்து நாளங்களில் அடைப்பு ஏற்படும்.