செரிமான ஆரோக்கியம் ஆண்களுக்கு அவசியம்

Spread the love

நமது பெற்றோர்கள் நாம் சிறு குழந்தைகளாக இருக்கும் பொழுது கூறிய ஒரு அறிவுரை என்னவென்றால், நேரத்துடன் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் வளர்ந்த பின்பு, ஒரு வேலைக்கு என்று சேர்ந்து விட்ட பின்பு, ஆபீஸில் உள்ள சாப்பாட்டு நேரத்தை மாற்றி விடுகிறோம். அல்லது மாற்றி விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆபீஸிலுள்ள வேலைகள், மேனேஜருடன் மீட்டிங், வேறு ஒரு வேலையை அவசரம் என்று இழுத்துப் போட்டுச் செய்யும் பொழுது நாம் சாப்பிடும் நேரத்தை, நேரம் தவறிச் செய்ய வேண்டியதாகிறது.

நெஞ்செரிச்சல், வயிற்றில் ஏற்படும் அமிலச் சுரப்பு, அல்சர், மைக்ரேன் என்று கூறப்படும் ஒரு பக்கத் தலைவலி, குடல் எரிச்சல் போன்ற பல சிக்கல்களுடன் மருத்துவரைச் சந்திக்க வருகிறார்கள். மேலும், இரவில் பணிபுரிபவர்களுக்கு அமிலச் சுரப்பு அதிகரித்து, உடல் அமிலம் சார்ந்த செரிமானக் கோளாறுகளில் சிக்கி விடுகின்றனர்.

புகைப் பிடித்தல், மது அருந்துதல் மற்ற தீய பழக்கங்கள் அவர்களின் வளர்சிதை மாற்றச் செயல்களில் தீமை விளைவிக்கிறது, சமச்சீரற்ற கொழுப்பு படிந்து இதயக் குழாயை அடைத்து விடக் காரணமாகிறது. பெரும்பான்மையான சமயங்களில் மன அழுத்தம், அயற்சி அதிகரித்து  பசி உணர்வினை குறைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும் வைட்டமின் பி12, டி பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. ஆண்களில் ஹார்மோன்பிரச்சினைகளால் தைராய்டு சுரப்புக் கோளாறுகள் தாக்குகின்றன.


Spread the love