அஜீரணத்தை போக்க

Spread the love

ஜீரண சக்தி பெருக

உணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர ஜீரணமாக வேண்டும். வாழ்க்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். உணவு, நல்லுறக்கம், ஓழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது. அஜீரண அறிகுறிகள் – வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம். உணவை சத்தாக மாற்றும் சத்தியை ஜாடராக்னி‘ (ஜடரம் – வயிறு, அக்னி – நெருப்பு) என்கிறது ஆயுர்வேதம். இந்த சூடுஉணவு ஜீரணமாக உதவும். கடுகு, மிளகு, கொத்தமல்லி, மிளகாய் முதலான பொருட்கள் இந்த “சூட்டை” குறைய விடுவதில்லை.

அதிக உணவை உண்ணுதல், காலம் தவறி உண்ணுதல் இவற்றுக்கெல்லாம் முதலுதவி வெந்நீர்குடித்தல். கனமான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் / நீர் அருந்துவதை தவிர்த்து சுடுநீர் குடிக்கவும்.

வயிறுமுட்ட உண்ணுவதை தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். முதல் கவனத்தை நெய்யுடன் கலந்து உண்ணவும். நெய் ஜாடராக்கினியை தூண்டும். நெய்யில்லா உணவு ஜீரணத்திற்கு நல்லதல்ல.

வயது ஏற ஏற நமது ஜீரண மண்டலத்தில் செயல்பாடு குறைகிறது என்பதனை நாம் அனேகமாக மறந்து போகிறோம். தமிழில் ஒரு பழமொழி உண்டு அது “கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கின்ற வயது இளவயது” என்பது. இது எதைக் குறிக்கின்றது என்றால் சிறியவர்களுக்கு எந்த கடினமான உணவும் எளிதாக ஜீரணமாகிவிடும் என்பது. நாம் சிறு குழந்தைகளாக இருக்கும் பொழுது உண்ட உணவு எளிதாக ஜீரணமாகும். அதே உணவை 40 வயதிற்கு மேல் உண்டோமானால் அது ஜீரணமாக கஷ்டமாக இருக்கும். இதை நாம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நமது உணவு முறையை மாற்றிக் கொண்டால் நமது வாழ்க்கை ஆரோக்கியமாக அமையும்.
ஜீரணமாக கடினமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஜீரணமாக கடினமான உணவுகளை உண்ட பின்னர் சில உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவைகளைக் செய்தோமனால் உணவு எளிதாக ஜீரணமாகும். அப்படியும் ஜீரணசக்தி குறைவாக இருந்தால் இங்கே ஜீரணசக்தியை அதிகரிக்க சில எளிய வழி முறைகளை கொடுத்துள்ளோம். நடைமுறைப்படுத்தி பயன் பெறுங்கள்.

அஜீரணத்தை போக்க

அதிகமாக உண்ணுவது, அடிக்கடி அதிகமாக உண்பது, மனஅழுத்தம் இவற்றை தவிர்க்க வேண்டும்.

ஜீரண சக்தியை அதிகரிக்க எலுமிச்சம் பழம் சிறந்தது. அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து சிறிது உப்பு போட்டு குடிக்கவும். தண்ணீர் சூடாக இருந்தால் நல்லது.

இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித்துண்டுகளை உணவிற்கு முன் சாப்பிடவும்.

இஞ்சி சாற்றையும், எலுமிச்சை சாற்றையும் கலந்து ஒருஸ்பூன் அளவு குடிக்கலாம்.

ஜீரகம் (ஒரு தேக்கரண்டி) கலந்த தண்ணீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாற்றை கலந்து, உப்பு போட்டு குடிக்கலாம்.

ஓமத் தண்ணீர் நல்லது. ஓமத்தை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

பெருங்காயமும் ஒரு ஜீரண பெருக்கி. நெய்யும் பெருங்காயம் பொடி சேர்த்த அன்னத்தை ஒரு கவளம் உண்ணலாம். பெருங்காய பொடி கலந்த மோரும் நல்லது.

சில ஆயுர்வேத குறிப்புகள் – கோதுமை உணவிற்குப் பின் குளிர்ந்த ஜலமும், மாவுப் பண்டங்களை உண்டபின் சூடான நீரையும், பயறு வகைகளை உண்டால் நீர் மோரும் உட்கொள்ள வேண்டும் என்கின்றன.

பப்பாளி ஜீரணத்திற்கு உதவும். மேல் நாட்டில் மாமிச உணவு சமைக்கும் போது பப்பாளிப் பழ துண்டுகளுடன் சமைப்பது வழக்கம்.

ஒரு பெரியகரண்டி இலவங்கப்பட்டை கலந்த தண்ணீர். வயிற்றில் வாய்வு தொல்லை ஊறவைத்து குடித்தால் வயிற்று உப்புசம் குறையும்.

புதினாவும் ஜீரணத்திற்கு நல்லது. பச்சடி செய்து சாப்பிடலாம்.

இஞ்சிப் பொடி, கிராம்பு, கொத்தமல்லி விதை, ஏலக்காய் பொடி இவற்றை கலந்து உட்கொண்டால் அஜீரணம் ஏற்படாது.

கறிவேப்பிலை சாறும் (எலுமிச்சை சாற்றுடன் கலந்து) ஜீரணத்திற்கு உதவும்.

கரு மிளகு, உலர்ந்த புதினா, மல்லி விதை, இஞ்சிப் பொடி, ஜீரகம், பெருங்காயம் இவற்றை சரிசம அளவில் எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி பொடியை தினமும் உணவிற்கு பின் உட்கொள்ளவும்.

திராட்சை, அன்னாசி, மாதுளம், கேரட் – இவையெல்லாம் அஜீரணத்தை ஜீரணத்தை அதிகரிக்கும். பொருட்கள் இவை கலந்து தயாரித்த பழ ரசம் குடித்தால் பசி ஏற்படும்.

சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளவும்.

உணவை வாயிலிருக்கும் போது தண்ணீர் குடிக்காதீர்கள். தண்ணீரால் உணவை உள்ள தள்ள வேண்டாம்.

மோர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

உலர்ந்த திராட்சையும் ஜீரணத்திற்கு உதவும்.

மகிழ்சிசியான சூழ்நிலை, சூடான, சுவையான உணவு, நெய் சேர்ந்த உணவு இவை ஆரோக்கியமாக உண்ண உதவும்.

நார்ச்சத்து உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

பரக்க, பரக்க சாப்பிடாதீர்கள்.

ஆயுர்வேதத்தில் வயிற்றுக் கோளாறுகள், தீர, ஜீரணசக்தி சீராக

இருக்க, பல மருந்துகள் உள்ளன, அஷ்டாங்க சூரணம், த்ரிபால சூரணம், திராச்ஷ ரிஷ்டம், ஹிரிடாக்கி சூரணம், அக்னிமுக சூரணம் போன்றவை. குறிப்பிடத்தக்க சில மருந்துகள். ஆயுர்வேத வைத்தியரை அணுகி, உங்கள் கோளாறுக்கேற்ற மருந்தை உபயோகிங்கள்.


Spread the love
error: Content is protected !!