வாழ தேவை நார்சத்து… அது எந்த உணவில் அதிகம்…?

Spread the love

உடலிற்கு தண்ணீர் எந்த அளவிற்கு அவசியமோ, அதே மாதிரி நார்சத்தும் அவசியம். நார்சத்து இல்லாத உணவுகளை இரு வாரத்திற்கு நாம் தவிர்த்தால், நம்முடைய செரிமான மண்டலமே கேள்வி குறிதான். அந்த அளவிற்கு அத்தியாவசியமான பொருள்தான் நார்சத்து. உணவுகள் செரிமானம் என்பது. சிறுகுடல், பெருங்குடல் வழியே சீராக பயணித்து மலக்குடல் வழியாக வெளியேற வேண்டும். 


இந்த சுழற்ச்சிக்கு தேவையானது நார்சத்து. இந்த உணவுகளை சாப்பிடும்போது சர்க்கரையின் அளவு இரத்தத்தில் சிறிதாக சேரும். இதனால் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் கட்டுபாட்டுடன் இருக்கும். எவற்றில் நார்சத்து அதிகமாக உள்ளது என பார்க்கலாம். கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைகோஸ், நூல்கோல், கீரை இவையெல்லாம் மிகவும் அவசியம். பழங்களிலும் நார்சத்து அதிகமாக அடங்கியுள்ளது. ஆனால் அதை ஜுஸ் ஆக குடிக்கும் போது வெறும் ஊட்டச்சத்து மட்டும் தான் கிடைக்கும்.

நார்சத்து சிதைந்துவிடும். குறிப்பாக எந்த வித பழங்கள், காய்கறிகளிலும், அதன் தோலில் தான் நார்சத்து இருக்கும். இதனால் தான் பழங்கள், காய்கறிகளை தோலை சீவாமல் சாப்பிட சொல்வார்கள். பலவீனமாக இருப்பவர்களை பச்சை காய்கறிகள் சாப்பிட சொல்வார்கள். ஏனென்றால்? இதில் இருக்க கூடிய சத்துக்கள், இதயத்தை பாதுகாத்து, உடலுக்கு பலத்தையும் கொடுக்கும். நார்சத்து உணவுகள் பொதுவாக கொஞ்சமாக சாப்பிட்டாலும், வயிற்றை நிரப்பிவிடும். இதனால் அடிக்கடி பசி எடுப்பது குறைந்து விடும். 

அதனால் இதன் பலன், உடல் எடையை  கூட்டாமல் பாதுகாப்பது தான்.  உடல் பருமனாக இருப்பவர்கள் நார்சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடலாம். வாழைப்பழத்தை தோலோடு சாப்பிட முடியாது தான். ஆனால் அந்த தோலில் தான் அதிகபடியான நார்சத்து இருக்கின்றது. அதனால் தோலிற்கு உட்பகுதியில் இருக்கும் படிமத்தை சாப்பிட்டு பயனடையலாம். பழங்கள், காய்கறிகள் இதன் பருப்பு, பயிறு வகைகள், நட்ஸ் மற்றும் சிறு தானியங்களிலும் நார்சத்து தாராளமாக கிடைக்கும்.

To buy Herbal produts>>>


Spread the love