உணவு முறை

Spread the love

நமது உணவு முறை சரியானதாக இருந்தால் மருந்தே தேவை இருக்காது என்கிற உண்மை இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே உறுதிபடுத்தப் பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான, இயற்கையான உணவு வகைகளையே சாப்பிட வேண்டும் என ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. நமது உடலின் 5 உணர்வுகளுக்கும், புத்துணர்ச்சியுடன் திகழ, சரியான உணவு முறை தேவை. உடலின் திசுக்கள், உணர்வுகள், உடல் பளபளப்பாக மின்ன, முக்கிய சக்தி ஆரோக்கியம், மகிழ்ச்சி.

வயதான காலத்தில் ஒருங்கிணைந்து பெற்று வாழ சரியான உணவு முறை தேவை.

சரியான உணவு முறையை எடுத்துக் கொள்ள ‘சப்த கல்பனா’ எனப்படும் 7 வழிகள் உள்ளன.

இயற்கை

அடிப்படையான இயற்கை உணவை எடுத்துக் கொள்வது குறித்து நன்கு உணர்ந்து இருக்க வேண்டும்.

எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய பருப்பை பயன்படுத்த வேண்டும். உளுத்தம் பருப்பு, பால், பால் சார்ந்த பொருட்கள் பொதுவாக ஜீரணம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் பொருட்கள் ஆகும்.

உணவு பொருட்கள் மிக சூடாகவோ அல்லது மிக குளிர்ச்சியாகவோ, உலர்ந்தோ காணப்பட் டால் ஜீரணம் பாதிக்கும்.

சரியான உணவு

சில உணவு பொருட்கள் நமது உடலுக்கு நல்ல பலனை தருவதாக உள்ளன. நெய் மற்றும் தேனை ஒரே அளவு சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது நச்சுத்தன்மை வாய்ந்ததாக ஆகிறது.

நிபுணத்துவம்

உணவில், சில சாதகமான விஷயங்களை தண்ணீர் பயன்பாடு, பிரத்யேக கலன்களில் பாதுகாத்தல், முழு தூய்மையான நிழல்களில் பாதுகாத்தல், வாசனைமிக்க அல்லது மூலிகை சேர்ப்பு, புதிய பழச்சாறு என அடிப்படை தரத்தை சேர்க்கலாம்.

உணவுப்பொருட்களை தனித்தனியாகவோ அல்லது, கலவையாகவோ உரிய அளவில் எடுத்துக் கொள்வது மாத்ரா எனப்படுகிறது. அதே போன்று சுற்றுச் சூழல் மற்றும் காலச் சூழல் நிலையும் ஆயுர்வேதத்தில் தயாரிப்பு இட வரையறை உள்ளது.

நாம் சாப்பிடும் உணவையும் உரிய கால நேரத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது. இதனை கால என ஆயுர்வேதத்தில் குறிப்பிடுகிறார்கள். முதலில் சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாகி, இயல்பாகி பசி தோன்றும் போது தான் மீண்டும் சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொள்வதில் நமது பாரம்பரிய உணவு முறையில், உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆயுர்வேத உணவு முறைகள் நமது உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது ஆகும். அறுசுவை உணவு என நமது வாழ்வில் உண்டு. அன்றாட நமது உணவு முறையில் அறு சுவையையும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இனிப்பு, உப்பு, புளிப்பு, கடும் சுவை, கசப்பு, கார்ப்பு என்கிற சுவைகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் வழி வகுக்கின்றன. இனிப்புச்சுவை உடல் எதிர்ப்புத் தன்மைக்கு உதவுகிறது. புளிப்புச் சத்து, உடலில் உள்ள திசுக்களுக்கு ஊட்டச் சத்துக்களை அளிக்கிறது.

உப்பு உணவின் தன்மையில், சுவை கூட்டி மகிழ்ச்சி அளிக்கிறது. கசப்புச் சுவை, இயல்பாகவே நச்சுத்தன்மையை எதிர்ப்பதாக உள்ளது. தீவிர சுவை பசியைத் தூண்டுகிறது. அன்றாடம் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு புத்தம் புதியதாக, ஆரோக்கியமானதாக, ஊட்டச்சத்துமிக்கதாக மனதிற்கு இனிமை அளிக்கப்படக்கூடியதாக தயாரிக்கப்பட வேண்டும். ஆயுர்வேத பரிந்துரைப்படி உணவு மிதமானதாக, உடலுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். இத்தகைய உணவு எளிய ஜீரணத்திற்கு உதவும்.

உணவு வயிற்றுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும், மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக வும், உணர்வுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். இதனை பழங்கால மருத்துவ பதிவுகள் சதாம்யான எனக் குறிப்பிடுகின்றன.

தனி நபரின் உணவு ஏற்கும் திறன் மற்றும் ஜீரணத்திறனை பொருத்தே உணவு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். வயிற்றுப் பகுதியில் 2 பங்கு திட உணவு, ஒரு பங்கு திரவம் என்றும் ஒரு பங்கை வெற்றிடமாகவும் விட வேண்டும். உணவு எடுத்த பின்னர், எந்த வித உடற்பயிற்சியிலும் ஈடுபடக்கூடாது. உணவை அவசர அவசரமாக சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு கவளத்தையும் மென்று சாப்பிடுவது நல்லது. பருவ சூழலுக்கு ஏற்ப கிடைக்கும் பழங்கள் காய்கறிகளில் நார்சத்து நன்றாக உள்ளன.

இந்திய சமையலறையில் பயன்படுத்தப்படும் உணவு தயாரிப்பு பொருட்களையே பயன்படுத்த வேண்டும். முழுகோதுமை, பாலிஷ் செய்யப்படாத தானியங்கள் பசும்பால், தேன் ஆகியவை பெரிதும் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவை மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இயல்பான வேகத்திலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதம் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக நடந்து வருகின்றன. எசாரிய பல்கலைக்கழகம், அர்ஜென்டினா, ஜெர்மனி, ஜப்பான், நெதர்லாந்து என பலரும் நமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையை அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.


Spread the love