சுறுசுறுப்பாக இருங்கள்:
ஆயுர்வேதம்
டாக்டர் எஸ். செந்தில் குமார்.
‘சோம்பித்திரியேல்’ என்கிறது ஆத்திசூடி. உடலை, உள்ளத்தை வேலையின்றி
வைக்காதீர்கள். “சோம்பர் எம்பவர் தேம்பித்திரிவர்” என்கிறது கொன்றை
வேந்தன். யாதொரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக அலைபவர்கள் அல்லல் படுவார்கள்.
உடலுழைப்பும், உடற்பயிற்சியும் தினசரி
இருக்க வேண்டும். ஆயுர்வேத மேதை சுஸ்ருதர் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, நீரிழிவு நோயாளிகள் 4 மைல் நடக்க வேண்டும், கிணறு வெட்டுவது போன்ற
உடலுழைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்றார். நடப்பது, நீச்சல், நடனம், சைக்கிள் ஓட்டுவது, விளையாட்டு இவற்றில்
ஏதாவது ஒன்றிரண்டை செயல்படுத்துங்கள். வீட்டு வேலைகள் தோட்ட வேலைகளை தினசரி
செய்யவும். இதனால் விளையும் நன்மைகள்:-
· சரியான உணவும், உடற்பயிற்சியும் சேர்ந்தால், நீரிழிவை (டைப் 2) தடுக்கும் வாய்ப்புகள் 58%.
· உடற்பயிற்சி உங்கள் எடையை சரியான அளவில் வைக்க
உதவும்.
· இதயம், நுரையீரலுக்கு வலிமை கூட்டும்.
· இன்சுலீனின் வேலையை ஊக்குவிக்கும்.
· உடலுழைப்பு / வேலைகளால் சக்தி பெருகும்.
· மன அழுத்தத்தை குறைக்கும்
உடற்பயிற்சி ஆரம்பிக்கும்
முன், உங்களின் டாக்டருடன்
கலந்து
ஆலோசியுங்கள். நீரிழிவு
நோயாளிகள், சில முன்னெச்சரிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம், கண்பாதிப்புகள் இவை உள்ளவர்கள் எடை தூக்குதல் போன்ற
கனரக உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். யோகாவில் நீரிழிவு நோய்க்கென பிரத்யேக
ஆசனங்கள் உள்ளன.
ஒரு நாளில் 30 நிமிடமாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, (ஏதாவது ஒரு வேலையில்)
இவற்றில் உடலை ஈடுபடுத்துங்கள். இது வரை உடலை பயிற்சியின்றி வைத்திருந்தால், முதலில் 5-10 நிமிடங்களிலிருந்து
ஆரம்பிக்கவும். போகப் போக நேரத்தை அதிகரிக்கவும். ரத்த சர்க்கரை 100 அல்லது 120க்கு குறைவாக இருந்தால், உடற்பயிற்சிக்கு முன்
சிற்றுண்டியை உட்கொள்ளவும். பயிற்சியின் போது தாழ் நிலை சர்க்கரை நிலை ஏற்பட்டால், குளூக்கோஸ் மாத்திரைகள், இனிப்பு, பழரசம் போன்றவைகளை உடனே
உண்ணவும்.
உடற்பயிற்சி செய்ய
ஆரம்பித்த உடனேயே பலன்களை எதிர் பார்க்காதீர்கள், ஒரு தடவை அரசமரத்தை
சுற்றி வந்து அடிவயிற்றை தொட்டுக் கொண்ட பெண் போல. உடனேயே பலன்கள் புலப்படாது. சில
வாரங்கள் போக வேண்டும். ஒரே மாதிரி உடற்பயிற்சிகள் “போரடித்தால்”
மாற்றிக் கொள்ளவும். உடற்பயிற்ச்சியால் எலும்புகள், தசைகள், மூட்டுக்கள் இவை
வலிவடையும். ஆனால் உடலை வருத்தி, உடல் பாதிப்புகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.
உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும், இரத்த சர்க்கரை அளவை பரிசோதிப்பது நல்லது.
உடற்பயிற்சி என்றவுடன்
ஒரு பெரிய “ஜிம் மும்”, ட்ரெட்மில் போன்ற பெரிய பயிற்சி உபகரணங்களும் உங்கள்
மனதில் தோன்றும். இதெல்லாம் தேவையில்லை. உடற்பயிற்சி என்றால் ணீநீtவீஸ்மீ வாக இருப்பது.
அதாவது திட்டமிட்ட உடல் இயக்கம். நடப்பதே போதும். ஒரு நாளைக்கு 30-45 நிமிடங்கள், வாரத்தில் ஜந்து முறை
பயிற்சிகள் செய்தாலே போதுமானது.