இரவு உணவு
தானிய அடை
தேவையான பொருட்கள்
கோதுமை – 1 கப்
கேழ்வரகு – 1 கப்
கம்பு – 1 கப்
சோளம் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 4 பல்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கேரட் – 1
வெங்காயம் – 1
வெங்காயத்தாள் – 1/2 கப்
கொத்தமல்லி – 1/4 கப்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் முதலியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் தண்ணீரை வடித்து விட்டு மிளகாய், பூண்டு, சீரகம், சோம்பு, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கேரட், வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை பொடியாக நறுக்கி அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து, தோசைக் கல்லில் எண்ணெய் தடவி இந்த மாவை தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி இரு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
ஓட்ஸ் அடை
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 1 கப்
கடலை மாவு – 1 கப்
தனிமிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 1
கேரட் – 1
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயம்,கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கடலைமாவு, மிளகாய் பொடி, உப்பு, வெங்காயம், கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கரைத்து தோசைக்கல்லில் அடையாக ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
ராகி இடியாப்பம்
தேவையான பொருட்கள்
ராகி இடியாப்பம் – 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கொழுப்பு நீக்கப்பட்ட மோர் – 1 கப்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை இரண்டாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
ராகி இடியாப்பத்தை சிறிது தண்ணீரில் ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் மோரை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
சிறிது கொதி வந்தவுடன் ராகி இடியாப்பத்தைப் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.
மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10
மிளகு பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1/4 டீஸ்பூன்
செய்முறை
மஷ்ரூமை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலை உரித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம் போட்டு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், மஷ்ரூம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் உப்பு, மிளகு பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
மஷ்ரூம் வெந்தவுடன் இறக்கிப் பரிமாறவும்.
புதினா சட்னி
தேவையான பொருட்கள்
புதினா – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 2 பல்
புளி – கோலிக்குண்டு அளவு
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 2 சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் போட்டு தாளித்து பின் காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும்.
கடைசியாக புதினா, புளி, உப்பு மூன்றையும் போட்டு நன்கு வதக்கி ஆற வைக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
தக்காளி தொக்கு
தேவையான பொருட்கள்
தக்காளி – 250 கிராம்
தனிமிளகாய் பொடி – 2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
சிவப்புமிளகாய் – 3
உப்பு – தேவைக்கேற்ப
வறுத்துப்பொடிக்க
மிளகாய் – 3
மல்லி – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
செய்முறை
வறுத்துப் பொடிக்க கூறியுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
தக்காளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு,சீரகம்,பெருங்காயம்,மிளகாய் போட்டு தாளித்து,நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மிளகாய்பொடி,உப்பு சேர்த்து கிளறவும்.
நன்கு சுருள வதங்கியதும் வறுத்துப் பொடி செய்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தால் ஃப்ரை
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம் – 1
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பட்டை – 1 சிறு துண்டு
செய்முறை
பச்சைமிளகாய்,வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாசிப்பருப்புடன் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் போட்டு, வெயிட் போட்டு, இரண்டு விசில் சத்தம் வரும் வரை வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை சேர்த்துத் தாளிக்கவும்.
பின்னர் அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை போட்டு வதக்கவும்.
பின்னர் வெந்த பருப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். தேவையான அளவு உப்பும் இப்போதே சேர்க்கவும்.
தால் ஃப்ரை சிலருக்குக் கெட்டியாகப் பிடிக்கும், சிலர் அது நீர்த்து இருப்பதை விரும்புவார்கள். இந்த விருப்பத்தின் அடிப்படையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
உணவுநலம் ஜனவரி 2014