நீரிழிவு உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன தவிர்க்க வேண்டும்..?

Spread the love

கேள்வி: என் வயது 40, எனக்கு நீரிழிவு உள்ளது, என்ன சாப்பிட வேண்டும் என்ன தவிர்க்க வேண்டும்..?

பதில்: குளுக்கோஸ், ஜாம், தேன், சர்க்கரை அல்லது வெல்லப்பாகு, சாக்லேட், இனிப்பு வகைகள், கேக்குகள் ,இனிப்பு ரொட்டிகள், இனிப்பான அடைகள், அப்பங்கள் தவிர்க்க வேண்டும். பழ வகைகளில் வாழைப்பழம், மாம்பழம், திராட்சை, சப்போட்டா, ஆப்பிள், உலர் திராட்சையும் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இனிப்பான பழ ரசங்கள், துவையல்களையும் தவிர்க்க வேண்டும். காய்கறி வகைகளில் பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி வகைகள், கொட்டைகளுள் முந்திரிக் கொட்டை, கடலைக் கொட்டை, தவிர்க்கவும்.

கோகோ கோலா, ஃபேண்டா, மிராண்டா, என்று எவ்வித குளிர் பானங்களும் கூடாது. ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா, காம்ப்ளான் தவிர்க்கவும். வறுத்த உணவுப் பொருட்கள், ஐஸ்கிரிம், வெண்ணெய், நெய், டால்டா சேர்க்கக் கூடாது.

என்ன சாப்பிடலாம்?

உருளைக் கிழங்கு, பீன்ஸ் தவிர மற்ற காய்கறிகள் அதிகம் சாப்பிடலாம். முட்டை கோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி, தக்காளி, வெள;ளரிக்காய், கீரை வகைகள் அதிகம் சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள், கோழிக்கறி, முட்டை, மீன், ஆட்டிறைச்சி உணவுகளைக் குறிப்பிட்ட அளவில் சாப்பிடலாம். கொழுப்பு நீக்கிய பால் மூலம் தயாரிக்கப்பட்ட காபி, தேனீர், மிளகு ரசம், மோர், எலுமிச்சம் பழச் சாறு, சோடா போன்ற பானங்களை அருந்தலாம். மது வகைகள் முற்றிலும் தவிர்க்கவும். உணவைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள் கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒரு பழமோ, ஒரு சில துண்டுகளோ சாப்பிட்டுக் கொள்ளலாம். அதே போல முந்தரிப் பருப்பு, நிலக்கடலை எப்போதாவது சிறிதளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். பீட்ரூட், பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட் போன்றவற்றையும் குறிப்பிட்ட அளவு அனுமதிக்கலாம். தாழ் சர்க்கரை நிலையுள்ளவர்கள் விரதம் பட்டினி இருப்பது கூடாது.


Spread the love
error: Content is protected !!