உங்கள் நீரிழிவு நோயின் வகை என்ன?

Spread the love

அனைவரும் அறிந்த நீரிழிவு நோயின் வகைகள் மூன்று. முதல் “டைப்” இன்சுலீன் அறவே சுரக்காத நிலை. இந்த நிலையில் இன்சுலீனை உடலில் செலுத்திக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. ‘டைப் 2 ல்’ இன்சுலீன் குறைவாக சுரத்தல் அல்லது குறைபாடுடன் சுரத்தல் மற்றும் செல்கள் இன்சுலீனை ஏற்றுக் கொள்ளாமல் போதல். டைப் 3 கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தற்காலிக நீரிழிவு பாதிப்பாகும்.

நீரிழிவு என்றால் என்ன? கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலீன் ஹார்மோன் தேவையான அளவு சுரக்காவிட்டால், உடலுக்கு சக்தி கொடுக்கும் ‘குளூக்கோஸ்’ செல்களை சேராமல், ரத்தத்திலேயே தங்கிவிடும். சிறுநீரிலும் அதிகமாக குளுக்கோஸ் (சர்க்கரை) காணப்படும். உடல் செல்கள் சர்க்கரையை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

இந்த மூன்று வகைகளை மாறி, புதிய முறை பிரிவுகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றது வகைகளையும் என்னவென்று பார்ப்போம்.

வகைகள்

  1. டைப் 1

குறிப்புகள்

· உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தவறாக (ஆடோ-இம்யூன்) கணையத்தின் ‘பீடா’ செல்களை அழிப்பது.

 · காரணம் தெரியாத வகை.    தீடிரென ஏற்படும். அதீத தாகம்,       அதிகமாக சிறுநீர்போதல், அதீத பசி, எடைகுறைவு, கண் பாதிப்பு முதலியன. இன்சுலீன் தான் முக்கிய சிகிச்சை.

  • டைப் 2

 இன்சுலீன் சுரந்தாலும் போதாத நிலை, இன்சுலீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உடல்நிலை, செல்களால் இன்சுலீனை சரியாக பயன்படுத்தமுடியாத நிலை அறிகுறிகள் டைப் – 1 போன்றவை. ஆனால் உடனே தெரியாது. மெதுவாக தலை தூக்கும் பாதிப்பு. பரவலாக காணப்படும் டைப்.

  • டைப் 3

 (கர்ப்பகால நீரிழிவு) நீரிழிவு நோயில்லாத பெண்கள் கர்ப்பமடையும் போது ரத்தத்தின் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரித்து, நீரிழிவால் பாதிக்கப்படலாம். தற்காலிகமானது. பிரசவம் ஆனவுடன் மறைந்துவிடும்.

  • பிறவிக்கோளாறுகளால் கணைய ‘பீடா’ செல்கள் பாதிக்கப்பட்டு இன்சுலீன் சுரப்பு குறைவது இது 25 வயதிலேயே ஏற்படலாம். இதை Maturity – on set of Diabetes in Youth (MODY) என்பார்கள். பரம்பரை முக்கிய காரணம். மரபணுக்கள் கோளாறு.
  • இன்சுலீன் செயல்பாடுகள் பிறவிக்கோளாறுகளால் பாதிப்படைவது. மரபணுக்களால் இன்சுலீன தரம் பாதிப்படையும். இது Lipoatrophic diabets எனப்படும். தீவிர நிலையில் ஆண்களுக்கு மரு, பாலுண்ணி போன்ற சர்மவியாதி ஏற்படும். இதை Acantosis Nigricans என்பார்கள். பெண்களுக்கு Virilization என்னும் ஆண்மை தன்மை அதிகரிக்கும் பாதிப்பு ஏற்படும். தலை வழுக்கை, தேவையில்லா இடங்களில் முடி, முதலியன பெண்களுக்கு ஏற்படலாம். PCOS, (திரவமுள்ள கட்டிகள்) உண்டாகும். 
  • கணைய நோய்களால் வருவது இதை Fibrocalculous Pancreatopathy என்பார்கள் கணையத்தை தாக்கும் தொற்று நோய்களால் ஏற்படும். கணைய “கற்கள்” மற்றும் தசை அழற்சிகளால், கணையம் பாதிக்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாகலாம். 
  • என்டோ கிரினோபதியால் (Cushing Syndrome) வருவது. பல ஹார்மோன்கள் (Cortico steroid) இன்சுலீனுக்கு எதிரியாகலாம். இந்த டைப் டயாபடீஸ் அதிகம் சுரக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தினால் குணமாகும்.
  •   மருந்துகள் உண்டாக்கும் நீரிழிவு க்ளுகோகார்டிகாய்ட், சிறுநீர் போக உதவும் தியாசைட் டையூர்டிக்ஸ், பினெடாய்சின் போன்ற மருந்துகளால் ஏற்படும். இவை நேரடியாக நீரிழிவை உண்டாக்கவிட்டாலும், ஏற்கனவே இன்சுலீன் குறைபாடுகள் இருந்தால் அவற்றை அதிகரித்துவிடும்.
  • தொற்று நோய்களால் வரும் நீரிழிவு ரூபெல்லா, அடினோ வைரஸ், சைடோமெகல்லோ போன்ற வைரஸ்களாலும், மம்ஸ் (Mumps) போன்றவற்றாலும் நீரிழிவு நோய் வரலாம். இவை டைப் 1 நீரிழிவு நோயை பெரும்பாலும் உண்டாக்குகின்றன.
  1. அபூர்வமான நீரிழிவு 12. இதர மரபணுகோளாறுகளால் வருவது. நரம்பு மண்டல கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள், டயாபடீஸால் பாதிக்கப்படுவார்கள். Stiff man’s Syndrome என்ற உடல் தசைகள் விறைத்துப்போய் கட்டை போல் கெட்டியாகும் ஆடோ-இம்யூன் வியாதி நீரிழிவை தோற்றுவிக்கும். Down’s Syndrome, Turmeris Syndrome இவற்றாலும் நீரிழிவு தோன்றலாம்.    

சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின் படி, டைப் – 2 நீரிழிவு நோய், 25 வயதுக்கு குறைவாக உள்ள இளைஞர்களை பாதிப்பது அதிகரித்து உள்ளதாக தெரிகிறது. இதைப் பற்றி கவலை தெரிவிக்கும் நீரிழிவு நிபுணர்கள், இதன் காரணங்களாக, உடற்பயிற்சியின்மை, தவறான உணவு முறைகள் இவற்றை சுட்டிக்காட்டுகின்றனர்.

தவிர நீரிழிவு வியாதியில் தேர்ச்சிபெற்ற டாக்டர்கள் குறைவு. எனவே பல நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்க நேருகிறது. தவிர நீரிழிவின் டைப்பை நிர்ணயிட்டதிலும் சில சமயம் தவறுகள் ஏற்படுகின்றன. நடந்து வரும் ஐந்து வருட ஆய்வில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள். கூறுவது, இந்தியாவில் நீரிழிவு நோய் சரிவர கட்டுபடுத்தப்படவில்லை என்பதுதான். இது ஒரு கவலை தரும் விஷயம். உலகிலேயே அதிகமாக நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான்.

நம்பகமான பரிசோதனை

நீரிழிவை கண்டுபிடிக்க பலபரிசோதனைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது “சர்க்கரை சேர்க்கப்பட்ட ரத்த சிவப்பணு பரிசோதனை” (Glycosylated Haemoglobin – Hb A 1C).

ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் (Haemoglobin) ஒரு இரும்பு – புரதம். இது சர்க்கரையுடன் கலந்து ஒரு நிரந்தர மாற்றத்தை அடைகிறது. மருந்துகள், உணவுகள் இவற்றால் இந்த மாற்றத்தை மாற்ற முடியாது. ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 90 நாட்கள். இந்த 90 நாட்களும் சர்க்கரை – ஹீமோகுளோபின் கலவை மாறாமல் இருக்கும். இதை வைத்து ஒருவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதா இல்லையா, கடந்த 90 நாட்களில் சர்க்கரை அளவு (சராசரியாக) எவ்வளவு இருந்தது என்பது கண்டுபிடிக்கலாம்.

அமெரிக்க நீரிழிவு சங்கம் இந்த முறை பரிசோதனை மிகவும் நம்பகமானது, மற்றும் இந்த பரிசோதனையை எல்லா நீரிழிவு நோயாளிகளுக்கும் கடைபிடிக்க வேண்டும் என்கிறது. இந்த சோதனையில் HbA 1C, 6.5% அல்லது அதற்கு மேல் இருந்தால், நீரிழிவு வியாதி என்று கண்டு கொள்ளலாம். HbA 1C பரிசோதனை சாதாரண ரத்த சர்க்கரை பரிசோதனைகளுக்கு ஆகும் கட்டணத்தை விட 3 மடங்கு அதிகம். இருந்தாலும் இதில் சில அனுகூலங்கள் உள்ளன. பட்டினியிருந்து செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் பெரும்பாலோர் இந்த டெஸ்டை ஒருதடவை கூட செய்து கொள்ளவில்லை என்பதை நீரிழிவு டாக்டர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நிபுணர்கள், இந்த HbA 1C டெஸ்டுடன், பட்டினியிருந்த செய்யும் சோதனையையும் சேர்த்து செய்தால், துல்லியமாக நீரிழிவு வியாதியை ரத்த சர்க்கரை அளவை கண்டுபிடிக்கலாம் என்கின்றனர்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love