நீரிழிவு பெருகி வரும் பெரிய நோயாகிவிட்டது. உலகத்திலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில் தான் இருக்கிறார்களென்பது இப்போது அனைவருக்கும் தெரிந்த உண்மை. வரும் நவம்பர் 14 தேதி உலக நீரிழிவு தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடங்களில் நீரிழிவை சமாளிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்னவென்று நாம் நினைவு கூரும் தினமாக இது அமையும்.
நீரிழிவு நிபுணர்களின் முதல் கவலை தற்போது அதிகமாக இளைஞர்கள் டைப் 2 டயாபடீஸுக்கு ஆளாகிறார்கள் என்பது. தவிர தவறான பரிசோதனைகளால் டைப் 2 நோயாளிகள், டைப் 1 என்று கருதப்பட்டு அநாவசியமாக இன்சுலீன் சிகிச்சை தரப்படுகின்றனர். இதற்கு ஒரு காரணம் குறைந்து வரும் நீரிழிவில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள்.
ஒரு ஆறுதலான விஷயம் – 2 வருட ஆராச்சிகளுக்கு பிறகு, கணைய இன்சுலீன் சுரப்பை கட்டுப்படுத்தும் மரபணு (Gene) மாற்றத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியர்களின், மாற்றத்தை உண்டாக்கும் மரபணு என்னவென்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பரம்பரை ரீதியாக தோன்றும் நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்துவது சுலபமாகலாம்.
ஆயுர்வேதம் நன்கறிந்த பழமையான வியாதிகளில் ஒன்று நீரிழிவு நோய். ஆயுர்வேதத்தில் “ப்ரமேஹா” என்ற தலைப்பில் 20 சிறுநீர் கோளாறுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இருபதில் “மது மேஹா” என்று நீரிழிவு வியாதி குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொன்று தொற்று பல ஆயுர்வேத மருந்துகளும், சிகிச்சைமுறைகளும் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இவைகள் மேம்படுத்தப்பட்டு, ஆயுர்வேதத்தில் சிறந்த நீரிழிவு நோய் மருந்துகள், கிடைக்கின்றன.
நீரிழிவு நோய் மருத்துவ உலகிற்கு பெரிய சவலாகிவிட்ட இந்த காலகட்டத்தில் “ஒருங்கிணைந்த” மருத்துவசிகிச்சை அவசிய தேவையாகிறது. ஆயுர்வேத மருந்துகளின் சிறப்புத்தன்மை, அவற்றை அலோபதி மருந்துகளுடன் கொடுக்கலாம். எனவே ஒருங்கிணைந்த மருத்துவத்தின் அவசியத்தை பற்றிய விழ்ப்புணர்வை ஏற்படுத்திக் கொள்வது ஒரு மாபெரும் முன்னேற்றத்தை தோற்றுவிக்கும்.
ஆயுர்வேதம்.காம்