நீரிழிவு மருந்துகள்

Spread the love

ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.

டாக்டர் உங்களுக்கு கொடுத்த மருந்துகளை தினமும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். இந்த மருந்துகள் / மாத்திரைகளால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் டாக்டரிடம் சொல்லவும். உடல் எடை, பயிற்சிகள் மூலம் அல்லது வேறுகாரணங்களால் 5-10 கிலோ குறைந்தால் டாக்டரிடம் தெரிவிக்கவும். ஒரு வேளை மருந்துகள் குறைக்கப்படலாம். டைப் – 2 நோயாளிகள் ரத்த க்ளூகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகள் / மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
இன்சுலீன் உபயோகம்: டைப் 1 நோயாளிகளுக்கு இன்சுலீன் மிக அவசியம். சில சந்தர்ப்பங்களில் டைப் 2 நோயாளிகளுக்கும் இன்சுலீன் தேவைப்படலாம். கணைய பாதிப்புகளால் இன்சுலீனை உடலால் உற்பத்தி செய்ய முடியாத போது, அல்லது போதுமான அளவு சுரக்காத போது, அல்லது குறைபாடுள்ள இன்சுலீன் சுரக்கையில், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இன்சுலீன் தான் உயிரைக் காப்பாற்றி நீரிழிவு நோயாளிகளை வாழ வைக்கிறது.

நான்கு வழிகளில் இன்சுலீனை எடுத்துக் கொள்ளலாம்.
1. ஊசி மூலமாக. சிரிஞ்ச், ப்ளஞ்சர், ஊசி இவைகளை உபயோகித்து, இன்சுலீன் உடலுள் செலுத்தப்படும். மிக மெல்லிய ஊசியை பயன்படுத்தவும். சிலர் இன்சுலீன் ‘பேனா’ வை பயன்படுத்துகிறார்கள். இது பேனா போல, ஊசி இன்சுலீன் மருந்து நிரம்பிய மருந்துக்குழலுடன் கிடைக்கிறது.
2. இன்சுலீன் ‘பம்ப்’ – இந்த சிறிய கருவியை சட்டைப் பையில் அல்லது இடுப்பு “பெல்ட்டில்” வைத்துக் கொள்ளலாம். இத்துடன் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் ட்யூபும், மிகச் சிறிய ஊசியும் இணைந்திருக்கும். சிறிய ஊசி தோலுக்குள் சொருகப்பட்டு, அதே நிலையில் பல நாட்கள் இருக்கும்.
3. இன்சுலீன் ஜெட் இஞ்ஜெக்டர் – இது ஊசியில்லாதது. இந்த கருவி போல இன்சுலீனை, அதிக அழுத்தத்தில், தோலில் தெளிக்கும்.
4. இன்சுலீன் இன்ஃபூஸர் -சிறிய ட்யூப் ஒன்று சர்மத்தின் அடியில் பொருத்தப்படும். இது பல நாள் பொருந்திய இடத்தில் இருக்கும். இதன் வழியே இன்சுலீன் செலுத்தப்படும்.
சில நீரிழிவு நோயாளிகள் வேறு சில மருந்துகளை ஊசி மூலம் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கும் இன்சுலினுக்கும் சம்மந்தமில்லை. டைப் 2 நோயாளிகள், உணவு முறைகள், உடற்பயிற்சி இவற்றை சரிவர கடைப்பிடித்தாலே, மருந்துகளை தவிர்க்க முடியும்.
டைப் – 2 நீரிழிவு மருந்துகள் பல வகைகளில் கிடைக்கின்றன. சில வாய்வழியே உட்கொள்பவை. சில ஊசிமூலம் கொடுக்கப்படுபவை. இந்த மருந்துகள்:- (டைப் – 2 விற்கு)
1. அல்ஃபா க்ளுகோஸிடேஸ் தடுப்பிகள்

2. அமீலின் மிமெடிக்ஸ்
3. பிகுனாய்ட்ஸ்
4. டி.பி.பி. – 4 தடுப்பிகள்
5. இன்க்ரிடின் மிமெடிக்ஸ்
6. மெக்லிடைனிடிஸ்
7. ஸல்ஃபோநைலூரியாஸ்
8. தியாஸோலிடினெடியோன்ஸ்

ஒவ்வொரு மருந்தும் சில தனி செயல்பாடுகளை உடையவை. 
உதாரணமாக சில மருந்துகள் கணையத்தை மேலும் அதிக இன்சுலீனை சுரக்க வைக்கின்றன. சில மருந்துகள், கல்லீரல், க்ளுகோஸ் தயாரிப்பதை தடுக்கின்றன. இதனால் உடல் செல்களுக்கு சர்க்கரை சக்தி சேர குறைந்த இன்சுலீன் போதும். மற்றும் சில மருந்துகள் வயிற்றின் என்சைம்களின் செயல்முறைகளை கட்டுப்படுத்துகின்றன.

மருந்துகளின் வரலாறு
பல வருடங்களாக ஸல்ஃபோநைலூரியாஸ் வகை மருந்துகள் தான் டைப் 2 நீரிழிவிற்கு, வாய் வழி மருந்தாக பயன்பட்டு வந்தன. இந்த மருந்துகள் கணையத்தை தூண்டி, அதிக இன்சுலீனை சுரக்க வைத்து, இரத்த சர்க்கரை அளவை குறைய வைத்தன. இந்த வகையில் தற்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் – கிளிப்ஸைட் மற்றும் க்ளைப்புரைட் வருடம் 1990 ல், மெட்ஃபார்மின் அமெரிக்க தேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு அபார கண்டுபிடிப்பாக பாராட்டப்பட்ட மெட்ஃபார்மின், இரத்த சர்க்கரையை குறைக்கும் தன்மை உடையது. டைப் – 2 நீரிழிவு வியாதிக்கு ஏற்ற மருந்து. இன்றும் டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளில் முதன்மையானது. மெட்ஃபார்மின், ஸல்ஃபோநைலூரியாஸ் மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கலாம். பழைய கால மருந்துகளும் (மெட்ஃபார்மின், கிளிப்சைட் போன்றவை) புதிய மருந்துகளின் செயல்பாடுகளுக்கு சிறிதும் குறைந்தவைகளல்ல. இவற்றின் ஒப்பீடு கீழே கொடுக்கப்படுகிறது.

மருந்து
1. கிளிப் ஸைட் 2. மெட்ஃபார்மின்
3. க்ளைமி பிரைட்   
4. ரோஸிக்ளிடாஸோன்
5. பியோக்ளிட்டஸோன்
6. ப்ராம்லின்டைட்
7. எக்ஸினாடைட்
8. சிடாக்ளிப்டின் பாஸ்பேட்  

பயன்கள்
1. வாய்வழி மருந்து. விலைகுறைவு.
2. வாய்வழி, உடல் எடை கூடாது. ‘கெட்ட’ கொலஸ்ட்ராலையும்,    ட்ரைகிளை சிரைட்ஸ்ஸை குறைக்கும். விலை மலிவு. 
3. வாய்வழி, விலை மலிவு.
4. வாய்வழி நல்ல கொலஸ்ட்ராலை (பிஞிலி) சிறிதளவு அதிகரிக்கலாம்.    
5. வாய்வழி ட்ரைகிளைசிரைட்ஸ்ஸை குறைக்கலாம்.    
6. உடல் எடை குறைய உதவும்.
7. வாய்வழி, உடல் எடை கூடாது.

குறைகள்
1. தாழ் சர்க்கரை நிலையை உண்டாக்கலாம். உடல் எடை கூடலாம்.
2. பிரட்டல், பேதி ஆகலாம். அபூர்வமாக, கெடுதலான லாக்டிக் அமிலம் கூடி விடும்.
3. ரத்த சர்க்கரை அளவை தாழ்நிலைக்கு கொண்டு போகலாம். உடல் எடை கூடும்.
4. உடல் வீக்கம், எடை கூடலாம். இதய பாதிப்பு உண்டாகலாம். கெட்ட  கொலஸ்ட்ரால், டிரைகிளைசிரைட்ஸ் அதிகப்படுத்தலாம். கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். அதிக விலை. 
5. ஊசி மூலம் கொடுக்க வேண்டும். வாய்வழி மாத்திரைகள்/ இன்சுலின் இவற்றுடன் சேர்த்து கொடுக்கக் கூடாது. பிரட்டல் வரலாம். அதிக விலை.
6. உசி மருந்து. பிரட்டல் அபூர்வமாக கணைய பாதிப்பு வரலாம் ஏற்படலாம். விலை அதிகம்.
7. சுவாச மண்டல தொற்று, தொண்டை புண் உண்டாகலாம் விலை அதிகம்.
8. உசி மருந்து. பிரட்டல் அபூர்வமாக கணைய பாதிப்பு வரலாம் ஏற்படலாம். விலை அதிகம்.
9. சுவாச மண்டல தொற்று, தொண்டை புண் உண்டாகலாம் விலை அதிகம்.


Spread the love