டயாபிடிஸ் மெலிடஸ்

Spread the love

டயாபிடிஸ் மெலிடஸ் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நீரிழிவானது கிரேக்க மொழியில் ஒழுகும் தேன் எனப் பொருள் தரும். ஒழுகும் என்பது இந்நோயினால் அதிகமாகச் சிறு நீர் போவதையும் என்பது சிறுநீரில் சர்க்கரை கலந்து போவதையும் குறிக்கிறது. நாம் பேச்சு வழக்கில் இந்த நோயினைச் சர்க்கரை நோய், சர்க்கரை வியாதி என்று சொல்லுவோம். நமது உடலில் வயிற்றுப் பகுதியில் கணையமானது ஜீரணத்திற்கு தேவையான சில ஜீரண நீர்களைச் சுரக்கின்றது. இந்த சீரண நீர்கள் நாம் உண்ணும் உணவினை ஜீரணிக்க உதவுகின்றன. அது மட்டுமல்லாமல், இக்கணையத்தில் லாங்கர் ஹான்களின் சிறு தீவுகள் என்னும் செல்களின் சிறு தீவுகள், திட்டுகள் உள்ளன. லாங்கர் ஹான்ஸ் என்னும் ஜெர்மானிய விஞ்ஞானி தான் இத்தகைய செல் தீவுகள் இருப்பதை உலகிற்குச் சொல்லியதால், இவை அவருடைய பெயரால் லாங்கர் ஹான்சின் சிறு தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இச்செல்கள் இன்சுலின் என்னும் சுரப்பு நீரைச் சுரக்கின்றன. இன்சுலின் சுரப்பில் ஏதேனும் குறை இருப்பினும் அல்லது இன்சுலின் சுரக்காது போய் விட்டாலும் தான் நீரிழிவு ஒருவரைப் பாதிக்கத் தொடங்கும்.


Spread the love