நீரிழிவுக்கு நல்ல சமையல்

Spread the love

வெஜ்-ரைஸ் கிச்சடி

தேவையான பொருட்கள்

       அரிசி ரவை         50 கிராம்

       கேரட்             1

       பீன்ஸ்             10

       தக்காளி           1

       பெரிய வெங்காயம்        1

       பச்சைமிளகாய்   –    2

       மஞ்சள் பொடி  –      1/4 டீஸ்பூன்

       இஞ்சி                -சிறிது

       பூண்டு         –       2 பல்

       பட்டை, சோம்பு, ஏலம்,

       கிராம்பு பொடி         -1 டீஸ்பூன்

       எண்ணெய்             -2 டீஸ்பூன்

       புதினா, உப்பு           -தேவைக்கு

செய்முறை

வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரிசி ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி,பூண்டை தட்டிக் கொள்ளவும். மற்றொரு டீஸ்பூன் எண்ணெயை விட்டு மசாலா சாமான்களை போட்டு தாளித்து பின்னர் இஞ்சி, பூண்டைப்  போடவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அரிசி ரவையையும் சேர்க்கவும்.புதினா இலையைப் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். மஞ்சள் பொடி போடவும்.

நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.வெந்ததும் இறக்கி கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.

சாபு தானா கிச்சடி

தேவையான பொருட்கள்

       ஜவ்வரிசி                 200 கிராம்

       இஞ்சி                    1 இன்ச்

       பச்சை மிளகாய்     3

       வெங்காயம்              1   

       கறிவேப்பிலை   –   சிறிது

       கடுகு               1 டீஸ்பூன்

       உளுத்தம் பருப்பு    1 டீஸ்பூன்

       எண்ணெய்         – 2 டே. ஸ்பூன்

       வேர்க்கடலை பொடி       2 டே. ஸ்பூன்

       கொத்தமல்லி             1/2 கப்

       உப்பு               தேவைக்கு

செய்முறை

ஜவ்வரிசியை 2 முதல் 3 மணி நேரம் வரை ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.

பின்னர் உப்பு மற்றும் ஊற வைத்த ஜவ்வரிசி போட்டு நன்றாகக் கிளறவும்.பின்னர் வாணலியை ஒரு மூடியால் மூடி வேக விடவும்.ஜவ்வரிசி நன்றாக வெந்தவுடன் வேர்க்கடலைப் பொடி மற்றும் கொத்தமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் கரகரப்பாக பொடி செய்யவும்.

சுண்டைக் காய் சப்ஜி

தேவையான பொருட்கள்

       சுண்டைக்காய்            1 கப்

       சின்ன வெங்காயம்        5

       தக்காளி சிறியது          1

       துவரம் பருப்பு   –         1/2 கப்

       மஞ்சள் பொடி  –          1/4 டீஸ்பூன்

       புளி சிறிய               எலுமிச்சையளவு

       குழம்புப்பொடி   –         2 டீஸ்பூன்

       உப்பு, எண்ணெய்           தேவைக்கு

       கடுகு                –   1/2 டீஸ்பூன்

       உளுத்தம் பருப்பு          1/2 டீஸ்பூன்

       கறிவேப்பிலை   –       சிறிது

செய்முறை

துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.சுண்டைக்காயை காம்பை எடுத்து விட்டு இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.ஒரு குக்கரில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின் வெங்காயம், தக்காளி, சுண்டைக்காய் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் வேக வைத்த துவரம் பருப்பு, புளிக்கரைசல், குழம்புப் பொடி, உப்பு போட்டு ஒரு சத்தம் விடவும்.பின் குக்கரைத் திறந்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

பாகற்காய் பிட்லை

தேவையான பொருட்கள்

       பாகற்காய்          1/4 கிலோ

       புளி சிறிய               சிறிது

       மஞ்சள் பொடி  –          1 டீஸ்பூன்

       உப்பு, எண்ணெய்      –    தேவைக்கு

       கடலைப் பருப்பு     1 ஸ்பூன்

       தனியா         –         1 ஸ்பூன்

       மிளகாய்       –          6

       தேங்காய் துருவியது      3 டீ ஸ்பூன்

       துவரம்பருப்பு             1/2 கப்      

      கடுகு                –    1 டீஸ்பூன்

       உளுத்தம்பருப்பு –    1 டீஸ்பூன்

       பெருங்காயம்             சிறிது

       கறிவேப்பிலை   –       சிறிது

செய்முறை

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி அதில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய், தேங்காய் முதலியவற்றை தனித்தனியே வறுத்து எடுக்கவும்.பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பாகற்காயை உள்ளே உள்ள விதைகளை எடுத்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் பாகற்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும்.வெந்தவுடன் அரைத்த மசாலா, வேக வைத்த துவரம் பருப்பு, புளித்தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

நன்கு வெந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டவும்.சப்பாத்தி, சாதம் முதலியவற்றுடன் சூடாகப் பரிமாறவும்.

மொச்சை – முட்டைகோஸ் சப்ஜி

தேவையான பொருட்கள்

       மொச்சை                 1/4 கப்

       முட்டைகோஸ்       –    1/4 கப்

       வெங்காயம்              1

       தக்காளி        –    1

       இஞ்சி பூண்டு பேஸ்ட்     1/2 டீஸ்பூன்

       மஞ்சள் பொடி         –   1/2 டீஸ்பூன்

       மிளகாய் பொடி           -1 டீஸ்பூன்

       தனியா பொடி          – 1 டீஸ்பூன்

       பட்டை               –   1 இன்ச்

       கிராம்பு               –   1

       ஏலக்காய்              – 1

       சோம்பு               –   1/4 டீஸ்பூன்

       சீரகம்         –          1/4 டீஸ்பூன்

       ஓமம்                    1 சிட்டிகை

       எண்ணெய்                தேவைக்கு

       உப்பு                          தேவைக்கு

       கொத்தமல்லி             சிறிது

செய்முறை

மொச்சையை உரித்து சிறிது உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.வெங்காயம் தக்காளியை அரைத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், ஓமம் போட்டு தாளித்து பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கிய முட்டைக்கோஸ் போட்டு வதக்கி, பின் அரைத்த வெங்காயம், தக்காளி பேஸ்ட்டை ஊற்றி வதக்கவும்.

பின் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடி சேர்த்து வதக்கி வேக வைத்த மொச்சையைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு வேக விடவும்.

நன்கு வெந்து கிரேவி திக்கானதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

திருமதி. எஸ். அன்னம்,

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love