மேத்தி பனீர்
தேவையான பொருட்கள்
பனீர் – 100 கிராம்
கிரீம் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டர் 1 டீஸ்பூன்
வெந்தயக்கீரை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு – 3 பல்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு முதலியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி சீரகம் போட்டு தாளித்து பின் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியதும் மிளகாய் பொடி போட்டு வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கி பின் உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கிரேவி கொதிக்கும் பொழுது வெந்தயக்கீரையைப் போடவும். பின் பனீரைப் போட்டு சிறிது கொதிக்கவும். கிரீம் மற்றும் பட்டர் சேர்த்து சப்பாத்தி மற்றும் பராட்டாவுடன் பரிமாறவும்.
மஷ்ரூம் வெஜ்ஜஸ்
தேவையான பொருட்கள்
மஷ்ரூம் -1 பாக்கெட்
கார்ன் ஃப்ளார் – 1/2 கப்
உப்பு, தண்ணீர் -தேவைக்கேற்ப
சில்லி ஃப்ளேக்ஸ் -சிறிது
பூண்டு -2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் -1 டீஸ்பூன்
உப்பு, தண்ணீர் -தேவைக்கேற்ப
மிளகாய் பொடி -1 டீஸ்பூன்
செய்முறை
மஷ்ரூமை கழுவி இரண்டாக கட் பண்ணி, மேற்கூறிய பொருள்களை எல்லாம் பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து அதில் மஷ்ரூமை முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பூண்டை உரித்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி, பின் சில்லி ஃப்ளேக்ஸ், மிளகாய் பொடி போட்டு வதக்கி பின் தக்காளி சாஸ் ஊற்றி கொதிக்க விடவும். சாஸ் நன்கு கொதிக்கும் பொழுது பொரித்து வைத்துள்ள மஷ்ரூமை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ஓட்ஸ் வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 7 கப்
இஞ்சி 1/2 டீஸ்பூன்
கேரட் – 1/2 கப்
காலிஃப்ளவர் – 1/2 கப்
உரித்த பட்டாணி – 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
முட்டைகோஸ் – 1/2 கப்
செய்முறை
இஞ்சி, கேரட், காலிஃப்ளவர், வெங்காயம், முட்டைகோஸ் முதலியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஓட்ஸை ஒரு ஆழமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ், பட்டாணி, வெங்காயம் சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும். நடுநடுவே கிளறி விடவும். பாத்திரத்தை பாதி அளவிற்கு ஒரு மூடியால் மூடி வேக விடவும். எல்லாம் நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
பாகற்காய் சூப்
தேவையான பொருட்கள்
பாகற்காய் -100 கிராம்
தண்ணீர் -250மி.லி.
தக்காளி -1
வெங்காயம் 1
புதினா, கொத்தமல்லி – சிறிது
மிளகு, சீரகத்தூள் சிறிது
உப்பு -தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாகற்காயை கழுவி நறுக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் மசித்து சூப்பை மட்டும் வடிகட்டவும். பின் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் மசித்து சூப்பை மட்டும் வடிகட்டவும். பின் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
ஆரோக்கியம் தரும் எளிய நீரிழிவு சமையல்
திருமதி. அன்னம் செந்தில்குமார்
மேலும் தெரிந்து கொள்ள…