உலகம் பலதுறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு இன்னும் காணப்படவில்லை யென்றாலும், சிகிச்சை முறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது நீரிழிவை சமாளிப்பது சிறிது சுலபமாகி வருகிறது.
1. உணவு கட்டுப்பாடு:- நீரிழிவுக்கு ‘பத்திய’ உணவு அவசியம் என்பது தொன்று தொற்று ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம். தற்போது நீரிழிவுக்கென்று தனிப்பட்ட பிரத்யேக உணவு தேவையில்லை என்ற நிலை வந்துவிட்டது. வழக்கமான 1800 கலோரி உணவுப் பட்டியலில் பல மாற்று உணவுகள் இடம் பெறுகின்றன. உணவின் ‘அளவு’ (அதாவது ஒவ்வொரு பங்கின் அளவு) கண்காணிக்கப்பட்டால் போதும்.
2. புதிய மருந்துகள்:– கடந்த வருடத்தில் மூன்று புதிய வகை இன்சுலீன்கள் அறிமுகமானியுள்ளன. அவை அபிட்ரா லேவெமிர், ஹீமலாக் மிக்ஸ் 50/50 என்பவை. எக்ஸீபரா எனும் நுகரும் இன்சுலீன் தல் முறையாக விற்பனைக்கு வந்திருக்கிறது. தற்போது மொத்தம் 10 வகை இன்சுலீன்கள் கிடைக்கின்றன. 5 வகை வாய்வழி மற்றும் 17 வகை வித்தியாசமான மருந்துக்கலவைகள் கிடைக்கின்றன. இரண்டு வகை இன்சுலீன் இல்லாத, ஊசி வழி மருந்துகள் – இன்க்ரெடின் மிமெடிக்ஸ் மற்றும் அமிலின் அனலாக் என்ற புதிய மருந்துகள் வந்திருக்கின்றன. தற்போது மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் இன்சுலின் வகைகள், ஹியூமன் மற்றும் அனலாகுகள் ஆகும். அனாலகுகள் நவீன இன்சுலின்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை தான் தற்போது மருந்துகடைகளில் கிடைக்கக்கூடிய சமீபத்திய இன்சுலின் வகையாகும். டாக்டருக்களுக்கோ புதிது புதிதாக வரும் மருந்துகளைப் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள பயிற்சி தேவை. நீரிழிவு நிபுணர்களின் அறிவு விசாலமாகி வருகிறது.
3. கருவிகள்:- வீட்டிலேயே இரத்தச் சர்க்கரையை பரிசோதிக்க பயன்படும் மீட்டர்கள் புதிய “டிஜிடல்” நுட்பத்துடன் இப்போது தயாரிக்கப் படுகின்றன. இவற்றால் 10 வினாடிகளில், மிக்சிறிய அளவு இரத்தத்தை பரிசோதித்து, சர்க்கரை அளவை காட்ட முடியும்! உடலின் எந்த பாகத்திலிருந்தும், (கைவிரல்கள் மட்டுமின்றி) ரத்தத்தை எடுத்து பரிசோதிக்கலாம். முடிவுகளை கம்ப்யூடரின் உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் தற்போது வைத்திருக்கும் மீட்டர் ஜந்து வருடங்களுக்கு முன் வாங்கினதாக இருந்தால், அதை மாற்றவும்.
4. இன்சுலீனை “போட்டுக்கொள்ள” உபகரணங்கள்:- இன்சுலீன் “பேனாக்கள்” இருந்தாலும், இன்னும் ஊசி போட்டுக் கொள்ளும் முறையே அதிகம் காணப்படுகிறது. இப்போது இன்சுலீன் பேனாக்கள் கையடக்க சைஸில், சுலபமாக எங்கும் கொண்டு செல்லும்படி தயாரிக்கப்படுகின்றன. இன்சுலீன் அளவை பெலிபோனில் டயல் செய்வது போல, சுலபமாக டயல் செய்து கொள்ளலாம்.
1980 ல் தயாரிக்கப்பட்ட பெரிய சைஸ் இன்சுலீன் பம்புகள் தற்போது மறைந்து, சிறிய, சைஸில் கிடைக்கின்றன. இவை ஒரு நாள் தேவைக்கேற்ப இன்சுலீனை ரத்தத்தில் சேர்ப்பதால், க்ளூக்கோஸ் கன்ட்ரோல் சரியாக செய்யமுடிகிறது. இந்த கருவிகளில் அவ்வப்போது இரத்த க்ளுகோஸ் அளவுகள், இதர தகவல்கள் இவற்றை பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். ஆடோமாடிக்காக உணவுக்கு முன் எவ்வளவு அளவு இன்சுலீன் தேவையென்று கணிக்க முடியும். இதை உபயோகிக்க வயது ஒரு தடையில்லை. இந்த பம்புகளை பற்றி மேலும். அறிய, நீரிழிவுக்கென உள்ள பெரிய “சூப்பர்” மருந்துக்கடைகளை அணுகவும். காலம் மாறி விட்டது. இது நல்லது தான். பெருகிவரும் முன்னேற்றங்களால் பயனடைவது புத்திசாலித்தனம்.
ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.