டைப் 1
குழந்தைகளுக்கு, கணையம் குறைந்த அளவு இன்சுலின் தருதல், அல்லது இன்சுலினே இல்லாமல் போனால் ஏற்படும் டைப் – 1 டயாபடிஸை “பால்ய பருவ டயாபடிஸ்” (Juvenile diabetes) என்று சொல்லப்படுகிறது.
டைப் 1 டயாபடிஸ், பிறந்த குழந்தையிலிருந்து பால்ய பருவம் முழுதும் இருக்கும். சாதாரணமாக 6 வயதிலிருந்து 13 வயது வரை இந்த டயாபடிஸ் ஆதிக்கத்தில் இருக்கும்.
இளமை பருவ நீரிழிவு நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்குவது அரிது. குழந்தைகளில் 2 வயதிற்குள் வருவது மிகவும் அரிது.
அறிகுறிகள்
அதிகமாக அடிக்கடி சிறுநீர் போதல், அதீத தாகம். நீர்மசத்து குறைந்து விடும். இதனால் சோர்வடைந்து பலவீனம், அதிக நாடித்துடிப்பு இவை ஏற்படும். கண் பார்வை மங்கும் பெண் குழந்தைகளுக்கு ஈஸ்ட் தொற்று நோய்கள் ஏற்படலாம். பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரில் சர்ககரையின் மற்றும் கேட்டொன் இருக்கும்.
டைப் 1 நீரிழிவு மெலிந்த குழந்தைகளை பாதிக்கும். எடை குறைவு ஏற்படும். இது ஒரு அறிகுறி.
பரம்பரையாக டைப் 1 வருவது நீரிழிவு பெற்றோர்களின் மொத்தத்தை எடுத்துக் கொண்டால், அதில் 5 சதவிகிதம் தான்.
டைப் – 1 டயாபடிஸ் இருக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒன்றுக்கு டயாபடிக் கெடோ அசிடோசிஸ் வரும். இதனால் இரத்த அமிலம் அதிகமாகி வாந்தி, பிரட்டல், வயிற்றுவலி ஏற்படும். கேடே அசிடோசிஸ் தாக்குதல் சில மணிநேரங்களிலேயே ‘கோமா’ வை (மயக்கம்) உண்டாக்கி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
பத்திய உணவு, உடற்பயிற்சி, உடல் எடை குறைப்பு இவைகள் பலன் தரும் சிகிச்சை. ஆனால் டைப் 1 வியாதி வருவதை தடுக்க இயலாது. தினசரி இன்சுலீனை ஊசி மூலம் ஏற்றிக்கொள்வது தவிர்க்க முடியாது.
சர்க்கரை வியாதி உள்ள குழந்தைகளுக்கு, டைப் –1 ஆக இருந்தால் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி வரும். இன்சுலினேயே நம்பி இருப்பதால், சில நாள் ஆஸ்பத்திரி வாசம் தேவைப்படும். பிறகு வீட்டினிலேயே சர்க்கரை அளவுகளை பரிசோதிக்கலாம். முக்கியமாக சிகிச்சை முறை, உணவுகளை பற்றி டாக்டரிடம் கேட்டே செயல்படுத்த வேண்டும். குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படலாம். சிகிச்சை முறைகளை டாக்டர் அறிவுரைப்படி மேற்கொள்ள வேண்டும்.
டைப் 2
குழந்தைகள் குண்டாக இருந்தால் தான் அழகு என்பார்கள். குழந்தைகளானாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி – அதிக உடல் பருமன் சர்க்கரை வியாதிக்கு முக்கிய காரணமாகும். அதிக அளவு அடிபோஸ் செல்கள் (adipose cells) இருந்தால் இன்சுலீனுக்கு தடையும் எதிர்ப்பும் அதிகரிக்கும்.
குழந்தைகளின் எடை, நார்மலாக, உயரத்திற்கேற்ற எடையை விட 120 சதவிகிதம் அதிகமிருந்தால் இந்த குழந்தைகளை டைப் 2 வியாதி தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நெருங்கிய உறவினர்களுக்கு டைப் / 2 டயாபடிஸ் இருந்தால் ரத்த சர்க்கரை அளவு 126 மி.கி. அல்லது அதற்கு மேல் இருந்தால், குழந்தைக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டதாகும். பரம்பரை தான் 95 சதவிகிதம் நீரிழிவை உண்டாக்குகிறது.
பருவக்காலத்தில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த சமயத்தில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவுகள் ஏறுமாறாக ஆனால் இன்சுலீனுக்கு எதிர்ப்பு உண்டாகும். தவிர இன்சுலீன் சுரப்பும் குறைந்து விடும். எனவே பருவக்கால மாறுதல்கள் இளைஞர் இளைஞிகளுக்கு நீரிழிவு நோயை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
அறிகுறிகள்
தாகம், அடிக்கடி சிறுநீர் போதல் போன்றவை முக்கிய அறிகுறிகள். இவை உடனே தெரியாமல் போகலாம்.
டைப் 2 நீரிழிவு உள்ள சிறுவர்களின் 90% சிறுவர்களுக்கு தசை மடிப்புகளின் (கால், கை விரல்களின் நடுவே அல்லது கழுத்தின் பின் பாகம்) – இவற்றில் கருப்புத் திட்டுக்கள் (Patches) தோன்றும். இது Acanthosis nigricans எனப்படும். இது இருந்தால் உடனே டாக்டரை அணுகவும்.
PCOS (Polycystic Ovary Syndrome) எனும் பிரச்சனை பெண்களுக்கு இருக்கும்.
டைப் – 2 டயாபடிஸ் குழந்தைகளை விட வயது வந்தவர்களையே அதிகம் பீடிக்கும். இருந்தாலும் தற்போது குழந்தைகளுக்கு டைப் – 2 நீரிழிவு வருவதும் சகஜமாகிவிட்டது. சராசரியாக 13 1/2 வயதுள்ள இளவயதினர்களை டைப் – 2 நீரிழிவு தாக்குகிறது. இளைஞர்களை விட இளவயது பெண்கள் சிறிதளவு அதிகமாக நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள்.
Mody – இளஞர்களுக்கு வரும் முதிர்ச்சியடைந்த நீரிழிவில் ஆரம்பம்
(Maturity onset diabetes of the young) இது 25 வயதுக்குள் உண்டாகலாம். ஆபூர்வமாக ஏற்படும் நீரிழிவு. மரபணுக்களின் பிறவிக் கோளாறு. அறிகுறிகள் – சிறிதளவு அதிகமாகும் ரத்தச் சர்க்கரை அறிகுறியிலிருந்து தீவிர அதிக சர்க்கரை அளவு வரை அதிகமாதல்.
இளவயது நீரிழிவு
டைப் 1 நீரிழிவுள்ள குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் செய்ய
3 மாதத்திற்கு ஒரு முறை – டாக்டரிடம் போவது, டயட்டீசியனிடம் போவது,
பிதீ கிமிசி பரிசோதனை
1. அடிக்கடி செய்ய வேண்டியது – உணவுக்கு முன்னும், படுக்கம் முன்பு,
இரத்த சர்க்கரை அளவு.
2. வருடம் ஓர்முறை – கண் பரிசோதனை, 12 வயதுக்கு உட்பட்ட
சிறுவர்களுக்கு மைக்ரோ
அல்புமினியூரியா, கொழுப்பு அளவுகள்,
உயரம், பருமன்
உங்கள் குழந்தைகளுக்கு நீரிழிவு நோயிருந்தால் தினசரி கொடுக்க வேண்டிய இன்சுலீன், மாத்திரைகள் இவைகளை தவறாமல் சரியான அளவில் சிறுவர்கள் உட்கொள்வதை கண்கானிக்க வேண்டும்.
டயட் டீசியனை அணுகி குழந்தைக்கேற்ற உணவு வகைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதி துரித (Fast) உணவுகளை தவிர்க்கவும்.
சிறுவர்களை நடக்க ஊக்குவிக்க வேண்டும். நீங்களும் கூட செல்லுங்கள்.
டி.வி. விடீயோ விளையாட்டுகள், கம்ப்யூட்டர் இவைகளை குறிப்பிட்ட மணி நேரங்களில் மட்டுமே பார்க்க, உபயோகிக்க விடுங்கள்.
சிறுவர்களிடம் நீரிழிவு அடையாள அட்டை இருப்பது அவசியம்.
சிறுவர்களின் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு உங்கள் குழந்தை / சிறுவர் நீரிழிவு நோய் உள்ளவர் என்பதே தெரிவியுங்கள். தாழ் நிலை சர்க்கரை (Hypoglycemia) அதிக நிலை சர்க்கரை (Hyperglycemia or Ketoacidosis) இவை நேர்ந்தால் என்ன செய்வது என்றும் விளக்கமாக சொல்லுங்கள்.
அடிக்கடி ரத்த சர்க்கரையின் அளவை பரிசோதிக்க வேண்டும்.