நீரிழிவு தினசரி பரிசோதனைகள்

Spread the love


நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிக்கிறீர்கள். உடற்பயிற்சி செய்வதையும் தவறாமல் செய்கிரீர்கள். மருந்துகளை மறக்காமல் சாப்பிடுகிறீர்கள். உங்களின் இந்த கட்டுப்பாட்டுக்கு பலன் என்ன என்று தெரிய, பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். ஏதாவது மாற்றங்கள் (அதிக க்ளுகோஸ் / தாழ்நிலை க்ளுகோஸ்) இருந்தால், சிகிச்சை முறைகளும் மாறும்.
சிலர் தினசரி ஒரு தடவை ரத்த சர்க்கரை அளவை ‘செக்’ செய்து கொள்வார்கள். சிலர், 3-4 தடவை செய்து கொள்வார்கள். பொதுவாக உணவுக்கு முன்னும், பின்னும், படுப்பதற்கு முன், மற்றும் நள்ளிரவிலும் பரிசோதித்துக் கொள்ளலாம். இதற்கான இரத்த க்ளுகோஸ் மீட்டர் கருவிகள் கிடைக்கின்றன வீட்டிலேயே இவைகளால் பரிசோதித்துக் கொள்ளலாம். உங்களுக்கு ஏற்ற உபகரணத்தை டாக்டர் சொல்லுவார்.
இரத்த சர்க்கரை அளவைத் தவிர, சிறுநீர், பரிசோதனைகளும் தேவைப்படலாம். தினசரி செய்ய தேவையில்லாவிட்டாலும், சில அறிகுறிகள் ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். வாந்தி, வேகமாக மூச்சுவிடல், மூச்சில் ஒரு வித இனிமையான வாசனைபோல) – இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து. இது கேடோஅசிடோசிஸ் எனும் அபாய நிலை. சிகிச்சை செய்யாவிட்டால், உயிர் பறிபோகலாம். இது கேடோன் எனும் அசிடோன் பொருட்கள் ரத்தத்தில் அதிகமாகிவிட்டால் ஏற்படும் பாதிப்பு. இன்சுலீன் போதாதால், கேடோன் அதிகரித்துவிடும். கேடோன் உங்களை அபாயத்தில் ஆழ்த்தி விடும். உடனே டாக்டரிடம் / ஆஸ்பத்திரி செல்ல வேண்டும்.
கேடோன் டெஸ்ட் செய்ய சிறு நீர் டெஸ்ட் ஸ்ட்ரிப்புகள் கிடைக்கின்றன. இவற்றை கைவசம் வைத்திருங்கள்

தினசரி பரிசோதனைகள் தவிர


ஏ 1 சி (கி1சி) என்ற சோதனையை வருடம் இருமுறை செய்துகொள்ளவும். இதை ஹேமோகுளோபின் ஏ 1 சி டெஸ்ட் என்றும் சொல்வார்கள். இந்த நல்ல பரிசோதனை, ரத்த சிவப்பணுக்களை ஒட்டிக் கொண்டு எவ்வளவு குளுக்கோஸ் இருக்கிறது என்பதை காட்டும். கடந்த 3 மாதங்களில், குளுக்கோஸ் லெவலை தெரிவிக்கும். இது 7 க்குள் இருந்தால், உங்கள் டயாபடீஸ் கட்டுக்குள் இருக்கிறது என்ற அர்த்தம். 8 க்கு மேல் இருந்தால் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது – சிகிச்சை முறையில் மாற்றங்கள் தேவை. இல்லாவிடில் சிறு நீரகம் பாதிப்படையும்


தினந்தோறும் குறித்து வைக்கவும்

ஒரு டயரி அல்லது நோட் புஸ்தகத்தில், இரத்த சர்க்கரை அளவு போன்ற விவரங்களை குறித்து வருவது அவசியம். என்ன உணவு உட்கொண்டீர்கள், பாதிப்புகள், செய்த பயிற்சிகள் போன்றவற்றை எழுதி வைக்கலாம். இந்த குறிப்பு உங்கள் சிகிச்சைக்கும், டாக்டருக்கும் மிக உதவியாக இருக்கும். நீங்கள் குறிப்பிட வேண்டிய விவரங்கள்.
· இரத்த க்ளுக்கோஸ் பரிசோதனையின் முடிவுகள்.
· நீரிழிவு மருந்துகள்:- எடுத்துக் கொண்ட அளவுகள், வேளைகள்
· இரத்த சர்க்கரை குறைந்திருந்ததா?
· உட்கொண்ட உணவின் அளவு, வேளைகள்
· உடல் நிலை பாதிப்புகள், இருந்தால்
· உங்கள் சிறுநீரில் கேடோன் இருந்ததா?
நீரிழிவு உங்கள் வாயை பாதிக்கும்
உங்களுக்கு நீரிழிவு நோயிருந்தால், வாயை கவனித்துக் கொள்ளுங்கள். நீரிழிவால் ஈறுகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பெரியே டொன்டல் என்ற ஈறு நோய் உண்டாகும். இதனால் பற்கள் பலவீனமடைந்து விழுந்துவிடலாம். இந்த வியாதி வந்தால், இரத்தக்ளுகோஸ் அளவை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும்.

நீரிழிவு உண்டாக்கும் இதர பாதிப்புகள் – வாய் உலர்ந்து போதல், மற்றும் த்ரஷ் என்ற ஃபங்கஸ் (திuஸீரீus) நோய். உமிழ்நீரின் சர்க்கரை அளவும் அதிகரித்துவிடும். இதனால், த்ரஷ் பாதிப்பால், வலியுடன் வெண்மை எனப்படும்.
இவற்றை தடுக்க, இரத்த சர்க்கரை அளவை நிலைக்கு கொண்டு வர வேண்டும். பற்களை சுத்தமாக வைக்க வேண்டும். அடிக்கடி பல் டாக்டரிடம் செல்ல வேண்டும்.

கீழ்கண்டவற்றை பின்பற்றவும்
· ரத்த குளுக்கோஸ் அளவை ‘கன்ட்ரோல்’ செய்யவும்.
· தினமும் பற்களை தேய்க்கவும். முறையால் சுத்தம் செய்யவும்.
· உங்கள் பல் டாக்டரிடம் நீங்கள் நீரிழிவு நோயாளி என்பதை தெரிவிக்கவும். அடிக்கடி பற்களை செக் செய்து கொள்ளவும்.
· நீங்கள் செயற்கை பற்களை பொருத்தியிருந்தால், அவை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளவும்.
· புகைப்பதை விடுங்கள். புகை பற்களை, வாயை, பாதிக்கும்.

நீரிழிவு – கால்களை கவனியுங்கள்
நீரிழிவின் கொடூர தாக்கம் கண்கள், கால்கள், இவற்றின் மீது தீவிரமாக இருக்கும். நரம்புகளை நீரிழிவு சிதைந்து விடுவதால், காலில் காயம்பட்டாலோ, இல்லை கொப்புளம் வந்தாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு தெரிவதில்லை.

கால்களை பாதுகாக்க சில யோசனைகள்
· வெதுவெதுப்பான நீரில் கால்களை கழுவவும். சுடுநீர். வேண்டாம். நீருக்குள் கால்களை ஊறவைக்க வேண்டாம். சருமம் உலர்ந்து விடும். காலை கழுவினால் போதும்.
· நன்றாக, ஈரம் போக கால்களை துடைக்கவும். விரல்களின் நடுவே ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். கால் விரல்களின் நடுவே டால்கம் பவுடரை உபயோகிக்கவும்.
· கால் ஆணி, காய்ப்பு, இவற்றை வெட்டாதீர்கள். ப்ளேட், ரேசர், ஆணி எடுப்பானிகள் முதலியவற்றை உபயோகிக்க வேண்டாம். இவை உங்கள் தோலை பாதிக்கும்.
· கால்களை கழுவி, துடைத்ததும், கால் நகங்களை வெட்டவும். நகமூலைகளை வெட்டாமல் கவனமாக இருக்கவும்.
· காலணி இல்லாமல் – வீட்டுக்குள் கூட நடக்க வேண்டாம். நல்ல ஸாக்ஸையும், ஷீவையும் அணியவும். ஷீ மிருதுவாக, சரியான அளவுடன் இருக்க வேண்டும். இறுக்கமான காலணிகளை தவிர்க்கவும். இதனால் ரத்த ஒட்டம் பாதிக்கப்படும். உட்காரும் போது கால்களை தூக்கிவைத்துக் கொள்ளவும்.
தினமும், இரண்டு, மூன்று முறை கால் விரல்களை, 5 நிமிடம் முன்னும் பின்னும் ஆட்டவும். கணுக்காலையும் தூக்கி இறக்கி பயிற்சி செய்யவும். ரத்த ஒட்டம் சீராகும்

ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார்.


Spread the love