நீரிழிவு + சிறுநீரக நோய் இதயத்துக்கு ஆபத்து

Spread the love

சிறுநீரகச் சிக்கலுடன் கூடிய நீரிழிவு நோயால் இதய நோய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கருப்பு அமெரிக்கர்களிடையே சுமார் 15 சதவீதம் பேர் மேற்கூறிய நோய் காரணங்களினால் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் கருப்பு அமெரிக்கர்களிடையே பொதுவாக காணப்படுகின்றது. நீரிழிவு நோய் மட்டும் உள்ளவர்களில் 2 சதவீதம் பேர் வருடம் ஒன்றிற்கு இதய நோய் கண்டு மரணமடைய வாய்ப்புள்ளதாகவும், அதுவே சிறுநீரகப் பாதிப்புள்ள நோயாளிகள் இதய நோய் கண்டு 7 சதவீதம் பேர் மரணம் அடைய வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், நீரிழிவு, சிறுநீரக நோய் இரண்டும் உள்ளவர்களின் நிலையில் 15 சதவீதம் பேர் இதய நோயால் மரணம் அடைகிறார்கள். இது என்ன காரணத்தால் ஏற்படுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கவில்லை. மேற்கூறிய இரண்டு நோய்களும் இதய நோய் அதிகரிக்க 3 மடங்கு வாய்ப்பாகவும், பக்கவாதம் ஏற்பட 6 மடங்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love