சர்க்கரை நோயும், வாழ்வியல் நெறியும்

Spread the love

நாட்டில் மிகவும் அச்சுறுத்தக்கூடிய நோய் சர்க்கரைநோய். இப்போது இருப்பதைவிட நோயாளிகள் 10 ஆண்டுகளில் இருமடங்காக ஆவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பத்தாண்டில் இப்போது இருப்பதைக் குறைப்பதற்காக எந்த ஆராய்ச்சியும் இருப்பதாக தெரியவில்லை.

என்னை பொறுத்தவரையில் வாழ்வியல் நெறியை கடைபிடித்தாலே மக்கள் சர்க்கரையின்றி வாழலாம். அவசர வாழ்க்கையினால் எவை தேவையானது, தேவையற்றது என்று தெரிந்தவர்கள்கூட அதை கடைபிடிக்காமல் இந்த சர்க்கரைநோய்க்கு சாகும்வரை மருந்து சாப்பிட்டுக் கொண்டு உள்ளார்கள்.

நான் கீழே குறிப்பிடுவது வாழ்வியல் நெறியை கடைபிடிப்பது மட்டும்மல்லாமல் இந்நோய் வராமல் இருப்பதற்கும் வந்தால் போக்குவதற்கும் உணவுமுதல் மருந்துவரை மற்றும் பல நடைமுறைகளையும் கூறுவதால் பழக்கப்பட்டவைகளுக்கு நான் எதிர்மறையாய் சொல்வதாக யாரேனும் எடுத்துக் கொள்ளாமல், அதன் உட்பொருள் வரை கேட்கும் கேள்வியாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

1. ‘சுகர் என்ற டயாபடீஸை’ சித்தர்கள் மதுமேகம் என்றனர்.

2. மது என்றால் தேன், மேகம் என்றால் இருபால் உறவால் வரும் நோய்.

3. உண்டவுடன் உடலுறவு கொண்டால் கணையம் பாதித்து வருகிறது.

4. இக்காலத்தில் அளவுக்கு அதிக உணவு மற்றும் குறைந்த உழைப்பால் இந்நோய் வருகிறது.

5. அரை கி. மீ சென்று ஒரு பொருள் வாங்க இருசக்கர வாகனம் தேவைப்படுகிறது.

6. உடற்பயிற்சியும் நடைபயிற்சியும் மட்டும் சர்க்கரை நோய்க்கு போதுமானதல்ல.

7. உயரத்திற்கு ஏற்ற எடை என்பதனை முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

8. உணவு கட்டுப்பாடு  சரியான அளவு சிறுதானிய கலவை உணவு, நார்ச்சத்து, உயிர்ச் சத்து மற்றும் தாதுப்புக்கள் நிறைந்த சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.

9. சிறியவர் முதல் பெரியவர் வரை உட்கொள்ளும் உணவின் கலோரி அளவில் கவனம் தேவை.

10. உலகமே ஏற்கும் சித்தர்கள் கூறிய அறுசுவை உணவே தமிழர்களின் வாழ்வியல் முறை.

11 அறுசுவையில் ‘கசப்பை’ பலரும் நடைமுறைப்படுத்த கனவிலும் நினைப்பதில்லை.

12 இனிப்பை மட்டும் பல குடும்பங்களில் அதிக அளவு பயன் படுத்துகின்றனர்.

13. உப்பு,  காரம் புளிப்பின் ஏற்றக்குறைவை கட்டுப்படுத்துகிறோம். இனிப்புக்கு மட்டும் கட்டுப்பாடு இல்லை.

14. அனுபவம் பெற்ற மருத்துவர்கள் சுகர் கட்டுப்பாட்டில் இருக்க கூறும் யோசனைகளையும் முழுமையாக நோயாளிகள் பின்பற்றுவதில்லை.

15. அதனால் மருத்துவர்கள் சுகர் குறைய மட்டும் மருந்துகள் தருகிறார்கள்.

16. காலை 250 மி.கி சுகர் 1 மாத்திரை மூலம் 120 ஆக குறைகிறது. 2மணி நேரத்தில் 150க்கு மேல் அப்படியே இரவுவரை  250 ஆக உயர்ந்து நிலை கொள்கிறது. இரவு 1 மாத்திரை சாப்பிட்டால் மீண்டும் 120 ஆக குறைகிறது. இதனால் சராசரி ஒருமனிதன் 4 மணி நேரம் தான் சுகர் கட்டுப்பாட்டில் இருக்க முடிகிறது.

17. மற்ற 20 மணி நேரமும் சிறப்பு சிகிச்சை பெறுவோர் கூட சுகர் கட்டுப்பாட்டை மீறி உள்ளதாகத் தெரிகிறது.

18. அனைவருமே 20 மணிநேரம் உயர்சர்க்கரை அளவோடு இருப்பதால் கண்முதல் பாதம் வரை பாதிப்படைகிறது.

19. சுகர் கட்டுப்பாட்டில் இருப்பதற்கும் வராமல் தடுப்பதற்கும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை செயல்முறைபடுத்தி காப்பது நோயாளிகளின் கடமையே.

20. பொது அறிவுடைய கல்வியாளருங்கூட சுகரை அதிகரிக்காமல் இருக்க தெரிந்து தெளிவு பெற்றிருந்தாலும்  அவசர வாழ்க்கை வேகத்தில் குறைக்க மட்டும் மருந்து உண்டு காலந்தள்ளுகிறார்கள்.

21. மக்கள் மனநிலை உணர்ந்த மருத்துவர்களும் பலவகையில் முடக்காமல் கட்டுப்படுத்தாமல் மகிழ்வோடு இருக்க சுகர் கட்டுப்பாட்டில் இருக்கமட்டும் மருந்து தருகிறார்கள்.

22 நாட்குறிப்பில் வரவு  செலவு கணக்கு காலச்செலவு  நிகழ்வு குறிப்பதுபோல் உணவில் கலோரி அளவுகளை எழுதிப்பார்க்க வேண்டும்.

23. நெகிழி என்னும் பிளாஸ்டிக் உறை பொருள்களில் லேசான உஷ்ணம் கூட சுகர் புற்று போன்ற பல நோய்கள் வரவாய்ப்புள்ளது.

24. பசுமைப் புரட்சி என்ற பெயரில் வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் மிகையாகப் பயன்படுத்தி அதில் விளைந்த உணவுப்பொருட்களை உண்பதால் கணையம் பாதிக்க வாய்ப்புள்ளது.

25. ஒருநாள் கூட தாங்காத பால், மீன், இறைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தி


Spread the love