நீரிழிவு நோயால் மனச் சோர்வு ஏற்படுகிறது என்ற கருத்து, பல ஆண்டுகளாக உள்ளது. மனச்சோர்வும் நீரிழிவு நோயை தூண்டி விடும் என்பதை சமீப கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு இல்லாதவர்களை விட, நீரிழிவு உள்ளவர் களுக்கு மனச்சோர்வு ஏற்படும் அபாயம் 3 அல்லது 4 மடங்கு அதிகம்.
எது முதலில் வந்தாலும் சரி, நீரிழிவு + மனச்சோர்வு ஒரு அபாயமான இரட்டை பிரச்சனை. இரண்டையும் கட்டுப்பாட்டில் வைப்பது கடினம். இதனால், இதய பாதிப்புகள், கண் கோளாறுகள், நரம்பு கோளாறுகள் ஏற்படலாம். ரத்த சர்க்கரையை விட மனச்சோர்வு இதயத்தை பாதிக்கும் அபாயம் அதிகம்.
மனச்சோர்வால் டயாபடீஸ் வரும் என்கிறோம். அப்படியானால் மனச்சோர்வை குணப்படுத்தினால் நீரிழிவு நோய் மறையுமா? இதைப்பற்றி டாக்டர் பேட்ரிக் லஸ்ட்மேன் என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் பல ஆய்வுகளை நடத்தினார். அவர் கண்ட முடிவுகள், மனச்சோர்வுக்காக கொடுக்கப்படும் மருந்துகளால், நீரிழிவு வியாதியும் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. மருந்துகளில்லாத, மனச்சோர்வுக்கு செய்யப்படும் Cognitive behaviour therapy நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது. எனினும் இந்த ஆராய்ச்சிகள் போதாது. மேலும் ஆய்வுகள் தேவை.
மனச்சோர்வு டைப் 2 நீரிழிவு நோயைத்தான் தூண்டுகிறது. டைப் – 2 நீரிழிவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் சில ஆய்வுகள், டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் 42% அதிகம் என்கின்றன.
மனச்சோர்வின் அறிகுறிகள்
தொடர்ந்து துக்கமாகவே இருப்பது, விரக்தி, தன்னம்பிக்கை இழத்தல், தன்னை தானே சாடிக் கொள்வது, குற்ற உணர்வு, தான் ஒன்றுக்கும் உதவாதவன், கையாலாகாதவன் என்று வருத்திக் கொள்ளும் மனப்பான்மை, நம்பிக்கை இன்மை, தீமையே ஏற்படும் என்று எதிர்பார்க்கும் சுபாவம், எல்லாம் கெட்டவை என்ற எண்ணம், எதிலும் நாட்டமின்மை, பாலுணர்வு இல்லாமல் போதல், முடிவுகள் எடுக்க முடியாமை, அதீத களைப்பு, சோர்வு, சக்தியின்மை, எப்போதும் எரிச்சல் வருவது, நரம்புத் தளர்ச்சி, தற்கொலை எண்ணங்கள், ‘உலகே மாயம், வாழ்வே மாயம் என்ற எண்ணங்கள், உடல் உபாதைகள், மருந்து கொடுத்தாலும் தணியாத நோய்கள், பசியின்மை அல்லது அதிகமாக சாப்பிடுவது என்று மனச்சோர்வின் அறிகுறிகள் பட்டியல் நீளும்.
தூக்கமின்மை.
மனச்சோர்வு இருக்கும் முதியவர்களுக்கு டைப் – 2 நீரிழிவு வரும் வாய்ப்புகள், மனச்சோர்வில்லாத நீரிழிவு நோயாளிகளை விட 60% அதிகம். உடல், வளர்சிதை மாற்றத்திற்காக (Metabolism) சில ஹார்மோன்களை சுரக்கிறது. மனச்சோர்வு ஏற்படும்போது, உண்டாகும் ஹார்மோன்கள் இன்சுலினை எதிர்க்கின்றன. இதனால் இன்சுலின் குறைபாடு உண்டாகி, நீரிழிவு நோய் உண்டாகிறது.
முதியவர்கள் நீரிழிவையும் மனச்சோர்வையும் தவிர்க்க, நீரிழிவை தடுக்கும் வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சமச்சீர் உணவு உதவும். பழங்கள், கொட்டைகள், (பாதாம் போன்ற) இவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவும். மது அருந்துவது, புகைபிடிப்பது கூடாது. சுறுசுறுப்பாக வாழவும். நடைப்பயிற்சி நல்லது. ஆன்மீக விஷயங்களில் பங்கெடுப்பது மனதுக்கு தெம்பையும், மகிழ்ச்சியையும் தரும்.
42 சதவீதம் அதிகம்
மனச்சோர்வு டைப் 2 நீரிழிவு நோயைத்தான் தூண்டுகிறது. டைப் – 2 நீரிழிவும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் சில ஆய்வுகள், டைப் – 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் 42% அதிகம் என்கின்றன.