ஒரு காலத்தில் சர்க்கரை வியாதி பணம் படைத்தவர்களை மட்டும் தான் தாக்கி வந்தது. இதனோடு இரத்த அழுத்தமும் சேர்ந்து கொண்டது. ஆனால், இன்று இவ்விரண்டும் ஏழை, பணக்காரன், என்ற வித்தியாசமின்றி தாக்கி பெரும் ஆட்கொல்லி நோய்களாக உருவெடுத்துவிட்டன.
இதற்குக் காரணங்கள் என்ன?
1950&60 களில் வாழ்க்கை முறை நிதானமாக, அமைதியாக நடந்தது. பதட்டமில்லா வாழ்க்கை, எளிய உணவு, நீண்ட நடைப் பயணம், வேண்டிய உடலுழைப்பு, கலப்படமற்ற, பூச்சிக் கொல்லிகள் சேராத காய்கறிகள், உணவுப் பண்டங்கள், தொழில் ரீதியில் சச்சரவு இல்லாமை போன்றவை நம்மை நல்ல ஆரோக்யத்துடன் வைத்திருந்தன.
ஆனால், நாம் இன்று காண்பது என்ன?
அவசர கதியில் இயங்கும் அன்றாட வாழ்க்கை, நடையில்லாப் பயணம், கலப்பட, பூச்சிக்கொல்லி மருந்தேறிய காய்கறிகள், குடும்பத்தில், அமைதியின்மை, எதிலும் போராட்டம், போட்டி, சண்டைகள் நம் வாழ்க்கையை பாதித்து ஒவ்வொருவரும் நோய் கிடங்காக மாறிவிட்டோம். ஓய்வில்லா உழைப்பு வாழ்க்கை பல வியாதிகளை வரவழைத்து விட்டன.
ரத்தக் கொதிப்பு, முன்பு பெண்களைத் தாக்காமலிருந்தது. இன்று பெண்களும் அதனால் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை வாயில் புற்றுநோய், மார்பகங்களில் புற்று நோய், என்றெல்லாம் அவர்கள் அவதிப்படுகின்றனர். சர்க்கரை வியாதியும் அவர்களை விடவில்லை. இந்த நான்கு நோய்களால் நம் நாட்டில் 58 சதவீத மரணங்கள் ஏற்படுகின்றன என்று அரசு புள்ளி விவரம் சொல்கிறது. தமிழக அரசு இவற்றை ‘தொற்றில்லா நோய்கள்’ அதாவது ழிளிழி-சிளிவிவிஹிழிமிசிகிஙிலிணி ஞிமிஷிணிகிஷிணிஷி என்று அறிவித்துள்ளது. இவ்வியாதிகளைத் தடுக்கவும், வந்தபின் சிகிச்சை பெற ழி.ஜி.சி., சிலிமிழிமிசி என்ற சிகிச்சை மையம் உள்ளது. 2001 மார்ச் மாதம் சென்னையில் இம் மையம் தொடங்கப்பட்டு, 2014 முதல் உலக வங்கியின் பொருளுதவியுடன் அனேக மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் நோக்கமென்ன? அனேக பேர் இந்நோய்கள் இருப்பதறியாமல் உள்ளனர். அவர்கள் உணவுக் கட்டுப்பாடோ, மருத்துவ பரிசோதனையோ இல்லாமல் தவிக்கின்றனர். இவர்களைக் காப்பதே இம் மையங்களின் நோக்கம் ஆகும். இதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிகின்றனர்.
வயதானவர்களைவிட நடுத்தர வயதினரே அதிகம் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த இரத்த அழுத்தத்தினால் வரும்.
இதய நோயை இரண்டு வகையானது, ஒன்று மாற்ற முடிந்தது, மற்றொன்று மாற்ற முடியாது. அதாவது காரணங்கள் ஆபத்தில் முடியலாம், அல்லது ஆபத்தில் முடியாமல் மாற்றலாம் என்பதாகும். ஒரு நபரின் வயது, பாலினம், பரம்பரையைப் பொறுத்து நோய்களுக்கான காரணங்கள் அமையும். இவற்றை மாற்ற முடியாது. மற்றொன்றில் உணவில் மாற்றம் செய்து சில பயிற்சிகளால் உடல்நிலையை மாற்றி, சீராக வைத்துக் கொண்டால் ஆபத்து அதிகம் இருக்காது. உதாரணமாக கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளாதிருத்தல், நல்ல உடல் பயிற்சி, உழைப்பு, உப்பு, காரம், எண்ணெய் போன்றவற்றைக் குறைத்தல் போன்றவை ஆகும். ஊறுகாய், கருவாடு, சிகரெட், பீடி, போன்றவற்றை முழுவதும் விட்டுவிட வேண்டும்.
தியானம், யோகப் பயிற்சி, உடல் பருமனைக் குறைத்தல், மதுவை தொடாதிருத்தல், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ணுதல் போன்றவை உடல் நலத்தை மேம்படுத்தும்.
மேற்கூறியவற்றை மனதில் கொண்டு மாற்ற முடியுமென்பதை மாற்றி, அன்றாட வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றினால், இதய நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த, பொரித்த பண்டங்கள், பாஸ்ட் புட் பண்டங்கள், டின்னில் வரும் உணவுகள், வனஸ்பதியில் செய்த உணவுகள், கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். இவைகள் வேண்டாம். குளிர்பானங்கள், பாக்கெட்டில் பேக் செய்து விற்கப்படும் பண்டங்கள் கேடுவிளைவிக்கும். இவைகளைத் தவிர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்று நோய், மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு மேலே கூறப்பட்ட மையங்களுக்குச் சென்று சிகிச்சை பெறலாம்.
தங்கள் நலன் கருதி, ஆயுர்வேதம் எஸ். செந்தில் குமார்.