மனத் தளர்ச்சிக்கு ஆட்படாதீர்

Spread the love

நாகரீக மிக்க, வளர்ந்த நாடுகளிலுள்ள மக்களிடையே மட்டும் அதிகமாகக் காணப்பட்ட இந்நோய் தற்போது இந்தியர்களிடையேயும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஏறத்தாழ 50 முதல் 60 சதவிகிதம் மக்கள் எப்பொழுதாவது தங்கள் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு இந்நோயின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.

ஜலதோஷம் என்பது எப்படி உடலுக்கு ஏற்படும் சாதாரண உடல் நலக் குறைவோ அதே போன்று மனதில் ஏற்படும் ஒரு வகை மனநலக் குறைவே இம் மனத்தொய்வு. இது இயல்பானது. எவருக்கும் வரக்கூடியது. என்பதை பெரும்பாலோர் உணரத் தலைப்பட்டுள்ளனர். மனத் தொய்வினால் தாங்கள் மகிழ்ச்சி குன்றி இருப்பதைத் தற்போது வெளியில் சொல்லவோ, மருத்துவம் செய்து கொள்ளவோ எவரும் வெட்கப்படுவதில்லை.

அடிக்கடி உடற்சோர்வு, உற்சாகமின்மை , பசியின்மை, ஆழ்ந்த உறக்கமின்மை, தாம் வாழ்வதில் பயனோ பொருளோ இல்லை என்பது போன்றதொரு உணர்வு, வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற உந்துதல் போன்றவை களே இம்மன நோயின் உணர்குறிகள். பாலுறவு உட்பட உலக சுகங்களில் பற்றில்லாது போகின்ற நிலையும் இவர்களிடம் காணப்படும்.

பொதுவாக இம்மனநோய் எவரையும் தாக்கக் கூடியது என்றாலும் இதனால் பாதிக்கப்படு பவர்களில், மூன்றில் இரண்டு பங்கினர் 25க்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே. பள்ளி மாணவர்களையும் சிறுவர்களையும் கூட இது பாதிப்பதுண்டு. சிலர் இதன் தீவிரமான பாதிப்பிற்கு ஆளாகி அல்லல் படுவதையும் காண முடியும்.

மனமகிழ்ச்சி குன்றிய இவ்வகை நோயாளி களிடையே மலச்சிக்கல், தலைவலி, கைகால் வலி, தலைசுற்றல், குமட்டல் போன்ற உடல் தொடர்பு உடைய குறைபாடுகளும் தோன்றக்கூடும்.

வாழ்க்கைத் துணை இழப்பு, மன முறிவு, தம்பதிகளிடையே மனக்கசப்பு, வேலையின்மை, வேலையிழப்பு, பொருள் இழப்பு, நம்பிக்கைத் துரோகம் போன்ற காரணங்களால் மனத் தொய்வு ஏற்படக்கூடும் என்றாலும் பெரும்பாலோருக்கு இது நடைமுறை வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், ஏமாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்றது.

பொதுவாக அட்ரீனல் சுரப்பியின் சுரப்புக் குறைவதே இவ்வகை மனத்தொய்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அடுத்து ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களும், முறைகேடான உணவுப் பொருள்களும் இந்நோயைத் தோற்றுவிக்கலாம்.

வெளிச்சம் இல்லாத இருள் சூழ்ந்த அறைகளில், வீடுகளில், அலுவலகங்களில் வாழ்கின்றவர்களை மனத்தொய்வு எளிதாகப் பாதிக்கிறது. இதை மாற்றுவதற்காக மன நோய் மருத்துவர்கள் இவ்வகை நோயாளிகளை ஒளி மிகுந்த விளக்குகள் சிலவற்றை வரிசையாக வைத்து அவற்றின் முன்னர் தினமும் ஓரிரு மணி நேரம் உட்கார்ந்து இருக்கச் செய்கிறார்கள்.

மனத்தொய்வை நீக்குவதில் உடற்பயிற்சி முக்கிய இடம் பெறுகிறது. அது உடலை நல்ல இயக்கத்தில் துடிப்புடன் வைப்பதுடன் மனதிற்கு உற்சாகத்தையும், அமைதியையும் தருகிறது. உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள ஹார்மோன்களின் அளவினை உயர்த்துவதுடன் பீட்டா எண்டார்பின் (Beta – Endorphins) எனப்படும் மனநிலை மாற்றும் மூளை வேதிகளை அதிகரிக்கச் செய்கிறது. விரைந்த நடைப்பயிற்சி, மெல்லோட்டம், டென்னிஸ், பூப்பந்தாட்டம் போன்றவைகளில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும்.

தவிர, புஜங்காசனம், ஹாலாசனம், சலபாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்களைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நரம்புகளும், தசைகளும் வலுப்படுத்தப்பட்டு உடலும் மனமும் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. அத்துடன் ஆழ்ந்த உறக்கமும் கிடைக்கின்றது.

மனத்தொய்விற்கு ஆழ்நிலை தியானம் சிறந்ததொரு மருந்தாக அமைகிறது. மனதை அலைய விடாமல் ஒரு நிலைப்படுத்துகின்ற போது மனதைச் சூழ்ந்திருக்கின்ற அச்சமும், குழப்பமும் நீங்கி மனம் அமைதியடைகின்றது. இதனால் தசைகள், களைப்பு நீங்கி இயல்பாக இயங்கத் தொடங்கு கின்றன. இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது. தியானம் மட்டுமின்றி சவாசனமும் இந்நிலையை அடைய உடலில் சுரப்பிகளின் இயக்கமும் சீராக்கப்படுகிறது. தினமும் இச்சவாசனத்தை 10 முதல் 15 நிமிடங்கள் செய்யலாம்.

மனத்தொய்வை மாற்றுவதில் வெதுவெதுப்பான வெந்நீர் குளியலும் பெரிதும் உதவுகிறது. குளியல் தொட்டியில் 92 டிகிரி முதல் 98 டிகிரி வரையில் லான வெப்பமுடைய நீரை நிரப்பி அதில் அமிழ்ந்து நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது குளித்து, மனத் தொய்வை மாற்ற முயலாம்.

மனத் தொய்விற்கான பிற வேதிப்பொருட்கள் அடங்கிய மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட்டொழித்து இயற்கையான முறையில் எதிர்கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவ முறையில் மனத்தொய்வை எதிர்கொள்ள வாத தோஷங்களைக் கண்டறிந்து அவற்றை தேவைக்கேற்ப மாற்றி அமைப்பதால் மனத் தொய்வு விலகி மனம் சீராகின்றது. இதற்கு ஏலக்காய், மிளகு போன்றவற்றை கஷாயமாக எடுத்து பயன்படுத்தப் படுகின்றது. இவை தவிர சுக்கு, மல்லி, சீரகம், பாதாம் போன்ற பிற மூலிகைகளும் ஆயுர்வேதத்தில் பயன்தருகின்றன. முறையான சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.

அண்மைக்காலமாக உணவு முறை மாற்றங்களாலும் வாழ்க்கை முறை மாற்றங்களாலும் மனத்தொய்வை எளிதில் மாற்ற முடியும் என்பது உணரப்பட்டு வருகிறது. செரடோனின் மற்றும் நார்எபிநெப்ரின் எனப்படும் மூளை வேதிகளின் சுரப்பை அதிகரிக்கின்ற தானியங்கள், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், முட்டை, மீன் வகைகள் போன்றவற்றால் மனத்தொய்வை மாற்ற இயலும் என்பதை டாக்டர். ஜீன் பேக்கர் மில்லர் என்னும் அமெரிக்க மருத்துவர் நிரூபித்துள்ளார்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!