டெங்குக் காய்ச்சல்

Spread the love

டிவி நியூஸில் சமீப காலமாக ஏதோ டெங்குக் காய்ச்சல் என்று ஒன்று பேசப்படுகின்றதே. இது என்ன என்று நம் வாசகர்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள் என்று சில கடந்த காலப் பதிவுகளையும் பல நிகழ்கால மருத்துவ ஆராய்ச்சிகளையும் புரட்டினால் நமக்கு கிடைத்த தகவல்கள் பூ இவ்வளவு தானா டெங்குக் காய்ச்சல் என்ற திருப்தியையே அளித்தது.

டெங்குக் காய்ச்சல் ஒன்றும் புதிய நோயல்ல. எப்படி சிக்கன்குன்யா, எலிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என சில வருடங்களுக்கு ஒரு முறை பத்திரிகைகளும், தொலைக் காட்சிகளும் பீதியைக் கிளப்புகின்றனவோ அதே போல இதுவும் ஒரு வகை கிளப்பல் தான். இது வைரஸ் கிருமிகளால் பரவும் ஒரு வகைக் காய்ச்சல் தான் இதற்கு எல்லா வைரஸ் நோய்களைப் போல எந்த ஒரு உடனடி மருந்தோ தடுப்பு ஊசியோ கிடையாது. இது கொசுக்களால் பரவுகிறது. சரி இது என்ன இவ்வளவு எளிமையானது தானா என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேட்டால் இதோ மேலும் பல தகவல்கள்.

டெங்குக் காய்ச்சல் கிபி 2 ஆம் நூற்றாண்டி லேயே சீன மக்களைத் தாக்கியுள்ளது என்று சரித்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 17 ஆம் நூற்றாண்டில் கொசுக்களால் ஒரு வகைக் காய்ச்சல் பரவி கிழக்காசிய நாடுகளிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர் என்று மேலும் சரித்திரம் தெரிவிக்கின்றது. 1905 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் Ades Aegypti – ஏடஸ் எகிப்தி என்ற ஒரு வகை கொசுக்கள் வெயில் அதிகமாக உள்ள நாடுகளில் ஒரு வகைக் காய்ச்சலைப் பரப்புகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் தான் டெங்கு என்று பெயரிடப்பட்டது. 1907 ல் மேலும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன அதன் முடிவில் தான் Flavi Virus என்ற வைரஸ் கிருமிகள் தான் இந்த டெங்குக் காய்ச்சலைப் பரப்புகின்றன. இந்த வைரஸ் கிருமி Ades Aegypti என்ற வகை கொசுக்களின் பெண் இனக் கொசுக்களால் மட்டுமே பரப்பப்படுகின்றன என்று உறுதி செய்யப்பட்டது.

அதிக வெயில் உள்ள பூமத்திய ரேகையின் மேல்புறமும் கீழ்புறமும் உள்ள சில நாடுகளில் மட்டுமே இவ்வகைக் கொசுக்கள் அதிகம் வாழுகின்றன. 1950 களில் முதன் முதலாக உறுதி செய்யப்பட்ட டெங்குக் காய்ச்சலின் பரவுதல் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் சில ஆப்ரிக்க நாடுகளில் தாக்கியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

1997 ன் பின்னரே இது முழுமையான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு 2003 ல் தான் இதன் முழு விபரம் தெரிய வந்தது. உலக சுகாதார அமைப்பும் (கீபிளி) அதன் பின்னர் தான் டெங்குக் காய்ச்சலுக்கான தனியான விழிப்புணர்வு முயற்சிகளை ஆரம்பித்து பல கோடி ரூபாய்களை இந்த டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க செலவழிக்கின்றது.

டெங்குக் காய்ச்சலை பரப்புவதில் முதல் இடம் வகிப்பது Aedes aegypti – ஏடஸ் எகிப்தி இரண்டாம் இடம் வகிப்பது Aedes albo Pictus – ஏடஸ் ஆல்போ பிக்டஸ் இவ்வகைக் பெண் கொசுக்கள் FlaviVirus பாதிப்பால் பாதிக்கப்பட்டு இருந்தால் அது மனிதர்களைக் கடித்தவுடன் வளர ஆரம்பிக்கின்றது. இந்த வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 8-10 நாட்களில் அந்த கொசுவை முழுமையாக தாக்கி விடுகின்றது. இந்த 8-10 நாட்கள் கழித்து அந்த பெண் கொசு மனிதர்களை மீண்டும் கடித்தால் அது மனிதர்களுக்கு பரவுகின்றது.

இவ்வாறு மனிதர்களை வந்தடையும் இந்த Flavi Virus கொஞ்சம் கொஞ்சமாக மனித உடலில் பரவ ஆரம்பிக்கின்றது. சுமார் 7-15 நாட்களில் இந்த வைரஸ் மனித உடலில் முழு வளர்ச்சி பெற்று, பின் ஏதாவது பெண் Ades aegypti கொசு கடிப்பதால் மீண்டும் கொசுக்களை சென்றடைகின்றது.

இந்த வைரஸ் வாழ்க்கையில் மனிதர்களும் கொசுக்களும் மாறி மாறி தேவைப்படுவதால் இந்த வைரஸ் பரவி வாழ்கின்றது. இந்த வைரஸ் Serotype 4 வகைப்படுகின்றன. அவை Denu – 1, Denu – 2, Denu – 3, Denu – 4, இவை ஏதாவது வைரஸ்களில் ஏதாவது ஒன்று ஒரு கொசுவில் காணப்படுகின்றன. அப்படி கடிக்கும் கொசுவில் எந்த வைரஸ் இருக்கின்றதோ அந்த வகை வைரஸிற்கு அந்த மனித உடல் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொள்வதால் பின் அந்த வகை வைரஸ் அந்த உடலைத் தாக்குவது இல்லை மாறாக வேறு வகை வைரஸ் மட்டுமே பின்னர் தாக்க வாய்ப்பு உள்ளது.

வைரஸ் நோய்களுக்கோ வைரஸ் கிருமி களுக்கோ எந்த வகை மருந்துகளோ, மருத்துவமோ இல்லாதது போலவே இந்த வகை டெங்கு காய்ச்சல்களுக்கும் எந்த வித மருந்தோ, மருத்துவமோ கிடையாது. வந்த பின் குணப்படுத்துவதை விட வராமல் தவிர்ப்பதே நல்லது.

அறிகுறிகள் (சாதாரண டெங்கு)

அதிக புளூ போன்ற காய்ச்சல் – 104 டிகிரிக்கு மேல்

கண்களின் உட்புறம் வலி

உடம்பு மற்றும் மூட்டுக்களில் வலி

அதிக தசைவலி மற்றும் தலை வலி

சருமத்தில் அரிப்புடன் கூடிய சிவப்பு நிற திட்டுக்கள் – Rashes

வாந்தி, தலைசுற்றல், தலைபாரம்

சாதாரணமாக இத்தகைய அறிகுறிகள் கொசுகடித்து 4-10 நாட்கள் கழித்தே ஆரம்பமாகின்றன. ஆரம்பமான பின்னர் 2-7 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் வெளியில் தெரிகின்றன.

கடுமையான டெங்கு

கடுமையான டெங்கு சாதாரண டெங்குவிலிருந்து மாறுபட்டது. இது கொசு கடித்த 2-7 நாட்களுக்குள் மனிதனின் செல்களிலிருந்து றிறீணீsனீணீ கசிவது. மனித உறுப்புகளின் செயல்பாடு குறைவுடன் சம்பந்தப்பட்டது. இது கொசு கடித்து 24-48 மணி நேரத்திற்குள் உடலின் பிற செயல்பாடுகளை பாதித்து உடல் இயக்கத்தை கடுமையாக பாதித்து விடும். இது மிகவும் அரிதான ஒன்று இது உயிருக்கு ஆபத்தானதும் கூட. இது பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கம்போடியா, ஜாவா, சுமத்திரா போன்ற நாடுகளிலும் ஆப்ரிக்க நாடுகளிலுமே காணப்படுகின்றது.

மருத்துவம்

டெங்குக் காய்ச்சலுக்கு என்று தனியான எந்த மருத்துவமும் கிடையாது டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவர் வைரஸ் காய்ச்சலுக்கான மருத்துவம் செய்வார். அது சாதாரண டெங்குக் காய்ச்சலாக இருந்தால் 4 நாட்களிலும் கடுமையான டெங்குக் காய்ச்சலாக இருந்தால் 12 நாட்களிலும் சரியாகி விடும். உடனடி மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனை மூலமே டெங்குக் காய்ச்சலை தடுக்க, தவிர்க்க முடியும். டெங்குக் காய்ச்சலுக்கு என எந்த மருத்துவமோ, தடுப்பு ஊசிகளோ வருமுன் காத்திடும் முறை மருத்துவமோ கிடையாது.

தப்பிக்கும் முறைகள்

டெங்கு காய்ச்சலைத் தவிர்க்கும் முறைகள் டெங்குக் காய்ச்சலை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவதேயாகும்.

கொசுக்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் முட்டையிட வசதியாக உள்ள காலிப் பெட்டிகள், உபயோகிக்காத பொருட்களை அகற்றுவது அல்லது சேரவிடாமல் அழிப்பது.

வீட்டின் அருகிலோ அல்லது வீட்டின் உட்புறமோ தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை வாரம் ஒரு முறை கழுவி காய வைத்தல்.

காலை நேரங்களிலும் மாலை நேரங்களில் மட்டுமே இத்தகைய கொசுக்கள் கடிப்பதால் அந்த சமயங்களில் முழுக்கைச் சட்டைகளை அணிவது. கொசுக்கள் கடிக்க முடியாதபடி உடையணிவது.

வீட்டின் உட்புறம் இந்த கொசுக்கள் வர முடியாதபடி வீடுகளின் கதவுகளை மூடி வைப்பது, ஜன்னல்களில் வலை அடித்து மூடி வைப்பது.

டெங்கு மற்றும் டெங்குக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொசு பரவாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்துவது.


Spread the love
error: Content is protected !!