நாம் தினமும் வாழ்வதே ஒரு வரம் தான். அதிலும், நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசையும். அதற்கு நம் மனதிற்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்பதே உண்மை.
நம் பலருக்கு பிடித்தது ஒரே இடத்தில் இருந்து கொண்டே டிவியை பார்க்க வேண்டும் என்பதே ஆகும். ஆனால், அதிகமாக டிவியை பார்ப்பவர்கள் இறந்து விடுவார்கள் என சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நம் வாழ்க்கையில், மகிழ்ச்சியை தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையை கடுமையாக பாதிக்கும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு என நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25 வயதிற்கு மேற்பட்டவர்கள், டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் நம் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
பெரும்பாலானவர்கள் படுத்துக் கொண்டே டிவி பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள், இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், சில வகையான புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக இளம்வயதில் மரணம் ஏற்படுகிறதாம்.
ஒவ்வொருவரும் அதிகமாக உழைக்க வேண்டும். உடல் உழைப்பு குறைவதன் மூலம் மனிதனின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகிறது. உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணம்.
நாம் நிற்கவோ அல்லது நடக்கவோ செய்யாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு இருப்பதால் நமக்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.
இவை அனைத்தும் சேர்ந்து உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடை அதிகமாவதால் நம்மால் அதிக தூரம் நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் உழைப்பு குறைந்து குறைவான ஆற்றலே உங்கள் உடலுக்கு தேவைப்படுகிறது.
உடல் தசைகள் வேலையின்றி இருப்பதால், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்சைம்களின் அளவு குறைய துவங்குகிறது; இது பல ஆராய்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது; இந்த என்சைம்கள் தான் நம் உடலில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்க உதவுகின்றன; நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போதும் நம் கை, கால்கள், முதுகெழும்புகள் என அனைத்தும் முற்றிலும் ஓய்வில் இருக்கும்;
எழும்புகள் தான் நமது உடலை செயல்பட வைக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்; நீங்கள் ஓடிக்கொண்டோ அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதோ நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் உற்பத்தி,அதன் செயல்பாடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்;
உடல் உழைப்பு இல்லாமல் உடல் உறுப்புக்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்து கொண்டே இருப்பதால் காலப் போக்கில் அவைகள் மெல்ல மெல்ல தனது செயல்பாட்டை இழக்கின்றன. இதனால், தான் டிவிவை தொடர்ந்து பார்த்து கொண்டே இருக்க கூடாது என்று கூறுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து பார்ப்பதால் ஆபத்து என்று கூறுகிறார்கள்.
கீதா