தீபாவளி சிறப்பு பட்சணங்கள்

Spread the love

நேந்திரம் பழ அல்வா

தேவை

நேந்திரம் பழத் துண்டுகள் – 1 கப்

சர்க்கரை                     – 1/2 கப்

நெய், ஏலம், மஞ்சள் எஸன்ஸ் – தேவைக்கேற்ப

செய்முறை

விழுதாக்கிய துண்டுகளை, பாகில் போட்டு, நெய், ஏலம், எஸன்ஸ் சேர்த்தக் கிளறவும்.

பாதுஷா

தேவை

மைதா மாவு – 1 டம்ளர்

சர்க்கரை      – 1 டம்ளர்

நெய்           – 1/4 டம்ளர்

சமையல் சோடா – 1 சிட்டிகை

எண்ணெய்    – பொரிக்க

செய்முறை

சர்க்கரையைப் பாகாகக் காய்ச்சவும். மைதா, சோடா, நெய்யை நன்கு தேய்த்து பிசைந்து, வடை போல் தட்டவும். பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, கெட்டிப்பாகில் முக்கி எடுக்கவும். மிருதுவான பாதுஷா தயார்.

பாம்பே காஜா

தேவை

மைதா மாவு – 1 டம்ளர்

சர்க்கரை     2 டம்ளர்

சமையல் சோடா – 1 சிட்டிகை

உப்பு          1 சிட்டிகை

கேசரிப் பவுடர், ஏலம் – தேவைக்கேற்ப

செய்முறை

சோடா, உப்பு, மைதா கலந்து, நீர் விட்டுப் பிசைந்து முக்கோண வடிவில் மடித்து இட்டு, பொரித்த பூரிகளை ஏலம், கலர் கலந்த சர்க்கரைப் பாகில் ஊறவிட்டு எடுக்கவும்.

சுவையான பாம்பே காஜா தயார்.

ரவா லட்டு

தேவை

வறுத்து பொடித்த ரவை – 1 டம்ளர்

பொடித்த சர்க்கரை       1 டம்ளர்

நெய் (உருக்கியது)        1/4 டம்ளர்

வறுத்த முந்திரி, ஏலம்   – சிறிதளவு

செய்முறை

ரவையையும், சர்க்கரையையும் ஒன்றாகக் கொட்டி, சூடாக நெய்யை விட்டு, முந்திரியைப் போட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சோன்பப்டி

தேவை

கடலை மாவு – 200 கிராம்

மைதா         200 கிராம்

நெய்           200 கிராம்

சர்க்கரை       – 1/2 கிலோ

செய்முறை

கடலை மாவையும், மைதாவையும் ஒன்றாகக் கலந்து, வெறும் வாணலியில், மெல்லிய தீயில் வறுக்கவும்.

சர்க்கரையைப் பாகு காய்ச்சி, மாவுகளைச் சேர்த்துக் கிளறி, நெய் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில் வைத்து துண்டுகள் போடவும்.

ஜிலேபி

தேவை

மைதா            200 கிராம்

சர்க்கரை          1/2 கிலோ

கேசரி பவுடர்     – சிறிது

சமையல் சோடா – 1 சிட்டிகை

நெய்               – பொரிக்க

செய்முறை

மைதாவைச் சலித்து, சமையல் சோடா கலந்து, சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். சர்க்கரையில் நீர் விட்டு, சிறிது கேசரித் தூள் சேர்த்து நுரைப்பாகு வரும் வரை காய்ச்சவும். வாணலியில் நெய் விட்டு, மைதா மாவை ஜிலேபி போல பிழிந்து எடுத்து, பாகில் ஊறப் போடவும்.

உக்காரை

தேவை

பயத்தம் பருப்பு  100 கிராம்

கடலைப் பருப்பு – 50 கிராம்

துவரம் பருப்பு   50 கிராம்

சர்க்கரை         300 கிராம்

ஏலம், முந்திரி   – தேவைக்கேற்ப

செய்முறை

பருப்புகளை ஊறவைத்து, கரகரப்பாக அரைத்து, ஆவியில் வேக விட்டு உதிர்க்கவும். பொல பொலஎன வந்ததும் சர்க்கரைப்பாகில் கொட்டிக் கிளறவும். ஏலம், முந்திரி சேர்க்கவும்.

நட்ஸ் கேக்

தேவை

பாதாம் – 50 கிராம்

பிஸ்தா – 50 கிராம்

முந்திரி – 50 கிராம்

பால்     1/4 டம்ளர்

சர்க்கரை – 100 கிராம்

செய்முறை

பருப்புகளை பாலில் ஊற வைக்கவும். கரகரப்பாக அரைத்து, சர்க்கரைப் பாகில் கலந்து, சிறிது நெய்யுடன் கிளறித் துண்டுகள் போடவும்.

கர்ச்சிக்கா

தேவை

பொட்டுக்கடலை – 1/4 கிலோ

சர்க்கரை          – 1/4 கிலோ

கொப்பரை         – 1/4 கிலோ

ஏலத்தூள்          – 1 டீஸ்பூன்

கசகசா             2 டே. ஸ்பூன்

பச்சரிசி மாவு      600 கிராம் மேல் மாவுக்கு

எண்ணெய்          – பொரிக்க

செய்முறை

கொப்பரை, பொட்டுக்கடலை, கசகசா மூன்றையும் வறுத்து, ஏலம் சேர்த்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து ஒரு சுற்று அரைத்து, பூரணம் தயார் செய்யவும். அகலமான பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

பச்சரிசி மாவைக் கொட்டிக் கிளறி, கட்டியில்லாமல் வேக விடவும். கொழுக்கட்டைச் சொப்புகள் போலச் செய்து, பூரணம் வைத்து மூடி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

காஜுர்

தேவை

மைதா           200 கிராம்

சர்க்கரைத் தூள் – 100 கிராம்

நெய்              70 கிராம்

சமையல் சோடா – சிறிது

செய்முறை

மைதாவில், நெய்யை விட்டுப் பிசைந்து, சர்க்கரைத் தூள், சோடா மாவு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவிடவும். சின்ன எலுமிச்சைப் பழ அளவுக்கு உருட்டி, மெல்லிய வடையாகத் தட்டி, முள் கரண்டியால் வரிகளைப் பதிக்கவும்.

பிரம்புக் கூடையின் மீது அழுத்தி எடுத்ததாலும் டிசைன் பதியும்.

வாணலியில் 500 கிராம் நெய்யை விட்டு, மிதமான தீயில் காஜுரைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

மைசூர் பாகு

தேவை

கடலை மாவு – 1 கப்

சர்க்கரை      21/2 கப்

நெய்           2 கப்

செய்முறை

கடலை மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு வைக்கவும். கம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளறவும்.

அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பிறகு நெய் சேர்த்துக் கிளறவும். நெய்யும் மாவும் மாறி மாறிச் சேர்த்துக் கிளறவும்.

பொங்கி பூத்து வரும் சமயம் நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்தவும். ஆறிய பிறகு துண்டுகள் போடவும். இந்த மைசூர் பாகு நாவில் பட்டதும் கரைந்து விடும்.

அதிசரம்

தேவை

பச்சரிசி          1 கிலோ

வெல்லம்        750 கிராம்

ஏலக்காய்த்தூள் – 2 ஸ்பூன்

நெய்             2 ஸ்பூன்

எண்ணெய்       – தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை நன்றாக ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும். உலர்த்திய அரிசியை அரிசி மிஷினில் கொடுத்து அரைக்கவும். மாவை ரவை சல்லடையிலும் மாவு சல்லடையிலும் மாற்றி மாற்றி சலித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, நீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வடிகட்டிய வெல்லத்தை பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும். கம்பிப் பாகு வரும் போது மாவை அதில் கொட்டி, கட்டியில்லாமல் கிளற வேண்டும்.

கையில் நெய் தடவி மாவைத் தொட்டுப் பார்த்தால் மாவு கையில் ஒட்டக்கூடாது. அது தான் சரியான பதம். ஏலக்காய்த் தூளைப் போட்டு கீழே இறக்கி விடவும். மாவின் மீது நெய் தடவி மாவு ஆறியதும் மூடி வைத்து விடவும்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த மாவை அதிரசமாகச் செய்ய வேண்டும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கனமாகத் தட்டவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தட்டிய அதிரசங்களை ஒவ்வொன்றாகப் போட்டு வேக வைத்து எடுக்கவும். தட்டை சாய்வாக வைத்து அதிரசத்தை எடுத்து வைத்தால் அதில் எண்ணெய் வடிந்து விடும். எண்ணெய் வடிந்த பிறகு எடுத்து பாத்திரத்தில் வைக்கவும்.

உணவு நலம் அக்டோபர் 2010

தீபாவளி, சிறப்பு, பட்சணங்கள், நேந்திரம், பழ, அல்வா, செய்முறை, நேந்திரம் பழத் துண்டுகள், சர்க்கரை, நெய், ஏலம், மஞ்சள் எஸன்ஸ், பாதுஷா, செய்முறை, மைதா மாவு, சர்க்கரை, நெய், சமையல் சோடா, எண்ணெய், பாம்பே காஜா, செய்முறை, மைதா மாவு, சர்க்கரை, சமையல் சோடா, உப்பு, கேசரிப் பவுடர், ஏலம், ரவா லட்டு, செய்முறை, ரவைபொடித்த சர்க்கரை, நெய், முந்திரி, ஏலம்,

சோன்பப்டி, செய்முறை, கடலை மாவு, மைதா, நெய், சர்க்கரை, ஜிலேபி, செய்முறை, மைதா, சர்க்கரை, கேசரி பவுடர், உக்காரை, செய்முறை, பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, சர்க்கரை, ஏலம், முந்திரி, நட்ஸ் கேக்,

செய்முறை, பாதாம், பிஸ்தா, முந்திரி, பால், கர்ச்சிக்கா, செய்முறை, பொட்டுக்கடலை, சர்க்கரை, கொப்பரை, ஏலத்தூள், கசகசா, பச்சரிசி மாவு, காஜுர், செய்முறை, மைதா, சர்க்கரைத் தூள், நெய், சமையல் சோடா, மைசூர் பாகு, செய்முறை, கடலை மாவு, சர்க்கரை, நெய், அதிசரம், செய்முறை,

பச்சரிசி, வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய்,


Spread the love