உணவை அலங்கரிப்பதற்கு மட்டுமின்றி அதற்கும் மேலான இதன் பயன்பாடு!!!

Spread the love

தினமும் சமைக்கின்ற உணவு வகைகளில் பயன்படுத்துவதற்கும், சமைத்த உணவுகளை அலங்கரித்துப் பரிமாறவும் இந்த கொத்தமல்லி பெரிதும் பயன்படுகிறது. இது சமையலில் மட்டுமின்றி சித்த மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. காரணம் இது பல உடல் உபாதைகளை குணப்படுத்தும் ஒரு முக்கியமான மூலிகையாக செயல்படுகிறது. இத்தகைய கொத்தமல்லியை பற்றி நாம் பார்க்கலாம்.

கொத்தமல்லியில் நம் உடலிற்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளன. உதாரணமாக thiamine, niacin, riboflavin, வைட்டமின் c, prosperous, கால்சியம், சோடியம், பொட்டாசியம் என பல வகையான பொருட்கள் அடங்கியுள்ளது.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் காலை கொத்தமல்லி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

பித்த தழும்புகள் மறைய கொத்தமல்லியைப் பிழிந்து சாறு எடுத்து தழும்புகள் மீது தடவி வர அதன் நிறம் சருமத்தின் நிறம் போல மாறிவிடும்.

கொத்தமல்லி சாற்றில் சிறிது கொம்புமஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் இருக்கும் பருக்கள் மீது பூச பருக்கள் இருந்த இடம் மறைந்து முகம் பளபளக்கும்.. மேலும் கொத்தமல்லி சாற்றுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசி வர தலைவலி குணமாகும். கொத்தமல்லி இலையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம் மற்றும் சூட்டுக்கட்டிகள் மீது தடவி வர அவை விரைவில் குணமாகும். இதன் சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர பித்தம் நீங்கும். கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து, அதில் சர்க்கரை சேர்த்து குடித்து வர உடல் சூடு, அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.


Spread the love
error: Content is protected !!