சகாராவின் ரொட்டி என்று கூறப்படும் பேரீச்சம் பழம் தரும் உடல் ஆரோக்கியம், வேறு எந்த உணவிலும் கிடைக்காது. சகாரா பாலைவனத்தில் பயணம் செய்பவர்கள், பேரீச்சம் பழத்தினுள்ள இருக்கும் விதையை எடுத்து விட்டு அதனுள் வெண்ணெயை வைத்து உணவாக உட்கொள்வார்களாம். உலகின் மிகப் பழமையான நாகரிகமான மெசபடோமியாவில் தான் முதன் முதலாக பேரீச்சம் பழத்தின் பயன்பாடு பற்றிக் கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரமீடுகளிலும், கிரேக்க ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ள பேரீச்சம் பழம் கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துணவுப் பழமாக உலகத்தில் அனைத்து மக்களால் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றது. உடல் பலவீனமாக இருக்கிறது.
எந்தப் பொருளையும் தூக்க முடியவில்லை என்று ஆணும், பெண்ணும் நொந்து போகிறீர்களா?இருக்கவே இருக்கு பேரீச்சம் பழ டானிக். கொட்டையை நீக்கிய பேரீச்சம் பழம் 5 எண்ணெம் எடுத்து, சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதனை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தேன் 2 ஸ்பூன், ஏலக்காய் 3, குங்குமப் பூ 5 இதழ்களும், சேர்த்து கலந்து கொண்டு, சூடாக தினம் தோறும் இரவு தூங்கச் செல்லும் முன்பு அருந்தி வாருங்கள். இந்த பேரீச்சம் பழ டானிக்கிற்கு மாற்று, இணை எதுவுமே இல்லை என்று கூறிவிடலாம். பிறந்த குழந்தை முதல் சிறுவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள், படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளிகள், முதுமையில் பலவீனப்பட்டு இருக்கும் மனிதர்கள் என்று பலருக்கும் மிகச் சிறந்த டானிக் இதுவே என்று கூறலாம்.
ஒவ்வொரு நோயிற்கும் உதவும் பேரீச்சம் பழம்
மலம் எளிதாக கழிக்க, மலச்சிக்கலைக் குணப்படுத்தம். தினசரி இரவு உறங்கச் செல்லும் முன்பு மூன்று பேரீச்சம் பழம் தின்று விட்டு, சுடு தண்ணீர் அருந்துங்கள், இதன் மூலம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் மந்தமான மலக்குடல் எளிதாக இயங்க ஆரம்பித்து மறுநாள் மலம் இலகுவாக வெளியேற உதவும்.
மது அருந்தி அதன் மயக்கத்திலிருந்து விடுபட இயலாதவர்களைக் குணப்படுத்த, பேரீச்சம் பழத்தைப் பாலில் கலந்து அருந்தி வரச் செய்யலாம்.
இதய நோய் காரணமாக நடப்பதற்கு தள்ளாடும், பயம் கொள்ளும் நோயாளிகள் காலை, இரவு இருவேளையும் இரண்டு பேரீச்சம் பழங்கள் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
செக்ஸில் ஆர்வம் இல்லாததற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆண் உறுப்பு எழுச்சி இன்மை, விந்து விரைவில் முந்துதல், விந்து நீர்த்துப் போதல் போன்ற ஆண்களின் பலகீனங்களை எல்லாம் விரட்டி உடலுறவை நீடிக்கச் செய்ய பேரீச்சம் பழம் உதவுகிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது வெள்ளாட்டுப் பாலில் ஐந்து முதல் பத்து பேரீச்சம் பழத்தைக் கலந்து, பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி அருந்தி வர வேண்டும்.தினம் தோறும் காலை, மாலை என்று ஒரு சில மாதங்கள் பருகி வர, தேனிலவு கொண்டாடலாம்.சந்தேகமே இல்லை.
பேரீச்சம் பழ காபி அருந்துங்கள். உடல் வலுவாகும்
பேரீச்சம் பழ கொட்டைகளை வறுத்து, பொடி செய்து காபி போல டிகாஷன் செய்து பசும்பால், சர்க்கரை கலந்து அருந்தி வரலாம். வாரம் ஓரிரு முறை சாப்பிடுவதே சிறந்தது. தினசரி 4 பேரீச்சம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர வயிற்றுக் கடுப்பு, அஜீரண பேதி, மலச்சிக்கல், வயிற்றுப் பூச்சி தொந்தரவு போன்ற உடல் உபாதைகள் வருவதில்லை. குடலுக்கு ஒரு கவசம் என்று பேரீச்சம் பழத்தைக் கூறலாம்.
பல் முளைக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் பேரீச்சம் பழத்தை சுடு நீரில் இட்டு குழைய வேக வைத்து, வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு என மூன்று வேளை அருந்தி வர பேதி நிற்கும்.
மகப் பேற்றுக்கும், சுகப் பிரசவத்திற்கும் உதவும் பேரீச்சை
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு பேரீச்சம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர சுகப் பிரசவம், குழந்தையின் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் பெறலாம். காராம் பசும்பால் ஒரு லிட்டர் எடுத்து கொண்டு, பதினைந்து பேரீச்சம் பழங்களைச் சேர்த்து மண் பானையில் இட்டு அடுப்பில் ஏற்றி நன்கு வேக வைக்க வேண்டும். பால் நன்கு கெட்டியாக வரும் பொழுது, சுத்தமான தேன் இரண்டு மேஜைக் கரண்டி அளவு சேர்த்து மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
ஓரளவு இளகி, கெட்டியாகி வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு, ஏற்கெனவே கொதி நீர் மூலம் சுத்தம் செய்யப்பட்ட வாயகன்ற கண்ணாடிப் பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். மாதவிடாய் நின்றவுடன் தினசரி இருவேளை என, வேளை ஒன்றுக்கு ஒரு மேஜைக் கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, சாப்பாட்டுக்குப் பின்பு தொடர்ச்சியாக இருபது நாட்கள் வரை உட்கொண்டு வர வேண்டும்.
மாதவிடாய் தோன்றியதிலிருந்து பன்னிரண்டு நாட்களுக்குப் பின்பு முதல் பதினாறு நாட்கள் வரை மட்டும் கணவனும், மனைவியும் உடலுறவு செய்து வந்தால், நல்ல மகப்பேறு கிடைக்க வழியுண்டு. இரண்டு, மூன்று மாதங்கள் வரை இம்முறையை தொடர்ந்து முயற்சிப்பது நல்லது.