ஒரே மாதத்தில் வெள்ளையாக மாறவேண்டும் என சந்தைகளில் விற்கும் காஸ்மெட்டிக்ஸ் வாங்கி, நேரம் காலம் பார்க்காமல் அதை பயன்படுத்துவதினால் பக்க விளைவுகள் முகத்தை கெடுத்து விடும். அதில் ஒன்று தான் கரும்புள்ளி. இதை வீட்டிலேயே எளிதில் மறைய வைக்க முடியும். உருளைக்கிழங்கை வட்டவட்டமாக நறுக்கி, முகத்தில் ஒரு 1௦ நிமிடத்திற்கு தடவி தேய்த்து வாருங்கள், தேய்த்து முடித்ததும் சிறிது நேரம் ஊற வைத்ததும், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வர, கரும்புள்ளி மறைய தொடங்கும்.கொத்தமல்லியோடு மஞ்சள் தூளை சேர்த்து அரைத்து, அந்த பேஸ்ட்டை முகத்தை கழுவி விட்டு,தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழிவி விடவேண்டும்.
இதனால் கரும்புள்ளி மறைவதோடு, சருமம் ஆரோக்கியமாகும், தோலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். இறந்த செல்களால் முகம் பொலிவு பெறாமல் மிகவும் சோர்வாக காணப்படும். அதற்கு எலுமிச்சை சாற்றிலே சர்க்கரை சேர்த்து கண்களில் படாமல் மசாஜ் செய்து வர சருமம் உயிர் பெறுவதோடு கரும்புள்ளிகளும் மறையும். கருமை அடைந்து காணப்படும் சருமத்திற்கு தேன் அதிசிறந்த மருந்து, அதோடு இது கரும்புள்ளிகளை போக்குகிற ஆற்றலையும் கொண்டிருக்கின்றது.
வெறும் தேனை முகத்தில் தடவி ஆற விட்டு பின் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து,கருமை நீங்கி சருமத்தின் நிறம் கூடுவதற்கும் பயனளிக்கும். சுத்தமான பாலை பஞ்சில் தொட்டு முகத்தை ஒத்தடம் மாதிரி கொடுத்து வர கரும்புள்ளிகள் மறையும். அதோடு இந்த முறையால் சரும வறட்சியும் நீங்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த பால் ஒத்தடம், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.