இன்றைய இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பொடுகுத்தொல்லையால் அதிகம் அவதிப்படுகிறார்கள்.
தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம், காது போன்ற பகுதிகளில் இது காணப்படும்.
பொடுகு வர காரணம் என்ன?
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதிக து£சி, சுற்றுப்புறசூழல் சீர்கேடு, அதிக மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.
“பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
எக்ஸீமா, சொரியாஸிஸ் போன்ற தோல் நோய்களாலும் பொடுகு வரலாம்.
எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களாலும் பொடுகு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.