1. சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
2. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கலாம். 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
3. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
4. வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.
5. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு ஒழியும்.
6. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
7. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினசரி தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
8. வேப்பிலைசாறும், துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.