பொடுகுத் தொல்லை

Spread the love

தலையில் அடிக்கடி அரிப்பு;

சொறிந்தால் தவிடுபோல், பொடித்த உப்பு போல் பொடி உதிருகிறது. உண்மையிலேயே டி.வி. யில் காட்டும் பொடுகு மருந்து விளம்பரங்களில், பொடுகை காண்பிக்க பொடி உப்பைதான் பயன்படுத்துகிறார்கள். பொடுகு அரிப்பு தலையில் பரவிக் கொண்டே போகும். அரிப்புள்ள இடங்களில் முடி உதிரலாம். பொடுகு புருவங்களில் பரவி, அங்கும் அரிப்பெடுத்து, முடி உதிரலாம். முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் பொடுகு தான். அடிக்கடி தலையை சொறிய வைத்து சமூகத்தில், பொது இடங்களில் நம்மை தலை குனிய வைப்பதும் பொடுகுதான். பொடுகு நாளாக நாளாக, தீவிரமாகி பல தோல் கோளாறுகளை ஏற்படுத்தும்.

நமது தோல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். இறந்த செல்களை தள்ளி, புதிய செல்களை உருவாக்கும். இந்த வேலை பொடுகினால் வேகமாக செய்யும்படி ஆகிறது. அதிக அளவு செல்கள் உருவாகி, ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு செதில் போல் ஆகின்றன. மண்டைத் தோலின் (Scalp) மேற்புர செல்கள் அதிகமாக இறந்து வெளியேறுவது தான் பொடுகு.

எந்த வயதிலும் பொடுகு வரலாம், ஆனால் பொதுவாக 12 லிருந்து 80 வயதுள்ளவர்களுக்கு ஏற்படலாம். தீவிர அறிகுறிகள் 30-60 வயதுள்ளவர்களுக்கு காணப்படும். பொடுகுத் தொல்லையின் அபாயம் என்னவென்றால், இன்னொரு தீவிர சரும வியாதியான சோரியாசிஸ்ஸின் ஆரம்ப அறிகுறிகளும், பொடுகு போல் தோன்றும்.

பொடுகு வர காரணங்கள்

1. ஆயுர்வேதத்தின் படி கப, பித்த தோஷங்களால் பொடுகு உண்டாகும்.

2. எண்ணெயை சுரக்கும் செபாசியஸ் சுரப்பிகள் தேவைக்கு அதிகமான எண்ணெயை சுரந்தாலும், குறைவாக சுரந்தாலும் பொடுகு உண்டாகும்.

3. பார்கின்ஸன்ஸ் வியாதி பொடுகை உண்டாக்கும். இதர நரம்பு மண்டல கோளாறுகளும் காரணமாகலாம்.

4. பலவித கோளாறுகளுக்கு காரணமான அதிக உடல் பருமன், பொடுகுக்கும் காரணமாகலாம்.

5. ஆயுர்வேதத்தின் படி, தவறான உணவு முறை, மலச்சிக்கல், பலவீனம் இவைகளால் பொடுகு ஏற்படும். ஊட்டச்சத்து குறைவும் காரணமாகலாம்.

6.  ரசாயன பொருட்கள் நிறைந்த ஷாம்பூ, முடி உலர உபயோகிக்கும் மெஷின் (Hair dryer).

7. குளிர்தாக்குதல்.

8. டென்ஷன், ஸ்ட்ரெஸ், பரபரப்பு.

9. கூந்தல், சருமம் இவற்றை சரிவர பாதுகாக்காமல் இருப்பது, சுகாதார குறைவு.

10. ஒவ்வாமை.

11.அதிகமாக, இனிப்பு, கொழுப்பு, மாவுச்சத்து பொருட்களை உண்பது.

12. பரம்பரை.

13. பூஞ்சனம் (Fungus) தொற்றாலும்பொடுகுஏற்படும். Malassezia (பழையபெயர்- Pityrosporum)  என்ற ஃபங்கஸ் பொடுகை உண்டாக்கும். இந்த பூஞ்சனங்கள் உடலில் நோய் தடுப்பு சக்தியின் குறைவால் தாக்குகின்றன. கூந்தலை சரிவர பராமரிக்காவிட்டால் இந்த பூஞ்சனங்கள் தாக்கும்.

பொடுகின்வகைகள்

முதல்வகை

உலர்ந்த, எண்ணைப் பசையில்லாத வறண்ட மண்டை ஓட்டில் ஏற்படும். எண்ணைப் பசையை  சுரக்கும் செபாசியஸ் சுரப்பியின் குறைபாட்டால் ஏற்படும். இந்த வறண்ட பொடுகின் தன்மைகள்…

* தலையில் அரிப்பு ஏற்படும். சொறிந்தால் தவிடுபோல் பொடி உதிரும்.

* தலையை தட்டினாலே, பொடுகு உதிரும். அரிப்பு, தலை முழுவதும் பரவும்.

* அரிப்புள்ள இடங்களில் வெள்ளையாகி, முடிஉதிரலாம்.

* சொறிய, சொறிய ரணமாக, சிரங்காக மாறும்.

* சிறுகட்டிகள் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் உண்டாகலாம்.

* உலர்ந்த பொடுகை குணப்படுத்துவது சுலபம். ஆனால் இது தொற்றும் குணம் உடையது. சுலபமாக மற்றவர்க்கு பரவும்.

இரண்டாம்வகை

எண்ணெய் சுரப்பு அதிகமானதால் வருவது. இதன் தன்மைகள்…

* முகப் பருக்கள் தோன்றும்.

* வியர்த்தாலே அழுக்கு சேரும்.

* பெரிய கட்டிகள், கொப்பளங்கள் ஏற்படலாம்.

* எண்ணெய் பொடுகை குணப்படுத்துவது கடினம்.

* தலையை லேசாக கீறினாலும் அழுக்கு ஊறும்.

* தலையில் துர்நாற்றம் அடிக்கும்.


Spread the love
error: Content is protected !!