உணவின் சாரமே ஊட்டச்சத்து. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உணவிலிருந்து எடுத்து, உடலின் செல்களுக்கு அனுப்பப் பட வேண்டும். செல்களுக்கு அனுப்பும் முன்பு உணவு குளூக்கோஸ், அமினோ அலங்கள், கொழுப்பு அமிலங்களாக மாற்றப்பட வேண்டும். செல்களை சேர்ந்தவுடன், ஊட்டச்சத்துகள், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கார்பன்-டை-ஆக்ஸைட், தண்ணீராக உருவாகும். இந்த செயல்பாடுகள் பல கட்டங்களில் நடத்தப்படுகின்றன. பல வித என்ஸைம்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஊட்டச்சத்தால் உருவான சக்தி அடினோஸின் ட்ரைபாஸ்பேட்டாக ஆக அமையும். இந்த வேதிப்பொருள் வேலை செய்யும் சக்தியை தருகிறது. இந்த வளர்சிதை மாற்றம் வயது ஆண், பெண் பாகுபாடு, உடல்வாகு இவற்றை பொருத்து நடக்கும்.
உணவின் பணிகள்
உடலுக்கு சக்தியை தருகிறது.
உடலை நோயிலிருந்து காக்கிறது.
உடல் வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் இன்றியமையாதது. முழுவளர்ச்சியடைந்த பின்னும், இறந்த செல்களை புதுப்பித்து, உடலும் உயிரும் வாழ உதவுகிறது.
நமக்கு தேவையான உணவுச்சத்துகள்
கார்போ-ஹைடிரேட் (ஸ்டார்ச், சர்க்கரைகள்) – எனப்படும் மாவுச்சத்து இது உடல் இயங்க வேலை செய்ய, வாழத் தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த வகை சத்து தான் உடலுக்கு அதிகமாக தேவைப்படும். சராசரி மனிதனுக்கு 160 – 240 கிராம் கார்போஹைட்ரேட், தினமும் தேவை. ஒரு கிராம் கார்போஹைடிரேட் 4 கலோரி சக்தி தரும்.
கார்போ – ஹைடிரேட் உணவுகள்
தானியங்கள், பருப்புகள், வேர் கிழங்குகள் (உருளை, சர்க்கரை வள்ளிக்கிழங்குகள், கருணை, சேனைக்கிழங்குகள், மரவள்ளிக்கிழங்கு) சர்க்கரை, வெல்லம்.
லிபிட் (கொழுப்பு)
கொழுப்புகள் ஒரு முனைப்படுத்தப்பட்ட சக்தி. அதாவது குறைந்த அளவே நிறைந்த சக்தியை கொடுக்கும். இயற்கை கொழுப்பு பொருட்களில் அதிகம் இருப்பது. (98.99%) டிரைகிளைசிரைட்ஸ். எல்லா கொழுப்புகளும் எண்ணெய்களும் மூன்று வகை கொழுப்பு அமிலங்கள் உள்ளவை. இவை பூரித கொழுப்பு, ஒற்றை பூரிதமில்லா கொழுப்பு மற்றும் பல பூரிதமில்லா கொழுப்பு, பூரித கொழுப்பு நிறைந்த பொருட்களை அதிகம் உண்டால் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும். ஒற்றை பூரிதமில்லா கொழுப்புகள் கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன. பல பூரிதமில்லா கொழுப்பு கொலஸ்ட்ராலை அதிகரிப்பதில்லை. பொதுவாக 40 கிராம் கொழுப்பு சராசரி மனிதனுக்கு போதுமானது. 1 கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தியை தருகிறது.
அதிக கொழுப்பு உண்டால் கொலஸ்ட்ரால் வேகமாக ஏறும். அதே அளவு கொழுப்பை சிறிது சிறிதாக பல வேளைகளில் உண்டால் கொலஸ்ட்ரால் ஏறுவதை தடுக்கலாம். வளர்சிதை மாற்றத்தின் போது, கொழுப்புகள் அதே அளவுள்ள ஹைடிரேட்களை விட இரண்டு மடங்கு உஷ்ணசக்தியை தருகிறது. இந்த சக்தி உடல் உஷ்ணமாகவும், தசைகள் இயக்கத்திற்கும் பயனாகிறது.
இருதய நோய் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொழுப்பை தவிர்க்க வேண்டும்.
கொழுப்பு உணவுகள்
வெண்ணெய், நெய், தாவர எண்ணெய்கள், எண்ணெய்வித்துக்கள், கொட்டைகள் சோயாபீன்.
புரதம்
புரோடீன் எனும் கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தைக்கு அர்த்தம் ‘முக்கியத்துவத்தில் முதன்மை‘ உடல் வளர்ச்சிக்கு புரதம் அத்தியவசியமான தேவை. புரதச்சத்து குறைந்தால், நம் உடல், அதன் தசைகளையே உண்ண ஆரம்பித்து விடும். புரதங்கள் அமினோ அமிலங்கள் ஆனவை. ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும். 0.8 கிராம் புரதம் தேவை. புரதம் செல்களின் வளர்ச்சிகளும், பராமரிப்புக்கும் தேவை.
புரத உணவுகள்
பால், சீஸ், தயிர், எண்ணெய் வித்துக்கள், கொட்டைகள், பருப்புகள், சோயாபீன், மாமிசங்கள், ஈரல், மீன், முட்டை, நவ தானியங்கள்.
உணவு நலம் மார்ச் 2011
ஆரோக்கியத்தில், உணவின், பங்கு, உணவு, ஊட்டச்சத்து, குளூக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு, கார்பன்டை ஆக்ஸைட், என்ஸைம், அடினோஸின், ட்ரைபாஸ்பேட், உணவின் பணிகள், உடல், சக்தி, நோய், உடல் வளர்ச்சி, தேவையான, உணவுச்சத்துகள், கார்போஹைடிரேட், ஸ்டார்ச், மாவுச்சத்து, கார்போஹைடிரேட் உணவுகள், தானியங்கள், பருப்புகள், வேர், கிழங்குகள், லிபிட், டிரைகிளைசிரைட்ஸ், பூரித கொழுப்பு, கொலஸ்ட்ரால்,
இருதய நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு உணவுகள், வெண்ணெய், நெய், தாவர எண்ணெய்கள், எண்ணெய்வித்துக்கள், கொட்டைகள், சோயாபீன், புரதம்,
புரோடீன், உடல் எடை, புரத உணவுகள், பால், சீஸ், தயிர், எண்ணெய் வித்துக்கள், கொட்டைகள், பருப்புகள், மாமிசங்கள், ஈரல், மீன், முட்டை, நவ தானியங்கள்,