உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மெல்லோட்டப் பயிற்சி என்பன போல சைக்கிள் ஓட்டுவதும் ஒரு மிகச் சிறந்த உடல் பயிற்சி. கடினமான உடற்பயிற்சியால் பெறக் கூடிய அனைத்து நன்மைகளையும் சைக்கிள் ஒட்டுவது தருகின்றது.
தினசரி சைக்கிள் ஒட்டுவதால் கீழ்க்கண்ட நன்மைகளைப் பெறலாம்.
· இரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது.
· இதய நோய் அபாயம் குறைகின்றது.
· பதற்றத்தையும் மன இறுக்கத்தையும் தவிர்க்கின்றது.
· நன்கு உறங்குவதற்கு உதவுகின்றது.
· இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகின்றது.
· எடையை சீராக வைத்திருக்க உதவுகின்றது.
· சருமத்தின் வனப்பைக் கூட்டுகின்றது.
· நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
· மூட்டுகளில் இறுக்கத்தைப் போக்கி மூட்டுகள் எளிதாக இயங்கிட செய்கின்றது.
· இரத்த ஒட்டத்தை சீராக்கி உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது.
· உடலின் கழிவுகள் வியர்வை மூலமாக எளிதாக வெளியேறிட வழிவகுக்கின்றது.
· தேவையற்ற எரிசக்தியை உபயோகப்படுத்துகின்றது.
மேற்படி நலன்களைப் பெற குறைந்த பட்சம் தினசரி 20 நிமிடம் சைக்கிள் ஒட்டுவது அவசியம். சீரான சைக்கிள் சவாரி செய்ய வேண்டும். சைக்கிளை ஒட்ட விரும்பாதவர்கள் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அதன் மேல் ஏறி நின்ற நிலையில் ஒட்டுவதும் இதே பயனைத் தரும். வயது முதிர்ந்தவர்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் இதனைச் செய்வது அவசியம்.