ச்யவன பிராச லேகியம்

Spread the love

அனைவருக்கும் தெரிந்த அருமையான லேகியம் ச்யவனப் பிராசலேகியம். பிரபல ஆயுர்வேத நிலையங்கள் தயாரிக்கும் மருந்துகளில் ச்யவனப் பிராசம் இல்லாமல் இருக்காது. வயதாவதை தாமதப்படுத்தி இளமையை நீடிக்கும் மருந்தாக இது கருதப்படுகிறது. புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இதன் வரலாறு, சுவையானது.

ச்யவன முனிவர், நர்மதை நதிக்கரையில் உள்ள வைடூர்ய பர்வதம் என்ற மலையினருகே உள்ள பயோஷ்னி என்ற பெரிய ஏரிக்கரையில் கடுந்தவம் புரிந்து வந்தார். பல நாள் ஒரே இடத்தில் உட்கார்ந்து தவம் செய்து வந்தால் அவரைச் சுற்றி அவரையும் மறைத்து ஒரு பெரிய கரையான் புற்று தோன்றிவிட்டது. பயோஷ்னி ஏரியில் குளிப்பதற்காக, அந்நாட்டு மன்னன் சர்யாதி, தனது மனைவிகளுடனும், மகள் சுகன்யாவுடனும் , நாலுவித படைகளுடன் வந்திருந்தான். அப்போது ச்யவன ரிஷியை மூடியுள்ள புற்றருகில் வந்த மன்னன் மகள் சுகன்யா, புற்றுக்குள் பளிச்சென்று ஏதோ பிரகாசமாக தெரிந்ததை கண்டு அது என்னவென்று அறிய, முள்ளினால் குத்தி விட்டாள். அது ச்யவன முனிவரின் கண்கள். குத்திய இடத்திலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. இதன் விளைவு, மன்னன் சரியாதிக்கும் அவனது சேனைகள் அனைவருக்கும் உடல் உபாதைகள் தோன்றின. விஷயம் புரிந்து, புற்றருகே ஒடி வந்த மன்னன், புற்றுக்குள் இருந்த முனிவரை வணங்கி மன்னிப்பு கேட்டு, பிறகு முனிவரின் கோரிக்கையின் படி, தன் மகள் சுகன்யாவை, ச்யவன முனிவருக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.

எலும்பும் தோலுமாக, அழகற்ற வயோதிகரான ச்யவன முனிவருக்கு, கிளிபோல் அழகான அரசகுமாரி சுகன்யா மனைவியாகும் படி நேரிட்டது. ஆனால் தேவ வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள் ச்யவன மகரிஷியின் நண்பர்கள். இந்திரன் அவர்களை “யாகங்களில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது; ஏனெனில் அவர்கள் மனிதர்களுக்கு வரும் வியாதியை போக்க, மனிதர்களிடையே அதிகம் வசிப்பதால் இழிவானவர்கள்” என்று நிந்தித்து வந்தான். இதை ஒப்புக் கொள்ளாமல், வைத்தியத் தொழில் புனிதமானது என்று இந்திரனை தண்டித்து, யாகங்களில் அசுவினிகுமாரர்களும் பங்கேற்கும் படி செய்தவர் ச்யவன மகரிஷி. எனவே அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தங்களுடன் பயோஷினி ஏரியில் மூழ்கி எழுந்த ச்யவனரிஷிக்கு அற்புதமான, அழகான, இளமை தோற்றத்தை, அஸ்வினி தேவர்கள் உண்டாக்கினர். இந்த இளமையும், உடல் வலிமையும் நீடித்து இருக்க அவருக்கு ஒரு லேகியத்தை தயாரித்து கொடுத்தனர். அதை சாப்பிட்டு வந்த ச்யவன முனிவருக்கு நல்ல உடல் வனப்பும், வலிமையும், நோயற்ற வாழ்வும் நீடித்தன. இந்த லேகியம் தான் ச்யவனரின் பேரிலேயே, ‘ச்யவன ப்ராசம்என்று கூறப்படுகிறது.

இந்த லேகியத்தில் உள்ள முக்கிய பொருள் அதியமான், ஓளவையாருக்கு மனமுவந்து, ஆயுளை நீடிக்க கொடுத்த நெல்லிக்கனியே ஆகும்! விட்டமின் C ‘ செறிந்தது நெல்லிக்காய். இதை அப்படியே சாப்பிட்டு வந்தாலே உடல் நலம் மேம்படும். இன்னும் பல மூலிகைகளுடன் சேர்த்து லேகியமாக செய்யும் போது, இதன் பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும். ச்யவன பிராசம், புதிய நெல்லிக்காயின் கதுப்பு, நெய், வெள்ளி ரேக்கு, முஸ்லி (Asparagus adscendens) கோக்சூரா ( நெருஞ்சி – Tribulus terresteris), சதவாரி ( சீமை சதவாரி – Asparagus racemosus), மூங்கில் (Bambusa Arundinaceae) இவைகளை சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது. இந்த கலவை விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும்.

ச்யவன ப்ராச லேகியத்தில் பல கலவைகள் / மூலிகைகள் நிறைந்த பல ரகங்கள் கிடைக்கின்றன. 46 மூலிகைகள் அடங்கிய ச்யவனபிராசமும் கிடைக்கும். இல்லை 6 பிரத்யேக மூலிகைகள் கலந்தவைகளும் கிடைக்கும்.   ச்யவனப்ராசம் பல ஆயுர்வேத நிறுவனங்களில் பல வித மூலிகைகள் கலந்து, பிரத்யேக தேவைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன. உங்கள் ஆயுர்வேத மருத்துவர், உங்களுக்கு ஏற்ற லேகியத்தை பரிந்துரைப்பார்.

ச்யவனப்ராசானத்தின் பலன்கள்:-

  1. வயதாக, வயதாக உடலில் சில மாறுதல்கள் நிகழ்கின்றன. 25 வயதிற்கு பிறகு உடல், சிக்கலான பொருட்களை எளிய பொருட்களாக மாற்றும். உதாரணம் செல்களிலுள்ள புரோடோபிளாஸம் எளிய பொருட்களாக பிரிக்கப்படுதல். இதை ஆங்கிலத்தில் Catabolism என்பார்கள். 40 வயதிற்கு மேல் உடல் எளிய பொருட்களிலிருந்து நுணுக்கமானவற்றை உருவாக்கும். இதை Anabolism என்பார்கள். ச்யவன பிராசம் அனபாலிஸத்தை அதிகரித்து, புரதச்சத்தை உடலில் தக்க வைக்கிறது. இதனால் அதிக ஆன்டி – பாடிஸ்உருவாகி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. தசைகள் வலுவடைகின்றன.
  2. மூச்சுக்குழாய், நுரையீரல் வரும் தொற்று நோய்களை தடுக்கும்.
  3. மலச்சிக்கல், இதர வயிற்றுக் கோளாறுகளுக்கும் சிறந்த மருந்து.

ச்யவனப் பிராசம்

அனைவருக்கும் தெரிந்த அருமையான லேகியம் ச்யவனப் பிராசலேகியம். பிரபல ஆயுர்வேத நிலையங்கள் தயாரிக்கும் மருந்துகளில் ச்யவனப் பிராசம் இல்லாமல் இருக்காது. வயதாவதை தாமதப்படுத்தி இளமையை நீடிக்கும் மருந்தாக இது கருதப்படுகிறது. புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இதன் வரலாறு, சுவையானது.

ச்யவன முனிவர், நர்மதை நதிக்கரையில் உள்ள வைடூர்ய பர்வதம் என்ற மலையினருகே உள்ள பயோஷ்னி என்ற பெரிய ஏரிக்கரையில் கடுந்தவம் புரிந்து வந்தார். பல நாள் ஒரே இடத்தில் உட்கார்ந்து தவம் செய்து வந்தால் அவரைச் சுற்றி அவரையும் மறைத்து ஒரு பெரிய கரையான் புற்று தோன்றிவிட்டது. பயோஷ்னி ஏரியில் குளிப்பதற்காக, அந்நாட்டு மன்னன் சர்யாதி, தனது மனைவிகளுடனும், மகள் சுகன்யாவுடனும் , நாலுவித படைகளுடன் வந்திருந்தான். அப்போது ச்யவன ரிஷியை மூடியுள்ள புற்றருகில் வந்த மன்னன் மகள் சுகன்யா, புற்றுக்குள் பளிச்சென்று ஏதோ பிரகாசமாக தெரிந்ததை கண்டு அது என்னவென்று அறிய, முள்ளினால் குத்தி விட்டாள். அது ச்யவன முனிவரின் கண்கள்.

குத்திய இடத்திலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. இதன் விளைவு, மன்னன் சரியாதிக்கும் அவனது சேனைகள் அனைவருக்கும் உடல் உபாதைகள் தோன்றின. விஷயம் புரிந்து, புற்றருகே ஒடி வந்த மன்னன், புற்றுக்குள் இருந்த முனிவரை வணங்கி மன்னிப்பு கேட்டு, பிறகு முனிவரின் கோரிக்கையின் படி, தன் மகள் சுகன்யாவை, ச்யவன முனிவருக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.

எலும்பும் தோலுமாக, அழகற்ற வயோதிகரான ச்யவன முனிவருக்கு, கிளிபோல் அழகான அரசகுமாரி சுகன்யா மனைவியாகும் படி நேரிட்டது. ஆனால் தேவ வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள் ச்யவன மகரிஷியின் நண்பர்கள். இந்திரன் அவர்களை “யாகங்களில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது; ஏனெனில் அவர்கள் மனிதர்களுக்கு வரும் வியாதியை போக்க, மனிதர்களிடையே அதிகம் வசிப்பதால் இழிவானவர்கள்” என்று நிந்தித்து வந்தான். இதை ஒப்புக் கொள்ளாமல், வைத்தியத் தொழில் புனிதமானது என்று இந்திரனை தண்டித்து, யாகங்களில் அசுவினிகுமாரர்களும் பங்கேற்கும் படி செய்தவர் ச்யவன மகரிஷி. எனவே அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தங்களுடன் பயோஷினி ஏரியில் மூழ்கி எழுந்த ச்யவனரிஷிக்கு அற்புதமான, அழகான, இளமை தோற்றத்தை, அஸ்வினி தேவர்கள் உண்டாக்கினர்.

இந்த இளமையும், உடல் வலிமையும் நீடித்து இருக்க அவருக்கு ஒரு லேகியத்தை தயாரித்து கொடுத்தனர். அதை சாப்பிட்டு வந்த ச்யவன முனிவருக்கு நல்ல உடல் வனப்பும், வலிமையும், நோயற்ற வாழ்வும் நீடித்தன. இந்த லேகியம் தான் ச்யவனரின் பேரிலேயே, ‘ச்யவன ப்ராசம்என்று கூறப்படுகிறது.

இந்த லேகியத்தில் உள்ள முக்கிய பொருள் அதியமான், ஓளவையாருக்கு மனமுவந்து, ஆயுளை நீடிக்க கொடுத்த நெல்லிக்கனியே ஆகும்! விட்டமின் சிசெறிந்தது நெல்லிக்காய். இதை அப்படியே சாப்பிட்டு வந்தாலே உடல் நலம் மேம்படும். இன்னும் பல மூலிகைகளுடன் சேர்த்து லேகியமாக செய்யும் போது, இதன் பலன்கள் பல மடங்கு அதிகரிக்கும். ச்யவன பிராசம், புதிய நெல்லிக்காயின் கதுப்பு, நெய், வெள்ளி ரேக்கு, முஸ்லி (Asparagus adscendens) கோக்சூரா ( நெருஞ்சி – Tribulus terresteris), சதவாரி ( சீமை சதவாரி – Asparagus racemosus), மூங்கில் (Bambusa Arundinaceae) இவைகளை சேர்த்தும் தயாரிக்கப்படுகிறது. இந்த கலவை விந்து உற்பத்தியை அதிகப்படுத்தும்.

ச்யவன ப்ராச லேகியத்தில் பல கலவைகள் / மூலிகைகள் நிறைந்த பல ரகங்கள் கிடைக்கின்றன. 46 மூலிகைகள் அடங்கிய ச்யவனபிராசமும் கிடைக்கும். இல்லை 6 பிரத்யேக மூலிகைகள் கலந்தவைகளும் கிடைக்கும்.

ச்யவனப்ராசம் பல ஆயுர்வேத நிறுவனங்களில் பல வித மூலிகைகள் கலந்து, பிரத்யேக தேவைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன. உங்கள் ஆயுர்வேத மருத்துவர், உங்களுக்கு ஏற்ற லேகியத்தை பரிந்துரைப்பார்.

ச்யவனப்ராசானத்தின் பலன்கள்

வயதாக, வயதாக உடலில் சில மாறுதல்கள் நிகழ்கின்றன. 25 வயதிற்கு பிறகு உடல், சிக்கலான பொருட்களை எளிய பொருட்களாக மாற்றும். உதாரணம் செல்களிலுள்ள புரோடோபிளாஸம் எளிய பொருட்களாக பிரிக்கப்படுதல். இதை ஆங்கிலத்தில் Catabolism என்பார்கள். 40 வயதிற்கு மேல் உடல் எளிய பொருட்களிலிருந்து நுணுக்கமானவற்றை உருவாக்கும். இதை Anabolism என்பார்கள். ச்யவன பிராசம் அனபாலிஸத்தை அதிகரித்து, புரதச்சத்தை உடலில் தக்க வைக்கிறது. இதனால் அதிக ஆன்டி – பாடிஸ்உருவாகி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. தசைகள் வலுவடைகின்றன.

மூச்சுக்குழாய், நுரையீரல் வரும் தொற்று நோய்களை தடுக்கும்.

மலச்சிக்கல், இதர வயிற்றுக் கோளாறுகளுக்கும் சிறந்த மருந்து.


Spread the love