இந்த சாற்றை குடித்தால் பல பிரச்சனைகளை ஓட விடலாம்.

Spread the love

குழம்பு தாளிக்க பயன்பட கூடிய கருவேப்பிலை சாறு பற்றிய பயன்களை தான் பார்க்க போகின்றோம். கருவேப்பிலையில் இரும்பு சத்து அதிகம். ஆனால் இரத்த சோகைக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என பார்க்கலாம். உலர்ந்த கருவேப்பிலையைபொடி செய்து அதை பாலோடு சேர்த்து 3௦ நாட்கள் குடித்து வர இரத்த சோகை கட்டுப்படும்.இளம் வயதிலேயே கண் பார்வை மங்கும் போது, கருவேப்பிலை சாற்றை காலையில் குடித்து வரகண்பார்வை திறன் அதிகமாவதோடு, வயதாகும்போது உண்டாகுகின்ற கண்புரை கோளாறும்நீங்கும்.

காலையில் வெறும் கருவேப்பிலை இலைகளை மென்று முழுகி வந்தால்வயிற்றுபோக்கு மற்றும் மலசிக்கல் குணமாகும். மேலும் இதில் இருக்கும் ஆல்கலாய்டுஸ் அழற்சியைஎதிர்த்து, பாக்டீரியாக்களால் ஏற்படும் வாதைகளையும் தடுக்கும். அதோடு நோய்எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கருவேப்பிலை சாறு மூல நோய்க்கு நல்ல மருந்து. காலையில்வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாற்றோடு தேன் கலந்து குடித்து வந்தால் 48 நாட்களுக்குள் மூல நோயின் தீவிரம் குறையும். ஆயுர்வேதத்தில் கறிவேப்பிலைசாறு, நல்ல மாற்று மருந்தாகவும் பரிந்துரைக்கப்படுகின்றது.

வாந்தி, மயக்கம், குமட்டல் போன்ற பிரட்சனைக்கு கறிவேப்பிலை சாற்றைஎடுத்து அதில் பாதியளவு எலுமிச்சை சாற்றை சேர்த்து பருகி வர இந்த பிரட்சனைகளுக்கு,உடனடி நிவாரணம் கிடைக்கும். அதோடு இந்த சாற்றில் இருக்கும் குணங்கள், கழிவுகளில்ஏற்படும் இரத்த கசிவு, நாள்பட்ட வயிற்று போக்கு போன்ற பிரட்சனைகளை குணமாக்கி, இரத்தஓட்டத்தை சீராக்கவும் செய்கின்றது. மேலும் பூஞ்சை நோய், முகப்பரு, தோல் வியாதிகளை சரிசெய்யக்கூடிய ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் கருவேப்பிலையில் நிறைந்திருக்கின்றது. அதனால் இதுஉடல், இரத்தம் மற்றும் தோல் பிரட்சனைக்கும் நல்ல மருந்து.

ஆயுர்வேதம்.காம்

https://www.youtube.com/embed/EjacgancX40


Spread the love