புற்று நோய்க்கு மருந்தாகும் கறிவேப்பிலை

Spread the love

உணவின் வாசனையை அதிகரிக்க மட்டுமே கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலரும் கருதுகின்றனர் ஆனால் அதுபோக பல மருத்துவ குணங்களும் கறிவேப்பிலைக்கு உண்டு.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் Murraya Koenigii – முரையா கோய்னிகி. இது ரூட்டேசி தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிகக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் மசாலா பொருளான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே தடுக்கும் ஆற்றல் உடையது என்பது அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்னும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் மசாலாப் பொருட்கள் வாசனைக்காக மட்டுமல்லாது,  பல மருத்துவ குணங்களையும் கொண்டவை என்பதை நிரூபிக்க சில ஆராயிச்சிகளை மேற்கொண்டது.

இப்பட்டியலில் கறிவேப்பிலையும் இடம்பெற்றது. ஆரியிச்சி முடிவில் இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்கி  புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது எனவும் இது மேலும் ஞாபக சக்தியை எளிதில் மேம்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.

இதெல்லாம் தெரியாமல், உணவில் இருக்கும் கறிவேப்பிலையை எடுத்து போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love