தலை முடி வளர கருவேப்பிலையை இப்படி பயன்படுத்தி பாருங்க…

Spread the love

தலைமுடிக்கு அஸ்திவாரமே வேர்கால்கள் தான்… இதன் வலிமை செயலிழக்கும் போது முடி உதிர்வு ஏற்படும், அதற்கு பின் முடி வளர்ச்சியும் நின்று விடும்.  அதனால் கருவேப்பிலையில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், வேர்கால்களுக்கு நல்ல moisturizer ஆக செயல்படும்.

இரண்டாவது, கருவேப்பிலையில் இருக்கும் ப்ரோடீன் மற்றும் பீட்டா கரோட்டின் முடி உதிர்வை தடுப்பதோடு, மெல்லிய கூந்தலை அடர்த்தியாக்கவும் உதவுகின்றது.. மூன்றாவது இதில் இருக்கும் அமினோ அமிலம் நம்முடைய தலைமுடி வேர்கால்களுக்கு ஊட்டம் அளித்து வலிமையாக்கும்… அதனால் முழுக்க முழுக்க தலைமுடிக்கு இப்படி பட்ட இயற்கை பலனை தர , கருவேப்பிலையை பயன்டுத்தி பயனடையலாம் என்பதை இப்போது பார்க்கலாம்….

கூந்தல் ஆரோக்கியத்திற்கு கருவேப்பிலையை மூன்று வகையாக பயன்படுத்தலாம். ஒன்று முடி டானிக்காகவும், இரண்டாவது முடி மாஸ்காகவும், மூன்றாவது நமது உணவில் சேர்ப்பது. முதலில் ஹேர் டானிக் எப்படி செய்ய வேண்டும் என பார்க்கலாம்… இதற்கு தேவையானது, ஒரு கைப்பிடி சுத்தமான கருவேப்பிலை, இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்.


ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றவும், அதில் கருவேப்பிலையை போட்டு லேசான சூட்டில் கொதிக்க விடவும்… கருவேப்பிலை  நிறம் கருமையாக மாறும் வரைக்கும் அதை கொதிக்க விடவும்.. கொதிக்கும்போது பாத்திரத்தில் இருந்து தள்ளியே நில்லுங்கள், ஏனென்றால்? அந்த எண்ணெய் தெறிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் நிறம் மாறினதும்  பாத்திரத்தை எடுத்து நன்கு ஆறவிடவும். ஆறினதும் அந்த எண்ணெயை தலை முடிக்கும், உச்சந்தலைக்கும் லேசாக மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து, மென்மையான ஷாம்பூவை கொண்டு தலையை அலசிக்கலாம்…

இந்த ஹேர் டானிக், முடி வேர்களுக்கு உயிரோட்டத்தை கொடுத்து, வலிமை இழந்து காணப்படும் முடிக்கு வலிமையை கொடுக்கின்றது… உச்சந்தலையில் தடவுவதால், இதன் ஊட்டசத்துக்கள் ஊடுருவி கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அடுத்தது, ஹேர் மாஸ்க். இதற்கு தேவையானது ஒரு கைப்பிடி கருவேப்பிலை பின் மூன்று டீஸ்பூன் கெட்டி தயிர்… இதை வைத்து ஹேர் மாஸ்க் செய்யலாம்.


கருவேப்பிலையை கெட்டியாக ஒரு பேஸ்ட் போல் அரைத்து, அதற்கு பின் ஒரு டீஸ்பூன் கருவேப்பிலையை, தயிரோடு நன்கு கலக்க வேண்டும்.. இந்த அளவு உங்களுடைய கூந்தல் அளவை பொறுத்து நீங்கள் எடுத்து கொள்ளலாம். வேர்க்கால்கள் வரைக்கும் இந்த பேஸ்ட் வைத்து நன்கு மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து, மிருதுவாக ஷாம்பூவை கொண்டு தலைக்கு குளிக்க வேண்டும்.

அதனால் தயிரில் இருக்கும் சில குணங்கள், இறந்த செல்களை வெளியேற்றவும், பொடுகை போக்கவும் உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் ஊட்டசத்துக்கள், முடி வளர்ச்சியை தூண்டும்.. தலைமுடியில் இருக்கும் பிசுபிசுக்கு, நுண்கிருமிகள் இந்த மாஸ்க் மூலமாக வெளியேறவும் செய்கின்றது. இதை தொடர்ந்து கருவேப்பிலையை உணவுகளில் அதிகமாக எடுத்து வருவதன் மூலம், நல்ல பலனை பெறலாம்.


Spread the love