கோடை காலத்தில் அதிக வெப்பம் நம்மைத் தாக்குவதால் உடலில் உள்ள அனைத்து நீர்ச்சத்துக்களும் வியர்வையாக வெளியேறிவிடும். எனவே அதிக நீர் அல்லது நீர் ஆகாரம் சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியம்.
வெயில் காலத்தில் வெள்ளரி அதிகம் கிடைப்பதால் அதை வைத்து ஒரு வெள்ளரி பேல் பூரி செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்
அரிசி பொரி – 2 கப்
ஒமப் பொடி – 1/4 கப்
காரா பூந்தி – 1/4 கப்
வெள்ளரிக்காய் – 2
மாங்காய் – சிறு துண்டு
கேரட் – 1
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மல்லித்தழை – 1 பிடி
(பொடியாக நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1
ஸ்வீட் சட்னி – 3 டேபிள் ஸ்பூன்
புதினா சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழம் – பாதி
செய்முறை
பொரியைச் சுத்தம் செய்து வையுங்கள். வெள்ளரிக்காய், மாங்காய், கேரட், வெங்காயம், தக்காளியைப் பொடியாகத் துருவுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து உதிர்த்து வையுங்கள். துருவிய காய்களோடு உதிர்த்த கிழங்கு, காராப்பூந்தி, ஒமப்பொடி, மல்லித்தழை, ஸ்வீட் சட்னி, புதினா சட்னி, எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து விடுங்கள். ருபல் பூரி ரெடி.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடும் சூப்பர் டிஷ் இந்த பேல்பூரி. பச்சைக் காய்களைக் கலப்பதால் உல்லுக்குச் சத்தானதும் கூட. இதைச் செய்ததும் சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் நமத்து விடும்.
ஸ்வீட் சட்னி செய்வது சுலபம்
சிறு உருண்டை புளி, அரை கட்டி வெல்லம், 10 பேரீச்சம் பழம், சிறிது உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்குங்கள். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டுங்கள். ஸ்வீட் சட்னி ரெடி.
புதினா சட்னி செய்வது சுலபம்
1 கட்டு புதினா, 1 கட்டு மல்லி ஆகியவற்றைச் சுத்தம் செய்து 3 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் புதினா சட்னி தயார்.
ஆயுர்வேதம். காம்