பித்தவெடிப்பு

Spread the love

பித்தவெடிப்பு ஏற்படக் காரணம் என்ன?

கால்களின் சருமத்தின் உலர்ந்த தன்மை, குதிக்கால் தோல் தடித்துக் கடினமாகக் காணப்படுதல், நீண்ட நேரம் நிற்றல்,நடத்தல், தோலின் வளையும் தன்மை குறைவாக இருத்தல், குதிக்கால் மூடப்படாத செருப்பு வகைகளை அணிதல்,குறைந்த அளவு நீரை குடித்தல், குளிரான காலநிலை, தைரொயிட் சுரப்பி நோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய்களான“சொரியாசிஸ்” போன்ற நோய்கள்  நம் கால்களில் பித்த வெடிப்பை ஏற்படுத்தும் காரணிகளாகும்.

பித்த வெடிப்பை கட்டுப்படுத்துவதற்கு அல்லது முற்றிலுமாக குணமாக்குவதற்கு நாம், மென்மைத் தன்மையைக் கொடுக்கும் பாதணிகளை, கால்களை மூடக்கூடிய விதத்தில் சரியாக அணிதல் வேண்டும். அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும்.நம் கால்களைப் பல் துலக்கும் பிரஷ் கொண்டு தேய்த்து  நீரினால் கழுவி, நன்றாகத் துடைத்து, படுக்கைக்குப் போகுமுன் சிறிதளவு எண்ணெய்தேய்த்து கொண்டு , படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

பாதவெடிப்பை குணப்படுத்தும் அருமையான மருந்து!

ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்பட கூடியது தான் இந்த  பாதவெடிப்பு பிரச்னை. அதற்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது.

பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம். பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

இஞ்சி, சீரகம், தனியா, பனங்கற்கண்டு

செய்முறை

இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க விட வேண்டும்.

வடிக்கட்டி இந்த தேனீரை தொடர்ந்து குடித்துவர ரத்தத்தை சீர்செய்யும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்த உதவுகிறது.  தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.

குப்பைமேனியின் மூலம் பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

குப்பைமேனி, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி.

ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுத்து. இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும்.

பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களைஅழிக்கும்.


Spread the love
error: Content is protected !!