மூக்கடைப்பு, சளி, இருமல் போன்றவை குளிர் காலம், வெயில் காலம் என்று எல்லா நேரங்களிலும் பரவலாக காணப்படுகிறது. சீதோஷ்ண நிலை மாறுபாடு, ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு பயணிக்கும் பொழுது, தங்கும் பொழுது, கடுமையான குளிர், வெயில் போன்ற காரணங்களினால் சளி, தொண்டைக் கட்டு, தொண்டை வலி, தலை வலி, உடல் வலி போன்றவை ஏற்படுகிறது.
இதற்கு பல மூலிகைகள் குணப்படுத்த காணப்படினும் நமக்கு எளிதாக கிடைக்கக் கூடிய கற்பூரவல்லி மூலிகைச் செடியின் இலைகளைப் பயன்படுத்தலாம்.
நுரையீரல் பகுதியில் ஏற்படும் சுவாசக் கோளாறுகள், சளி கரைவதற்கும், தொண்டை வலி குணமாகவும் ஒரு சில மூலிகைகள் கலந்த சூரணத்தை தயாரித்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி அருந்தி வரலாம். அதற்கு தேவையான அளவுக்கு தூதுவளை இலை, ஆடாதொடை இலைப்பொடி, திரிகடுகு சூரணம் தலா கால் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொண்ட பின் தினசரி ஓரிரு வேளை அருந்தி வரலாம்.