எட்டு பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
காலையில் பாதாமின் தோல்களை அகற்றி விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் 20 கிராம் வெண்ணெய், சர்க்கரை சேர்க்கவும். காலையிலும், மாலையிலும் இரு வேளை இந்த விழுதை சாப்பிட்டு வர இருமல் குறையும். அதுவும் உலர்ந்த இருமலுக்கு இந்த விழுது நல்ல பலன் தரும்.
நல்ல மஞ்சள் பொடி 2 கிராம் எடுத்து சூடான பாலில் (1 கப்) கரைத்து தினமும் இரு வேளைகளில், 15 நாள் குடித்து வரவும்.
துளசி சாறு 5 மி.லி. எடுத்து 10 மி.லி. தேனில் கலந்து சாப்பிடவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.