இரண்டு கருமிளகு எடுத்து பொடியாகச் செய்து கொண்டு, இரண்டு துளசி இலைகளையும், அரை தேக்கரண்டி மஞ்சளும் கலந்து பொடி செய்து கொள்ளவும். மேலே தயாரிக்கப்பட்ட பொடியை கால் டம்ளர் தண்ணீர், கால் டம்ளர் பசும் பாலில் கலந்து நீர் சுண்டும் வரைக் காய்ச்சுங்கள். அதை ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினசரி மூன்று வேளை என தொடர்ந்து மூன்று நாட்கள் உட்கொண்டு வர குணம் கிடைக்கும்.
இஞ்சிச் சாறை இளநீரில் கலந்து குடித்து வர சளியும், இருமலும் நீங்கும். அதிமதுரச் சூரணத்தைப் பாலுடன் கலந்து காய்ச்சிக் குடித்தாலும் வறட்டு இருமல் நீங்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம அளவு எடுத்துக் கொண்டு, இம்மூன்றின் எடையளவு அதிமதுரம் சேர்த்துப் பொடித்து சூரணம் செய்து கொள்ளவும். ஒரு சிட்டிகை அளவு சூரணத்தைத் தினமும் மூன்று வேளை என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடாமல் உட்கொண்டு வர இருமல் குணமாகும்.
எருக்கன் வேரின் மேல் தோலை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். இருமல் வரும் போது மேற்கூறிய சூரணத்தை சிறிதளவு தேனில் குழைத்து, தினசரி இரண்டு, மூன்று முறை உட்கொள்ளவும்.
ஒரு டம்ளர் அளவு மோர் எடுத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி மிளகுப் பொடியும், வெல்லம் 30 கிராம் அளவும், சேர்த்துக் கலந்து தினசரி மூன்று வேளை அருந்தி வர மூக்கில் நீர் ஒழுகுதல் நின்று விடும்.
மேலும் தெரிந்து கொள்ள …
https://www.youtube.com/watch?v=laoXRGaVdFg&t=2s