ஸ்வீட் கார்ன் சாலட்
தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார்ன் – 2
உருளைக்கிழங்கு – 1
பனீர் – 50 கிராம்
கொத்தமல்லி – சிறிது
ட்ரஸ்ஸிங்கிற்கு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு பல் – 1
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
வினிகர் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 3 டீஸ்பூன்
செய்முறை
ட்ரஸ்ஸிங்கிற்கு கொடுத்துள்ள பெரிய வெங்காயம், பூண்டை தோலுரித்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள மற்ற பொருட்களைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஸ்வீட் கார்னை தண்ணீரில் உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் அதனை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பனீரைத் துருவிக் கொள்ளவும். ஒரு சாலட் பவுலில் வேக வைத்த உருளைக்கிழங்கு, ஸ்வீட் கார்ன், பனீர், கலந்து வைத்துள்ள ட்ரஸ்ஸிங் எல்லாவற்றையும் போட்டு நன்கு மிக்ஸ் பண்ணவும். கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
ஸ்வீட் கார்ன் சாட்
தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார்ன் – 2 கப்
உருளைக்கிழங்கு – 1
வெள்ளரிக்காய் – 1
கேரட் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 1
குடமிளகாய் – 1
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய மாங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
இனிப்பு சட்னி – 2 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
கிரீன் சட்னி – 1 டேபிள் ஸ்பூன்
ஓமப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
இனிப்பு சட்னி
சிறு உருண்டை புளி, அரை கப் வெல்லம், 10 பேரிச்சம் பழம், சிறிது உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
கிரீன் சட்னி
1 கப் புதினா, 1 கப் கொத்தமல்லி, 2 பச்சை மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் பழம், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
ஸ்வீட் கார்ன், உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். வெள்ளரிக்காய், கேரட்டின் தோலை சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கின் தோலை எடுத்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சோளம், உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், துருவிய மாங்காய், மிளகாய் பொடி, சீரகப் பொடி, சாட் மசாலா, இனிப்பு சட்னி, கிரீன் சட்னி, தேவையான உப்பு முதலிய எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிளறி ஒரு பரிமாறும் தட்டில் வைத்து அதன் மேல் ஒமப்பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பேபி கார்ன் சாலட்
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் – 5
முட்டைக்கோஸ் – 100 கிராம்
கேரட் – 1
குடமிளகாய் – 1
எலுமிச்சம் ஜுஸ் – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
எலுமிச்சம் ஜுஸ், ஆலிவ் ஆயில், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பேபி கார்னை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸ், குடமிளகாய், கேரட்டை ஒரே மாதிரியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் எல்லாவற்றையும் ஒரு பவுலில் போட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.